Published:Updated:

`` `ஃபிங்கர்டிப்'-ன் மர்ம ரகசியத்துக்கு காயத்ரி சிரிப்புதான் காரணம்!'' - இயக்குநர் ஷிவாகர்

Firstlook of Fingertip
Firstlook of Fingertip

"சோஷியல் மீடியா பற்றி நிறைய கதைகள் வந்திருக்கு. ஆனா, இந்தத் தொடர் அந்த ஆப்ஸ் பற்றியது இல்லை. அந்த ஆப்ஸ் எப்படி பேராசை, வன்மம், துரோகம், காம இச்சை, பழியுணர்வு போன்ற அடிப்படை மனித உணர்வுகள்மேல ஒரு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைப் பற்றியது."

`நம் விரல் நுனியில் இயங்கும் சமூகவலைதளச் செயலிகள் எல்லாம் எழுதப்பட்ட புரோகிராம்கள்தாம். அவற்றால் விளையும் நன்மைகளும், விபரீதங்களும் அவை உருவாக்குபவையல்ல. மாறாக அவற்றைப் பயன்படுத்தும் மனிதர்களின் உள்ளுணர்வுகள் விளைவிப்பவை' - இந்த விளக்கத்தை வைத்து ஐந்து வெவ்வேறு கதைகளை உள்ளடக்கிய `ஃபிங்கர்டிப்' இணையத் தொடரை உருவாக்கி, அதன் வெற்றிக்களிப்பில் இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஷிவாகர்.

Shivakar
Shivakar

ஜீ5 தளத்தில் வெளியாகியுள்ள இந்தத் தொடரை இயக்குநர் விஷ்ணுவர்தன் தயாரித்திருக்கிறார். அக்‌ஷரா ஹாசன், சுனைனா, காயத்ரி, அஷ்வின், மதுசூதன் ராவ் உட்பட பலர் இதில் நடித்திருக்கின்றனர். இது குறித்து அவரிடம் பேசினேன்.

வெப் சீரீஸ் எடுக்கணும்னுதான் வந்தீங்களா, எப்படி இந்த வாய்ப்பு கிடைச்சது?

Sunaina in Fingertip
Sunaina in Fingertip
Screenshot from the series

"அப்படியெல்லாம் இல்லை. சினிமாதான் எனக்குக் கனவு. விஷ்ணுவர்தன் சார்கிட்ட உதவியாளரா இருந்தேன். `பில்லா'வுக்குப் பிறகு அவர்கிட்ட சேர்ந்தேன். `ஆரம்பம்' ப்ரீ-புரொடக்‌ஷன் வரை அவர்கிட்ட வேலை பார்த்தேன். பிறகு சொந்தமா ஒரு கதை எழுதலாம்னு வேலை செஞ்சுக்கிட்டு இருக்கும்போதுதான் விஷ்ணு சார் என்கிட்ட வெப் சீரீஸ் பண்றதைப் பற்றிப் பேசினார். நான் என்கிட்ட இருந்த சில ஐடியாக்களை அவர்கிட்ட சொன்னேன். அவருக்கு இந்த ஐடியா ரொம்பப் பிடிச்சிருந்தது. அதுக்குப் பிறகு இதை விரிவா எழுதினேன். அந்த சமயம்தான் திரைக்கதை ஆசிரியர் நீலன் இதுக்குள்ளே வந்தார். ஆறு மாசம் நேரம் எடுத்துக்கிட்டு முழுசா எழுதி முடிச்சோம்."

சோஷியல் மீடியா ஆப்ஸ் பற்றியும், அதன் நன்மை தீமை பற்றியும் ஏற்கெனவே நிறைய படைப்புகள் இருக்கு. இதுல என்ன புதுசு?

"சோஷியல் மீடியா பற்றி நிறைய கதைகள் வந்திருக்கு. ஆனா, இந்தத் தொடர் அந்த ஆப்ஸ் பற்றியது இல்லை. அந்த ஆப்ஸ் எப்படி பேராசை, வன்மம், துரோகம், காம இச்சை, பழியுணர்வு போன்ற அடிப்படை மனித உணர்வுகள்மேல ஒரு ஆதிக்கம் செலுத்தி, பெரிய பிரச்னையில மாட்டிவிடுதுங்கிறதுதான் இதோட ஐடியா. இங்கே சிக்கல் அந்த உணர்வுகள் சம்பந்தப்பட்டதுதான்."

Vikatan

வெப் சீரிஸுக்கு இந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன, சினிமாவா எடுத்தா பல தரப்பட்ட ரசிகர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்குமில்லையா?

"ஒரு சினிமாவுக்குள்ளே நான் இத்தனை விஷயத்தையும் சொல்லியிருக்க முடியுமானு தெரியல. சென்ஸார், படைப்போட நீளம், பாட்டு... இப்படி சினிமாவுக்குப் பல கட்டுப்பாடுகள் இருக்கும். வெப் சீரிஸுக்கு அந்த எல்லை கிடையாது. இத்தனை கதாபாத்திரங்கள், அவங்களோட கதை, அவங்க வாழ்க்கையில சந்திக்கிற பிரச்னை, அதோட தாக்கம்... இப்படி எல்லாத்தையும் ஒரு சினிமாவுல பேசுறது கடினம். அதேசமயம் இந்தத் தொடரும் ஒரு குறிப்பிட்ட வயது ரசிகர்களுக்குனு இல்லாம, எல்லோரும் பார்க்கிற மாதிரி இருக்கும்."

Vikatan

காயத்ரியோட எபிசோடுக்கு சோஷியல் மீடியாவுல நல்ல வரவேற்பு. அதுக்குக் குறிப்பான காரணம், அவங்களோட நடிப்பு. காயத்ரியோட மறுபக்கத்தைக் காட்டியிருந்தீங்களே!

Gayathrie in Fingertip
Gayathrie in Fingertip
Screenshot from the series

"அதுக்குக் காரணம், அந்த கேரக்டரோட டைமென்ஷன்ஸ். அந்த எபிசோடை ரெண்டாவது முறையா பார்த்தா அதுல இருக்கிற உள்ளர்த்தங்கள் தெரியும். எல்லாத்துக்கும் காரணம் காயத்ரியோட சிரிப்புதான். எனக்கு அவங்க சிரிப்பு அவ்ளோ பிடிக்கும். இந்த கேரக்டருக்குள்ளே ஒரு மெல்லிசான கோடு இருக்கும். அந்த கேரக்டர் அதிகமா சிரிச்சுட்டா, அது காமெடியா போயிருக்கும். அப்படிப் போயிருந்தா கதையோட மொத்த தன்மையையும் அது பாதிச்சிருக்கும். ஆனா, காயத்ரி அதைச் சுலபமா நடிச்சி முடிச்சாங்க."

`அந்தாலஜி' ஜானர் தொடரா இருந்தாலும், எல்லாக் கதைகளுக்கும் சின்னச் சின்ன தொடர்புகள் இருக்கிற மாதிரி திரைக்கதை அமைச்சிருக்கீங்களே, ஏன்?

Akshara Haasan in Fingertip
Akshara Haasan in Fingertip
Screenshot from the series

"அடிப்படையில் இந்தக் கதைகள் எல்லாமே ஒரே உலகத்துல நடக்கிறதுதான். அதனால, அந்த ப்ளாட்-யூனிவர்ஸைக் காட்டணும்னுதான் அப்படித் திரைக்கதை அமைச்சிருக்கோம். தவிர, இப்படியான சின்னச் சின்ன லிங்க் இருந்தா அடுத்த எபிசோடைப் பார்க்கிறதுக்கான ஓர் ஆர்வம் உண்டாகும். பார்வையாளர்கள அடடே போடவைக்கும். அதனாலதான், அப்படி எழுதினோம்."

பயன்பாட்டுல இருக்கிற ஆப்ஸைத்தான் தொடர்ல காட்டியிருக்கீங்க. அப்புறம் ஏன் அதுக்கெல்லாம் கற்பனைப் பெயர். ஒரிஜினல் பெயரையே பயன்படுத்தியிருக்கலாமே?

அக்‌ஷரா ஹாசன் நடிக்கும் 'ஃபிங்கர்டிப்' வெப் சீரிஸ்!

"இந்தக் கதைகள் நடக்கிறது, ஒரு ஃபிக்‌ஷனல் உலகத்துல. அதனால, அங்கே எல்லாமே நம்ம கற்பனைதான். உண்மையான சோஷியல் மீடியா தளங்களில் பாசிட்டிவும் இருக்கு, நெகட்டிவும் இருக்கு. நாம நெகட்டிவிட்டியைப் பற்றிப் பேசும்போது எதுக்கு தேவையில்லாம அந்த ஆப்ஸைக் குற்றம் சாட்டணும், இந்தக் கதைகளே மனித எண்ணங்களால என்ன மாதிரியான எதிர்மறை விளைவுகள் வருது என்பது பற்றித்தானே. அதனாலதான் நாங்களே ஆப்ஸை உருவாக்கிக்கிட்டோம். தவிர, அப்படிப் பண்றதால நமக்கான படைப்புச் சுதந்திரத்தை எடுத்துக்கலாம்.

ஐந்து எபிசோடும் ஐந்து வண்ணங்களில் இருக்கக் காரணம் என்ன?

Ashwin in Fingertip
Ashwin in Fingertip
Screenshot from the series

"இந்த கலர் பேலட் எல்லாம் நான், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், ஆடை வடிவமைப்பாளர்னு எல்லோரும் பேசி முடிவெடுத்தது. ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு சோஷியல் மீடியா தளம் பற்றியது. உதாரணத்துக்கு, காயத்ரி வரும் எபிசோடு டேட்டிங் ஆப் மூலமா வர்ற பிரச்னையைப் பேசியிருக்கும். அதனால, அந்த ஆப், செட் பிராப்பர்ட்டி, உடைகள் எல்லாமே சிவப்பு நிறத்துல இருக்கும். அதேமாதிரி மதுசூதன் எபிசோடு பச்சை நிறத்துல இருக்கிற ஒரு மெசஞ்சர் ஆப். அதனால மொத்த எபிசோடும் ஒரு கிரீன் டோன்ல இருக்கும்."

அடுத்த கட்டுரைக்கு