Published:Updated:

இந்து கடவுள்களை அவமதிக்கிறதா அமேசானின் `தாண்டவ்' வெப் சீரிஸ்?!

இந்து கடவுள்களை அவமதிக்கிறதா 'தாண்டவ்'?
News
இந்து கடவுள்களை அவமதிக்கிறதா 'தாண்டவ்'? ( Screenshot from Amazon Prime Video )

கடந்த மாதம்தான் ஓடிடி தளங்களும் ஆன்லைன் செய்தி தளங்களும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சயிஃப் அலி கான், டிம்பிள் கபாடியா நடிப்பில் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் கடந்த 15-ம் தேதி வெளியான வெப் சீரிஸ் 'தாண்டவ்'. சுல்தான், பாரத் போன்ற படங்களை இயக்கிய அலி அப்பாஸ் ஜாஃபர் இந்தத் தொடரை இயக்கியுள்ளார். இந்தத் தொடரில் அமைந்திருக்கும் சில காட்சிகள் இந்து கடவுள்களை அவமதிப்பதாக இருப்பதாகவும், ஒடிடி தளங்களில் இது தொடர்ந்து நடக்கும் ஒரு விஷயமாக மாறி வருவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது பா.ஜ.க தரப்பு.

Tandav | தாண்டவ்
Tandav | தாண்டவ்

சிவனின் கையில் இருக்கும் திரிசூலம் மற்றும் சிறிய மேளம் போன்றவை தவறான முறையில் சித்திரிக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது. ''குறிப்பிட்ட அந்தக் காட்சிகள் நீக்கப்பட வேண்டும். அந்தக் காட்சியில் நடித்த முஹமது ஷிஷன் ஆயூப் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று மகாராஷ்டிரா பா.ஜ.க எம்எல்ஏ ராம்கதம் கோரிக்கை வைத்துள்ளார். ஓடிடி தளங்களுக்கு சென்சார் போர்டு நிறுவப்படவேண்டும் என்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பா.ஜ.க பாராளுமன்ற உறுப்பினரான மனோஜ் கோடக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் "ஓடிடி தளங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இந்த தளங்கள் ஆபாசம், வன்முறை, போதைப் பொருட்கள், வெறுப்புணர்வு போன்றவற்றால் நிரம்பியிருக்கின்றன. சில நேரங்களில் இந்துகளின் நம்பிக்கையைப் புண்படுத்துகின்றன. 'தாண்டவ்' வேண்டுமென்றே இந்து கடவுள்களைக் கேலி செய்கிறது, இந்துக்களின் நம்பிக்கைகளைக் காயப்படுத்த முயல்கிறது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"இதற்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அமேசானுக்கு கோரிக்கை விடுத்து இருந்தோம். ஆனால் அமேசானிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. எனவே இந்து மக்கள் அனைவரும் அமேசானைப் புறக்கணிக்கவேண்டும். அதன் பொருட்களை வாங்கக்கூடாது. அவர்கள் தங்களது தவற்றை உணரும்வரை நாம் அமேசான் இணையத்தளத்தில் ஷாப்பிங்கும் செய்யக்கூடாது."
மகாராஷ்டிரா பா.ஜ.க எம்எல்ஏ ராம்கதம்

இதைத் தொடர்ந்து இதுகுறித்து விளக்கம் கேட்டு அமேசான் ப்ரைம் வீடியோவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம். சமூக வலைதளங்களில் பலரும் 'தாண்டவ்' தடைசெய்யப்பட வேண்டும் என்றும் குரல் எழுப்பி வருகின்றனர். தொடர்ந்து சயிஃப் அலி கான் நடிக்கும் படைப்புகளில் இது நடப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர் பா.ஜ.க தரப்பினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த மாதம்தான் ஓடிடி தளங்களும் ஆன்லைன் செய்தி தளங்களும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ரைம் வீடியோ
ப்ரைம் வீடியோ

இந்நிலையில் தற்போது லக்னோவில் 'தாண்டவ்' தொடரின் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் மீது FIR பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 'தாண்டவ்' மத அடிப்படையில் பகைமை உணர்வை தூண்டும் வகையிலும், மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் விதத்திலும் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும் கூறி உத்தரப்பிரதேச அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இதனை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மீடியா ஆலோசகர் திரிபாதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமேசான் ப்ரைம் வீடியோவின் ஒரிஜினல் கன்டென்ட் ஹெட் அபர்ணா புராஹித், இயக்குநர் அலி அப்பாஸ் ஜாஃபர், தயாரிப்பாளர்கள் ஹிமான்ஷு கிருஷ்ணா மெஹ்ரா மற்றும் கவுரவ் சோலங்கி ஆகியோரின் பெயர்கள் இந்த FIR-ல் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து தற்சமயம் எதுவும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று சொல்லிருக்கிறது அமேசான் ப்ரைம் வீடியோ.