Published:Updated:

```ஃப்ரெண்ட்ஸ்' டிவி சீரிஸ் ரசிகர்களே... கூகுளில் இந்த மாற்றத்தையெல்லாம் கவனிச்சீங்களா?'' #Friends25

Friends
Friends

இன்றும்கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் 'ஃப்ரெண்ட்ஸ்' நடிகர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, `ஃப்ரெண்ட்ஸ் ரீ-யூனியன் எப்போது?' என்பதேயாகும். அந்தளவுக்கு `ஃப்ரெண்ட்ஸ்' சீரிஸுக்கு இப்போதும் வரவேற்பு உண்டு.

`ஃப்ரெண்ட்ஸ்' என்ற பெயரில் 25 வருடங்களுக்கு முன்பு இதே நாளில் "I ll be there for you" (நான் உனக்காக இருக்கிறேன்) என்று பாடிக்கொண்டே தொடங்கிய அந்த ஆறு நண்பர்களின் பத்து வருட நகைச்சுவைப் பயணம், இன்றளவிலும் பல இளைஞர்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது என்பதுதான், 'ஃப்ரெண்ட்ஸ்' டிவி சீரிஸின் வெற்றி! ஆம், இந்த டிவி சீரிஸ் முதன் முதலாக ஒளிபரப்பாகி இன்றோடு 25 வருடங்கள் ஆகின்றன.

ஃப்ரெண்ட்ஸ் வெப்சீரிஸ்
ஃப்ரெண்ட்ஸ் வெப்சீரிஸ்

நம்முடைய கேங்கில் இருக்கும் தூய்மைவாதிகளை மோனிகா என்றும், புலம்பல்வாதியை ராஸ் என்றும், கிறுக்கர்களை ஃபீபி என்றும், சாப்பாட்டு ராமனை ஜோயி என்றும், நகைச்சுவையாகப் பேசுபவரை சேண்ட்லர் என்றும், ஃபேஷனிஸ்டை ரேச்சல் என்றும் அழைத்திருப்போம். அத்தகைய தாக்கம் ஏற்படுத்தும் கதாபாத்திரங்களை நமக்கு அளித்தது, `ஃப்ரெண்ட்ஸ்' என்னும் இந்த அமெரிக்க டிவி சீரிஸ்தான்.

மார்தா காஃப்மேனும், டேவிட் க்ரேனும் எழுதிய 'ஃப்ரெண்ட்ஸ்' சீரிஸ் 1994-ல் தொடங்கி 2004-ம் ஆண்டுவரை பத்து சீஸன்களாக NBC-இல் வெளிவந்தது. தற்போது இதை நெட்பிளிக்ஸில் பார்க்கலாம். கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி அன்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் ட்விட்டரில் "'ஃப்ரண்ட்ஸ்' நெட்பிளிக்ஸைவிட்டுச் செல்கிறது" என்று பதிவிட்டபோது, பல நெட்டிசன்கள் கவலையோடு பதிலளித்தனர். இப்படி முதல் ஒளிபரப்பு முடிந்து 25 வருடங்கள் ஆகியும் ரசிகர்கள் மனதில் மறையாது இடம்பெற்றிருக்கிறது, `ஃப்ரெண்ட்ஸ்'.

Vikatan

இன்றும்கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வரும் 'ஃப்ரெண்ட்ஸ்' நடிகர்களிடம் கேட்கப்படும் முதல் கேள்வி, `ஃப்ரெண்ட்ஸ் ரீ-யூனியன் எப்போது?' என்பதேயாகும். அந்தளவுக்கு `ஃப்ரெண்ட்ஸ்' சீரிஸுக்கு இப்போதும் வரவேற்பு உண்டு. அதேபோல், அதில் இடம்பெறும் வசனங்களும் காமெடி கலாய்ப்புகளும் நெட்டிசன்ஸ் மத்தியில் இன்றும் பிரபலம். ஜேனஸின் 'Oh my God', ஜோயி சொல்லும் 'Joey doesn't share food', ஃபீபியின் 'They don't know that we know they know we know' இன்றும் ரசிகர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ரேச்சல் கண்டுபிடித்த `transponster', ராஸ் சொல்லும் `unagi' ஆகிய சொற்களும் பிரபலமாகின.

நகைச்சுவையை மட்டுமே கொடுத்ததா `ஃப்ரெண்ட்ஸ்' என்றால், இல்லை என்பதுதான் பதில். சமூகத்தில் நடக்கும் மாற்றங்களையும் எடுத்துரைத்தது. சான்றாக, குழந்தை பெற்றெடுப்பதில் ரேச்சலை `சிங்கிள் மத'ராகவும், ஃபீபியை வாடகைத் தாயாகவும், மோனிகாவைத் தத்தெடுப்பவராகவும் சித்திரித்தது. அதேபோல, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஜோயி மூலமாகவும், பிடித்த வேலையைத் தேர்ந்தெடுங்கள் என்று சேண்ட்லர் மூலமாகவும் எடுத்துரைத்தது.

#FRIENDS25
#FRIENDS25

`ஃப்ரெண்ட்ஸ்' ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் செயலை கூகுள் நிறுவனம் செய்திருக்கிறது. `ஃப்ரெண்ட்'ஸின் முக்கியக் கதாபாத்திரங்களின் பெயர்களைக் கூகுளில் தேடினால் வலதுபுறத்தில் தோன்றும் ஈஸ்டர் முட்டைகளில் இன்ப அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

ராஸ் கெல்லர் பக்கத்தில் உள்ள சோஃபாவில் க்ளிக் செய்தால், `Pivot' என்ற சத்தத்துடன் பக்கம் சாய்ந்து காணப்படுகிறது. மேலும், க்ளிக் செய்ய பக்கம் சாய்ந்து, சாய்ந்து அந்த சோஃபா உடைகிறது. ஃபீபியைப் பற்றிய பக்கத்தில் உள்ள கிடாரைக் க்ளிக் செய்தால், `ஸ்மெல்லி கேட்' பாடல் ஃபீபி குரலில் ஒலித்து, இசைத்து, அனிமேஷன் பூனை ஒன்று ஓடுகிறது. 'friends glossary' என்று தேடினால், `ஃப்ரெண்டஸ்' சீரிஸில் வந்த வார்த்தைகள் ஒவ்வொன்றாக விளக்கத்துடன் தோன்றுகின்றன.

Vikatan

வெவ்வேறு சமூகப் பின்புலங்களிலிருந்து வந்து, நீண்டகாலம் நண்பர்களாக இருக்கமுடியும் என்று `ஃப்ரெண்ட்ஸ்' சொல்லாமல் சொல்லிவிட்டது என்றே கூறலாம். இன்னும் பல வருடங்கள், கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு `ஃப்ரெண்ட்ஸ்' சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகமில்லை! உங்களுக்கு என்றேனும் வாழ்க்கை போரடிக்கிறது, ஒருவித இருத்தலியல் பிரச்னை இருக்கிறது என்றால் தாமதிக்காமல் 'ஃப்ரெண்ட்ஸ்'-க்கு நேரம் ஒதுக்குங்கள். இது உங்களில் ஒரு மாற்றத்தையும் உற்சாகத்தையும் கொண்டு வரலாம்.

அடுத்த கட்டுரைக்கு