Published:Updated:

ஜி.வி.பிரகாஷின் ஆன்மா கலந்த `ஆதலினால் காதல் செய்வீர்' டைட்டில் பாடல்... சர்ப்ரைஸ் கொடுத்த கலைஞன்!

பாடலை பாடியதற்காகத் தனக்கு கிடைக்கும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு ஒதுக்க இருப்பதாகச் சொன்னார் ஜி.வி.பிரகாஷ்.

ஜி.வி.பிரகாஷின் அந்த இசைப்பொழுது ரசனையும் ரம்யமுமாக இருந்தது. 'விகடன் டெலிவிஸ்டாஸ்' மற்றும் 'மோஷன் கன்டென்ட் குரூப்' இணைந்து வழங்கும், 'ஆதலினால் காதல் செய்வீர்' டிஜிட்டல் டெய்லி சீரிஸின் டைட்டில் பாடல் பாட‌ வந்திருந்தார் ஜிவிபி. வெப் சீரிஸ் ஒன்றுக்கு டைட்டில் பாடல் பாடுவது ஜி.வி.பி-யின் கரியரிலேயே இது முதல்முறையாம்!

"விகடனுடனான நட்பும் நீண்ட பந்தமும் கண்முன் வருகிற போது, சினிமா, சீரியல், வெப்சீரிஸ் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிற சிந்தனைக்கே நேரமிருக்காது" என்றபடியே மகிழ்ச்சியுடன் ரெகார்டிங்கைத் தொடங்கினார் ஜி.வி.பிரகாஷ்.

'ஹே நண்பா...

நேத்து நாளை கவலை இல்ல...

இன்று மட்டும் போதுமே!

ஹே நண்பா...

கடலும் மணலும் போலவே

சேர்ந்திருப்போம் எப்போதுமே..." எனத் தொடங்கிய டைட்டில் வரிகள்,

"பிரிவு கொஞ்சம் பிரியம் கொஞ்சம்

கனவு கொஞ்சம் கண்ணீர் கொஞ்சம்..."

எனக் கொஞ்சம் கொஞ்சமாய் பிரகாஷின் குரலில் கலக்க‌, உற்சாகமும் துள்ளலும் கொஞ்சம் கொஞ்சமாய் அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டது.

ஆதலினால் காதல் செய்வீர்
ஆதலினால் காதல் செய்வீர்
விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் வழங்கும் `ஆதலினால் காதல் செய்வீர்'!

"பாய்ஸ் கேர்ள்ஸ் பேதம்

அது தேவை இல்ல போடா

ஃப்ரண்ட்ஷிப்தானே வேதம்

நாம வாழ்ந்து களிக்கலாம் வாடா..."

எனத் தொடர்ந்த பாடல் கம்போசிங் 'ஆதலினால் காதல் செய்வீர்' என்றபடி செவிகளை மட்டுமல்ல மனதையும் வருடி நிறைவு பெற்றது. பாடி முடித்துக் கிளம்பத் தயாரானவர், நமக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார்.

இந்தப் பாடலை பாடியதற்காகத் தனக்கு கிடைக்கும் ஊதியத்தை, முதுகலை மாணவி ஒருவரின் படிப்புச் செலவுக்கு ஒதுக்க இருப்பதாகச் சொன்னார் ஜி.வி.பிரகாஷ்.
ஆதலினால் காதல் செய்வீர்
ஆதலினால் காதல் செய்வீர்

மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிற 'ஆதலினால் காதல் செய்வீர்' வெப் சீரிஸுக்கு இசை அமைத்திருக்கிறார் சந்தோஷ்.

இசையமைப்பாளர் சந்தோஷும், பாடல்களை எழுதியிருக்கும் நித்திஷும் விகடனால் பட்டை தீட்டப்பட்ட இளம் திறமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கும் இந்த 'ஆதலினால் காதல் செய்வீர்' டைட்டில் பாடல் ஆகஸ்ட் 4-ம் தேதி விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு