Published:Updated:

நாலுபேரு நாலுவிதமாப் பேசுறாங்க

இன்சைடு பில்ஸ் ப்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
இன்சைடு பில்ஸ் ப்ரைன்

web series

நாலுபேரு நாலுவிதமாப் பேசுறாங்க

web series

Published:Updated:
இன்சைடு பில்ஸ் ப்ரைன்
பிரீமியம் ஸ்டோரி
இன்சைடு பில்ஸ் ப்ரைன்

சினிமாக்களுக்காகத் திரையரங்குகள் செல்லும் காலம் கொஞ்சம் கொஞ்சமாக அருகிவரும் சூழலில், மக்கள் நெட்டில் இருக்கும் வெப் சீரிஸில் மூழ்கும் காலமிது. புதுப்படமா டிவில போடறப்ப பார்த்துக்கலாம் என்பது போய், அமேசான் பிரைமில் வர்றப்ப பார்த்துக்கலாம் எனக் காலம் சற்று மாறிவிட்டது. சமீபத்தில் வெளியான, ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் வெப் சீரிஸ் ஒரு பார்வை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தி ஃபேமிலி மேன்

குடும்பத்துக்குத் தெரியாமல் என்.ஐ.ஏ உளவுத்துறையின் சிறப்பு அதிகாரியாக இருக்கும் ஸ்ரீகாந்த் திவாரி எப்படி தன் குடும்பத்தையும், தீவிரவாதிகளையும் கையாள்கிறார் என்பதுதான் ‘தி ஃபேமிலி மேன்.’ பணியில் லெஜெண்டு, வீட்டில் ன எல்லோரிடமும் திட்டு வாங்கும் டம்மி பீஸ் வேடம் மனோஜ் பாஜ்பாய்க்கு. தன் அனுபவ நடிப்பால் இரண்டையும் அசால்ட்டாகச் செய்கிறார் மனிதர். ஸ்ரீகாந்த் திவாரியின் மனைவி சுச்சியாக ப்ரியாமணி. வித்தியாச வெரைட்டி உணர்ச்சிகள் காட்டி ஸ்கோர் செய்கிறார்.

web series
web series

தவறுதலாக மூன்று இஸ்லாமிய இளைஞர்களைச் சுட்டுவிடுகிறது காவல்துறை. தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரிக்க ஆரம்பிக்கிறார்கள் போலீஸ். அந்தக் குற்றவுணர்ச்சியில் துவண்டுபோகிறார் ஸ்ரீகாந்த் திவாரி. ஆனால், அதுகுறித்த எந்தவித சலனமும் அற்று இயங்குகிறது காவல்துறை. ‘என்னப்பா எல்லாப் பிரச்னையும் முடிஞ்சுடுச்சு போல. காஷ்மீர் முழுக்க டூரிஸ்ட்டா இருக்காங்க. ஆனா, ஏன் எல்லோரும் யூனிபார்ம்ல இருக்காங்க?’ என திவாரி கேட்கும் கேள்வியில், போகிற போக்கில் காஷ்மீரின் உண்மைநிலையைப் பட்டவர்த்தனமாகப் போட்டுடைக்கிறது இந்த ஃபேமிலி மேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாலிவுட் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே இந்தத் தொடரை இயக்கியுள்ளனர். ஸ்பை த்ரில்லர், பேமிலி டிராமா என இரட்டை டிராக்கில் பயணிக்கும் திரைக்கதையில் ஸ்பை த்ரில்லர்தான் வெற்றிபெறுகிறது.

பசுவின் பெயரால் அனுதினமும் இந்த தேசத்தில் நடக்கும் அத்துமீறல்கள், சந்தேகக் கண் கொண்டு பார்க்கப்படும் சிறுபான்மையின இளைஞர்கள், போலி என்கவுன்டர்கள், காஷ்மீர் விவகாரம் என ஒரு சினிமா பேசத் தயங்கும் சர்ச்சைக்குரிய விஷயங்களை ஒளிவுமறைவு இல்லாமல், பேசியதற்காகவே இந்த பேமிலி மேனைப் பாராட்டலாம்.

தி பாய்ஸ்

சூப்பர்மேன் போன்ற ஹோம்லேண்டர், வொண்டர்வுமன் போல குயின் மேவ், ஃப்ளாஷ் போல ஏ-டிரெய்ன், அக்வாமேன் போல டீப், சூப்பர்கேர்ள் போல ஸ்டார்லைட்... விதவிதமான சூப்பர்ஹீரோக்கள் இங்கும் இருக்கிறார்கள். ஊருக்குள் பல பிரச்னைகளும் இருக்கின்றன. ஆனால், அவர்கள் எவரும் ‘அவெஞ்சர்ஸ்’ போலவோ ‘ஜஸ்டிஸ் லீக்’ போலவோ உலகைக் காக்கும் முனைப்புடன் செயல்படுவதாய்த் தெரியவில்லை. சொல்லப்போனால் அந்தப் பிரச்னைகளில் பலவற்றுக்கும் இவர்களே நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருக்கிறார்கள்.

web series
web series

வாட் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் கைப்பாவையாக இவர்கள் செயல்படுவதுதான் இதற்குக் காரணம். இவர்களால் பாதிக்கப்பட்ட சாமானியர்கள் ‘தி பாய்ஸ்’ என்ற பெயரில் ஒன்றிணை கிறார்கள்.அதீத சக்திகள்கொண்ட சூப்பர்ஹீரோக்களை, வலியை மட்டுமே சுமந்து திரியும் சாதாரண மனிதர்கள் படை என்ன செய்துவிட முடியும்? ஆனால், இந்த பாய்ஸ் கெத்து காட்டுகிறார்கள். சூப்பர்ஹீரோக்களுக்கும் அவர்களை இயக்கும் வாட் நிறுவனத்துக்கும் கிலியைக் கிளப்புகிறார்கள். கிடைத்த வாய்ப்பு களைக்கொண்டு அவர்கள் செய்யும் அட்டகாசங்கள்தான் திரைக்கதை. அதுதான் இந்த வித்தியாச சூப்பர்ஹீரோக்கள் கதையின் பெரும்பலம்.

வெப் சீரிஸ் என்பதால் சென்சாருக்கு எல்லாம் பயப்படாமல் ரத்தக்களரியாகத் துவம்சம் செய்கிறார்கள். அதுவும் அப்பாவி ஹூக், அடாவடி ஃப்ரென்சி, மாஸ் பில்லி என பாய்ஸ் டீமிலிருக்கும் ஒவ்வொருவரின் பாத்திர வார்ப்பும் செம! சீரிஸைத் தயாரித்திருக்கும் சோனி நிறுவனம் ஒரு காமிக்ஸை அடிப்படையாக வைத்து இதைத் தயாரித்திருந்தாலும் ஆங்காங்கே DC காமிக்ஸைப் பகடி செய்வதுபோல கதை நகர்கிறதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. பரம்பரைப் பகையை இப்படித் தீர்க்கிறதோ மார்வெல்? எப்படியிருந்தாலும், அமேசான் பிரைமில் வெளியாகும் ‘தி பாய்ஸ்’ன் 2-ம் சீசனுக்கும் ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங்!

இன்சைடு பில்ஸ் ப்ரைன்

மக்குக் கணினி என்னும் கருவி பரிச்சயமான நாள் முதல் நம்முடன் பயணிக்கும் ஆப்பரேடிங் சிஸ்டம் மைக்ரோசாஃப்ட். மில்லினியம், XP, விஸ்டா, விண்டோஸ் 7, விண்டோஸ் 10 எனப் பெயர் மாறிக்கொண்டே இருந்தாலும் அவற்றின் தந்தை, தாய் எல்லாமே பில்கேட்ஸ்தான். உலகின் நம்பர் 1 பணக்காரர் என்றால் எப்போதும் நம் மனதில் பளிச்சென தோன்றும் பெயர் பில் கேட்ஸ். இப்போது அவர் நம்பர் ஒன் இல்லை. மைக்ரோசாப்ட்டின் சி.இ.ஓ இல்லை. ஆனால், இன்றும் தனது மனிதாபிமானச் செயல்பாடுகளுக்காகத் தொடர்ந்து ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறார் பில்கேட்ஸ். பில் & மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேசன் மூலமாக எண்ணற்ற சேவைகளை மூன்றாம் உலக நாடுகளில் செய்துவருகிறது இவர்களது டீம். இப்படியான பில்லின் மூளைக்குள் என்ன இருக்கும் என அவரை வைத்து டாக்குசீரிஸை எடுத்திருக்கிறது நெட்ப்ளிக்ஸ்.

web series
web series

பில் கேட்ஸின் சிறுவயது சம்பவங்கள் முதல், படிப்பு, மைக்ரோசாப்ட் புரட்சி, மெலிண்டா கேட்ஸுடனான காதல் திருமணம், தற்போது அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவனம் வரை அனைத்தையும் மூன்று மணி நேர டாக்குசீரிஸாக எடுத்திருக்கிறார் இயக்குநர் டேவிஸ் கக்கென்ஹெய்ம்.

பில் கேட்ஸ் வளரும் நாடுகளின் மிகப் பெரிய பிரச்னையாகக் கருதுவது, அங்கிருக்கும் குறைபாடான கழிவு மேலாண்மையைத்தான். அனைத்து நாட்டு கம்பெனிகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார். ஒரு கக்கூஸ் செய்ய வேண்டும். குறைந்தபட்ச தண்ணீர் அல்லது தண்ணீரே இல்லாமல் தன்னைத்தானே ஒவ்வொரு முறையும் அந்தக் கக்கூஸ் சுத்தம் செய்ய வேண்டும். அதற்குத் தேவையான தண்ணீரைக் கழிவில் இருந்தே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கிடைக்கும் சுத்தமான தண்ணீரை மனிதர்கள் அன்றாடத் தேவைக்குப் பயன்படுத்த வேண்டும் என பில்லின் கனவு பெரியது. அதை எப்படி சாத்தியப்படுத்தினார் என்பதைச் சொல்கிறது முதல் எபிசோடு. பில் கேட்ஸின் மூளைக்குள் என்ன இருக்கிறது எனப் பேசவேண்டிய ஒரு தொடர், பில் கேட்ஸ் எப்படி நம்பர் ஒன் ஆனார், அவரின் போட்டியாளர்கள், தற்போது பில் கேட்ஸின் நிறுவனத்துக்கு இருக்கும் பிரச்னைகள் போன்றவற்றைத் தெளிவாய் ஒதுக்கிவிட்டு பிற விஷயங்களை மட்டுமே பேசியிருப்பது மைனஸ்.

மணி ஹெய்ஸ்ட்

திருச்சி லலிதா ஜுவல்லரியில் நடந்த கொள்ளைதான் தற்போதைய டிரெண்டிங். மாஸ்க் அணிவது, எதைப் பற்றியும் கவலையில்லாமல் பொறுமையாகத் திருடுவது என சிசிடிவி காட்சிகள் நமக்குக் காட்டிய விஷயங்கள் எல்லாமே புதுசு. ஆனால், அந்தக் குற்றவாளி தனக்கான இன்ஸ்பிரேஷன் எனச்சொன்னது ஒரு ஸ்பானிஷ் தொடர் என்பதுதான் ஹைலைட். அந்தத் தொடர் நெட்ப்ளிக்ஸில் வெளியான ‘மணி ஹெய்ஸ்ட்.’

web series
web series

வங்கியில் கொள்ளையடிக்க ஒரு குழு திட்டமிடுகிறது. ஆனால், இவர்கள் கொள்ளையடிக்கப்போவது கரன்ஸி இருக்கும் வங்கியை அல்ல, கரன்ஸி அச்சடிக்கும் ஸ்பெயின் நாட்டின் ராயல் மின்ட் ஆஃப் ஸ்பெயின் என்னும் ரிசர்வ் வங்கியை. அந்தக் குழுவுக்குத் தலைமை யேற்கும் புரொபசர் என்பவர் வெளியே இருந்து இவர்கள் அனைவரையும் இயக்குகிறார்.

சுற்றியிருக்கும் காவல்துறைக்கே அவர்கள் என்ன செய்யக் காத்திருக்கிறார்கள் என்பது சில நாள்களுக்குப் பின்தான் புரிகிறது. நமக்குத்தேவையான நோட்டுகளை நாமே சொந்தமாக ப்ரின்ட் செய்து எடுத்துக்கொள்ள லாம் என்பதுதான் இவர்களது திட்டம். அதில் ஏற்படும் பலிகளும், தியாகங்களும்தான் இந்த வெப் சீரிஸின் கதை.

வெப் சீரிஸில் வரும் பாசிச எதிர்ப்பு பாடலான ‘பெல்லா சியோ’, ஐரோப்ப கண்டம் முழுக்க வைரல் ஹிட். அதே போல், தொடரில் வரும் மாஸ்க்குக்கும் வரலாறு இருக்கிறது. இப்படி வரலாற்றையும் நடப்பு அரசிலையும் இணைத்துப் பேசி ஆச்சர்யப்படுத்துகிறது ‘மணி ஹெய்ஸ்ட்.’

கொள்ளையர்களை நாயக பிம்பமாகக் காட்டியதற்காக இது உலகளாவிய வரவேற்பைப் பெறவில்லை. மாறாக, பணக்காரர்களுக்கும், அரசின் தேவைக்கும் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் அரசு, ஏன் ஒரு சாமான்யனுக்காக மாற்றிக்கொள்ளக் கூடாது என்பதைப் பேசி க்ளாப்ஸை அள்ளுகிறது இந்த சீரிஸ்.பாலிவுட்டில் இதை ஷாருக் கானை வைத்து இயக்க இருக்கிறார்கள் என்பது லேட்டஸ்ட் ஹாட் டாக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism