Published:Updated:

MEME BOYS விமர்சனம்: ஒரு மீமுக்கு அக்கப்போரா - எப்படியிருக்கிறது காலேஜ் கலாட்டா நிறைந்த வெப்சீரிஸ்?

Meme Boys |மீம் பாய்ஸ் ( Sony liv )

அருண் கௌசிக் இயக்கியிருக்கும் இந்தத் தொடர் பல இடங்களில் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. ஆனால், கதையில் சுத்தமாக இல்லாத நம்பகத்தன்மை ஒரு கட்டத்துக்கு மேல் நம்மைச் சோதிக்க வைத்துவிடுகிறது.

MEME BOYS விமர்சனம்: ஒரு மீமுக்கு அக்கப்போரா - எப்படியிருக்கிறது காலேஜ் கலாட்டா நிறைந்த வெப்சீரிஸ்?

அருண் கௌசிக் இயக்கியிருக்கும் இந்தத் தொடர் பல இடங்களில் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. ஆனால், கதையில் சுத்தமாக இல்லாத நம்பகத்தன்மை ஒரு கட்டத்துக்கு மேல் நம்மைச் சோதிக்க வைத்துவிடுகிறது.

Published:Updated:
Meme Boys |மீம் பாய்ஸ் ( Sony liv )
பல்கலைக்கழகம் ஒன்றில் மீம் போட்டிக்காக ஜாலியாக நால்வர் மீம் போட, அது எங்கெல்லாம் அவர்களைக் கொண்டு சென்றுவிடுகிறது என்பதை ஜாலியாகச் சொல்கிறது சோனி லைவில் வெளியாகியிருக்கும் `MEME BOYS' வெப் சீரிஸ்.

ஆதித்யா பாஸ்கர், சித்தார்த், ஜெயந்த், நம்ரிதா நால்வரும் அபூர்வா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணாக்கர்கள். ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமாக நடக்கும் மீம் ஃபெஸ்ட் போட்டிக்கு அப்ளை செய்வதும், அவுட்டாவதும் ஆதித்யா பாஸ்கரின் வாடிக்கை. இந்த முறை எப்படியும் கப் அடிக்கும் முனைப்பில் நண்பன் ஜெய்ந்த் உடன் இணைந்துகொண்டு புதிய அணியை உருவாக்குகிறார். கம்ப்யூட்டர் உபயமான நம்ரிதா இவர்கள் டீமில் இணைந்துகொள்கிறார்.

Meme Boys |மீம் பாய்ஸ்
Meme Boys |மீம் பாய்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யாரை நக்கலடிக்கலாம் எனக் குழு ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கத் தொக்காகச் சிக்குகிறார் புதிய டீனாக கல்லூரிக்குள் காலடி எடுத்துவைக்கும் குரு சோமசுந்தரம். அவர் எல்லாவற்றிலும் அதீத ஒழுக்கம் எதிர்பார்க்க, அவரை வைத்தே கல்லூரிக்கான 'expectation versus reality' வீடியோவை வெளியிட்டு ஹிட் அடிக்கிறது மீம் பாய்ஸ் குழு. யார் அந்த மீம் பாய்ஸ் என குரு சோமசுந்தரம் சிலரைக் கூட்டு சேர்த்துக்கொண்டு ஒரு பக்கம் தேட, இன்னொரு பக்கம் அவரின் குழுவுக்குத் தண்ணிக் காட்டிவிட்டு ஜாலி கேலி மீம்ஸ் போட்டு விளையாடுகிறது மீம் பாய்ஸ். இறுதியில் யார் அந்த மீம் பாய்ஸ், மீம் பாய்ஸ் குழு போட்டியில் வென்றதா, குரு சோமசுந்தரத்துக்கு என்ன ஆனது என்பதாக நீள்கிறது இந்த வெப் சீரிஸ்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சூப்பர் டீலக்ஸில் நமக்குப் பரிச்சயமான ஜெய்ந்தும், 96ல் பரிச்சயமான ஆதித்யா பாஸ்கரும் நடித்திருக்கிறார்கள். "எல்லோருக்கும் ஒரு பேக் ஸ்டோரி இருக்கறப்ப, பேக் ஸ்டோரிக்கே ஃபேமஸான எனக்கு ஒரு பேக் ஸ்டோரி இருக்காதா..." என தன் சினிமா வாழ்க்கையே ஆங்காங்கே நக்கலும் அடிக்கிறார் ஆதித்யா. காமெடி தொடர்களில் இக்கால இளைஞர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஆரம்பித்துப் பல விஷயங்களைக் கவனித்து தொடருக்குள் இணைத்திருக்கிறார்கள். அதனாலேயே கல்லூரி வாழ்க்கை என்றாலே "பீரியட் பிலிமா பாஸ்" என்னும் அனுபவத்தைத் தராமல் நிகழ்கால கல்லூரிக்குள் சென்றுவந்த அனுபவத்தைத் தருகிறது. கல்லூரிக்குள் ஒன்றுமே தெரியாத நல்லாசிரியர் அப்பாவி அம்மாஞ்சி ஆசிரியராகப் படவா கோபி. க்ளைமாக்ஸ்தான் கொஞ்சம் 'படவா' ரகம்.

Meme Boys |மீம் பாய்ஸ்
Meme Boys |மீம் பாய்ஸ்

கல்லூரி ஓனரின் சொற்படியும் நடக்க வேண்டும். அதே சமயம், தன் ஈகோவும் சிதையாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற இரு பிரச்னைகளுக்குள் சிக்கித் தவிக்கும் நபராக குரு சோமசுந்தரம். இதுபோக அவரே தன் வீட்டிலிருக்கும் மகன் செய்யும் அட்ராசிட்டிகளையும் சமாளிக்க வேண்டும். என்ன அவரின் கதாபாத்திர வார்ப்புதான் 'Sex Education' சீரிஸ் பிரின்சிபாலை நினைவுக்குக் கொண்டு வருகிறது. இவர்களுக்கு இடையே நமக்குப் பரிச்சயமான இன்னொரு முகம் டீ மாஸ்டராக வரும் பிரசன்னாவினுடையது. கதை சொல்லியாக சப்ஸ்கிரிப்சன் கேட்டு லைக்ஸ் அள்ளுகிறார். DUDE ராகுல் என வில்லன் முகம் காட்டும் நபரின் கதாபாத்திரம் கொஞ்சம் அதிகமாகவே யதார்த்தத்தை மிஞ்சி செல்வதால் அதனோடு ஒன்ற முடியவில்லை.

அருண் கௌசிக் இயக்கியிருக்கும் இந்தத் தொடர் பல இடங்களில் சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கிறது. ஆனால், கதையில் சுத்தமாக இல்லாத நம்பகத்தன்மை ஒரு கட்டத்துக்கு மேல் நம்மைச் சோதிக்க வைத்துவிடுகிறது. காமெடி தொடரின் சில எமோஷனல் காட்சிகளையும் காமெடியாகவே படைப்பாளிகள் அணுகியிருப்பதால், சில காட்சிகளுக்குப் பரிதாப்படுவதா அல்லது இதுவும் காமெடிதானா என்கிற குழப்பத்திலேயே கடக்க வேண்டியதிருக்கிறது.

Meme Boys |மீம் பாய்ஸ்
Meme Boys |மீம் பாய்ஸ்
நம்பகத்தன்மை லாஜிக் மீறல்கள் போன்றவற்றைக் கழித்துவிட்டுப் பார்த்தால் இக்கால 2கே கிட்ஸோ, ஜென் Z தலைமுறையோ இந்தத் தொடருக்கு நிச்சயம் லைக் பட்டனை க்ளிக் செய்வார்கள் என நம்பலாம்.