Published:Updated:

Money Heist Review: சிறப்பா முடிச்சுட்டீங்க புரொபசர்... ஆனாலும் இதையெல்லாம் தவிர்த்திருக்கலாமே?!

Money Heist
News
Money Heist

மணி ஹெய்ஸ்ட் என்பது ஒரு கொள்ளையடிக்கும் 'ஹெய்ஸ்ட்' தொடர் என்பதைக் கடந்து அதிகாரத்தைக் கேள்வி கேட்பது என்பதுதான் இதன் அடிநாதம்.

மணிஹெய்ஸ்ட் தொடர் ஒருவழியாய் முடிந்திருக்கிறது. மூளை விளையாட்டுக்களால் ஆரம்பித்த தொடர் கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, பின் மீண்டும் மெல்ல கொழுத்து கழுதையாகும் தறுவாயில் முடிக்கப்பட்டிருக்கிறது.
Money Heist
Money Heist

முதலிரண்டு சீசன் பண வேட்டை என்றால், அடுத்த இரண்டு சீசன்கள் தங்க வேட்டை என வந்திருக்க வேண்டும். ஆனால் அதை மாற்றி மூன்று சீசன்கள். அதிலும் மூன்றாவது சீசனின் பாதியை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டார்கள். அதில் முழுக்கவே துப்பாக்கிச் சத்தம் மட்டும்தான் இருந்தது. சரி, இறுதி அத்தியாயங்களிலாவது இழந்த சுவாரஸ்யத்தை மீட்குமா என்கிற ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தால், ஓரளவுக்கு அதை எட்டிப் பிடிக்க முயன்றிருக்கிறார்கள். அதற்கே தொடரின் கிரியேட்டர்களைப் பாராட்ட வேண்டும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

SKIP RECAP (வேண்டாம் என நினைப்பவர்கள் அடுத்த ஒரு பத்தியை ஸ்கிப் செய்து கொள்ளலாம்)

அலிசியா சியாராவுக்கு புரொபசரே பிரசவம் பார்க்கிறார். இந்தப் பக்கம் இரு கும்பலும் மூர்க்கமாய் சண்டை போட்டுக்கொண்டிருக்க, இன்னொரு கொரில்லா படையை உள்ளே இறக்குகிறார் தமாயோ. தொடரின் வாய்ஸ் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான டோக்கியோ வேறு வழியின்றி அந்த அபாய முடிவை எடுக்க, தொடர் பாதியில் முடிந்துபோகிறது.

இந்த பாகம்

தங்கத்தை வெளியே எடுக்க வேண்டும். அலிசியா சியாரா என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதைக் கண்டறிய வேண்டும். தமாயோவிடமிருந்து தப்பிக்க வேண்டும். குழுவை இதற்கு மேலும் எந்தவித சேதாரமும் இல்லாமல் மீட்க வேண்டும். இவற்றுக்கு எல்லாம் மேல், செத்துப் போன பெர்லின் கதையை ஏன் இன்னும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை வலுவாகச் சொல்ல வேண்டும். இப்படியான பல சிக்கலான டாஸ்குகளுடன் ஆரம்பித்தது ஐந்தாவது சீசனின் ஆறாவது எபிசோடு.

Money Heist
Money Heist
முதலிரண்டு எபிசோடுகளில் மீண்டும் பெர்லின் கதைகளும், அலிசியா சியாரா ~ புரொபசர் ஆடுபுலி ஓட்டமும் தொடங்க, ரைட்டேய் என குட்பை சொல்லலாம் என யோசித்த வேளையில் அடுத்தடுத்து ட்விஸ்ட்டுகள், சுவாரஸ்யங்கள் என பழைய பன்னீர்செல்வமாக ஃபார்முக்குத் திரும்பியிருக்கிறது 'மணி ஹெய்ஸ்ட்'.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்போதும் குகைக்குள்ளேயே பதுங்கிக்கிடக்கும் புரொபசர், இந்தமுறை கெத்தாக, நான் வெறும் சாணக்கியர் அல்ல, நேரடி சண்டையும் செய்வேன் என கோதாவில் இறங்குகிறார். வென்றுவிட்ட மமதையில் இருக்கும் தமாயோ இந்தப் புதுப் பிரச்னைகளை எப்படிக் கையாள்கிறார், அலிசியா சியாரா என்ன செய்கிறார், தங்கம் என்ன ஆனது என்ற கேள்விகளுக்கான பதிலை அசத்தலாக சொல்லி முடிந்திருக்கிறது மணி ஹெய்ஸ்ட்.

Money Heist
Money Heist

மணி ஹெய்ஸ்ட் என்பது ஒரு கொள்ளையடிக்கும் 'ஹெய்ஸ்ட்' தொடர் என்பதைக் கடந்து அதிகாரத்தைக் கேள்வி கேட்பது என்பதுதான் இதன் அடிநாதம். ஆனால், இரு சீசன்களில் முடித்திருக்க வேண்டிய பெர்லின் பிளாஷ்பேக்கை 'சொல்கிறேன் வா' என ஏகத்துக்கும் இழுத்துவிட்டார்கள். நல்லவேளையாக நைரோபியின் மகன் எப்படி இருக்கிறார் என்றெல்லாம் செல்லவில்லை என்பதை ஆறுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆனால் சொல்லியிருக்கலாமோ...

இதிலும் லாஜிக் மீறல்கள் எக்கச்சக்கம் என்றாலும், எப்படித் தப்பிக்கப் போகிறார்கள் என்கிற கேள்விக்கான பதில் சற்று சுவாரஸ்யமாகச் சென்றதால் அதையெல்லாம் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளலாம். ஆனாலும், ஒரு காலில் ஓட்டையுடன் புரொபசர் ஊர் முழுக்க சுற்றுவதுதான் நெருடல். அதுவும் அந்த குப்பைக் கூடையில் தப்பிப்பதற்குப் பதில் வேறு ஏதாவது யோசித்திருக்கலாம்.

எது எப்படியோ, அடுத்ததாக பெர்லின் என்றொரு ஸ்பின் ஆஃப் எடுக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறது நெட்பிளிக்ஸ். அதை சீக்கிரம் எடுத்து வெளியிடுமாறு விழாக்கமிட்டியை கேட்டுக்கொள்கிறோம். நன்றி.