Published:Updated:

Ms. Marvel Episode 1: `ஏ நண்பா...' `லிங்கா' ரெஃபரன்ஸுடன் இது நம்ம ஊரு மார்வெல்!

Ms Marvel

Ms. Marvel சீரிஸின் ஓர் இடத்தில், பின்னணியில் எஸ்.பி.பி-யின் மிரட்டல் குரலில் ரஹ்மான் இசையமைத்த 'லிங்கா' படத்தின் பாடல் ஒலிக்கிறது.

Ms. Marvel Episode 1: `ஏ நண்பா...' `லிங்கா' ரெஃபரன்ஸுடன் இது நம்ம ஊரு மார்வெல்!

Ms. Marvel சீரிஸின் ஓர் இடத்தில், பின்னணியில் எஸ்.பி.பி-யின் மிரட்டல் குரலில் ரஹ்மான் இசையமைத்த 'லிங்கா' படத்தின் பாடல் ஒலிக்கிறது.

Published:Updated:
Ms Marvel
தெற்கு ஆசிய குடும்பங்களின் முகமாக வளரும் ஒரு பெண் சூப்பர்ஹீரோவின் வாழ்க்கைதான் Ms Marvel. டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று அதன் முதல் எபிசோடு வெளியாகியிருக்கிறது.

மிகவும் கண்டிப்பான இஸ்லாமிய குடும்பத்தில் வளர்கிறார் கமலா கான். கேப்டன் மார்வெல்லின் தீவிர விசிறியான கமலா முழுக்க முழுக்க சஞ்சரிப்பது ஃபேன்டஸி உலகில்தான். யார் என்ன பேசினாலும், கமலா ஃபேன்டஸி உலகிற்குள் சென்றுவிடுவார். தன் தோழர் ப்ரூனோவுடன் இணைந்து வீட்டுக்குத் தெரியாமல் 'அவெஞ்சர்ஸ் கான்' (Avengers Con) நிகழ்வுக்குச் செல்ல திட்டமிடுகிறார். அப்போது அங்கு நடக்கும் களேபரங்கள்தான் முதல் எபிசோடின் கதை. இனி வாரா வாரம் ஒரு எபிசோடு என வெளியாக இருக்கிறது.

Ms Marvel
Ms Marvel

மார்வெல் படங்கள் எப்போதும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்தும். தானோஸின் முடிவுக்குப் பின்னர், மீதமிருக்கும் ஹீரோக்களுக்கான கதைகள் என்பது அவ்வப்போது பெரிய திரையில் வருகிறது. அதே சமயம், 'லோகி', 'ஃபால்கன்', 'வாண்டா விஷன்', 'ஹாக் ஐ' என வெப் சீரிஸைத் தொடர்ச்சியாக வெளியிட்டு அசத்திவருகிறது மார்வெல். காமெடிக்கும் பிரமாண்டத்துக்கும் மட்டுமே பெரிய அளவில் முக்கியத்துவம் தரும் மார்வெல், வெப் சீரிஸ் ஒவ்வொன்றிலும் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இந்த மிஸ். மார்வெல்லில் நமக்கு பரிட்சையமான பல விஷயங்களை இணைத்திருக்கிறார்கள்.

குறிப்பாக, லைசென்ஸுக்கான சோதனைக்குச் செல்லும் கமலா, வழக்கம் போல அதைச் சொதப்பிவிடுகிறார். அப்போது பின்னணியில் எஸ்.பி.பி.யின் மிரட்டல் குரலில் ரஹ்மான் இசையமைத்த லிங்கா பட பாடல் ஒலிக்கிறது. அதே போல உருது மொழி படமான அர்மானில் இருந்து 'கோ கோ கொரினா' பாடலைப் பயன்படுத்தியிருந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் கோக் ஸ்டூடியோவில் இதே பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் முதல் பாப் பாடல் என சொல்லப்படும் 'கோ கோ கொரினா' கேட்கவே அவ்வளவு எனெர்ஜெட்டிக்காக இருக்கிறது.

தெற்கு ஆசிய குடும்பங்களின் பாதிப்பில் எடுக்கப்படும் எல்லா ஹாலிவுட் குடும்பங்களைப் போலவே இதிலும் கண்டிப்பான குடும்பம் என்பது கிளீஷேவாகத்தான் இருக்கிறது. அவந்திகா நடித்த 'ஸ்பின்', மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்த 'Never Have I Ever', அனிமேஷன் படங்களான 'Turning Red' எனப் பலவற்றில் இதே விஷயங்களை நாம் காண முடியும். அதை இந்த மிஸ். மார்வெல்லிலும் காண முடிகிறது. இதற்கு முன்பு வெளியான மார்வெல் வெப் சீரிஸைவிடவும் இது நமக்கு அதிக நெருக்கமானதாக இருப்பதற்குக் காரணமும் அதுவே.

ஜெர்ஸி நகரத்து கமலா கான் உட்பட அடுத்தடுத்து வரவிருக்கும் இந்த குட்டி சூப்பர் ஹீரோக்களை வைத்துத்தான் அடுத்த ஆண்டு 'தி மார்வெல்ஸ்' (The Marvels) படம் வெளியாகும் என்பதால், மார்வெல் ரசிகர்கள் கட்டாயம் இதைப் பார்ப்பது அவசியம். தமிழ் டப்பிங்கிலும் இந்தத் தொடர் வெளியாகியிருக்கிறது.