Published:Updated:

`இந்த இரண்டு நாள்கள் நெட்ஃபிளிக்ஸ் இலவசம்!'- எப்படி, எதில் பார்க்கலாம்? #StreamFest

Netflix
Netflix ( Image Credit: Freepik )

SD (standard-definition) தரத்தில் மட்டுமே உங்களால் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யமுடியும். மற்றபடி சாதாரணமாக எப்படி நெட்ஃப்ளிக்ஸ் இயங்குமோ அப்படியேதான் இந்த இரண்டு நாள்களிலும் இயங்கும்.

இந்தியாவின் பிரபல ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ஃப்ளிக்ஸ் மக்களுக்குப் புதிய சலுகை ஒன்றை அறிவித்திருக்கிறது. வருகிற டிசம்பர் முதல் வார இறுதி, அதாவது டிசம்பர் 5 மற்றும் 6-ம் தேதி இந்தியாவில் யார் வேண்டுமானாலும் நெட்ஃப்ளிக்ஸில் அவர்களுக்கு அபிமான படங்கள் மற்றும் தொடர்களைப் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். இதை ஸ்ட்ரீம் ஃபெஸ்ட் (Stream Fest) என அழைக்கிறது.
Netflix Original Series
Netflix Original Series

இதற்கு ஒன்றும் பெரிதாகச் செய்யத் தேவையில்லை. Netflix.com/StreamFest என்ற தளத்தில் பதிவுசெய்தால் போதும். கிரெடிட்/டெபிட் கார்டு என பேமன்ட் சார்ந்த எந்த கூடுதல் விவரமும் கேட்கப்படாது. தற்போது இருக்கும் ரூ.499 சந்தாவில் இருக்கும் வசதிகள் உங்களுக்கு இரண்டு நாள்களுக்குத் தரப்படும். டிசம்பர் 5 தொடங்கும் நள்ளிரவில் தொடங்கி டிசம்பர் 6 இரவு முடியும் வரை நிகழ்ச்சிகளை உங்களால் ஸ்ட்ரீம் செய்யமுடியும்.

சினிமா விகடன்: பாலிவுட் 2021

SD (standard-definition) தரத்தில் மட்டுமே உங்களால் வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யமுடியும். மற்றபடி சாதாரணமாக எப்படி நெட்ஃப்ளிக்ஸ் இயங்குமோ அப்படியேதான் இந்த இரண்டு நாட்களிலும் இயங்கும். உங்களால் தனியாக புராஃபைல்கள் உருவாக்க முடியும். விருப்பமான படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை 'My List'-ல் சேர்த்து உங்கள் விருப்பத்திற்கேற்ற நெட்ஃப்ளிக்ஸின் பரிந்துரையைப் பெறமுடியும். ஆண்ட்ராய்டு/ஐஓஎஸ் மொபைல் ஆப், பிரவுசர், டிவி, கேமிங் கன்சோல் என எந்த சாதனத்திலும் நீங்கள் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யலாம்.

நெட்ஃப்ளிக்ஸ்
நெட்ஃப்ளிக்ஸ்

முன்பு நெட்ஃப்ளிக்ஸ் வைத்திருந்து இப்போது அதை ரத்து செய்தவர்களும் இந்த சலுகையைப் பெறலாம். இது இல்லாமல் இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸில் இலவசப் பிரிவு ஒன்றும் இருக்கிறது. இதை பலரும் கவனித்திருக்க மாட்டீர்கள். மிகவும் குறைந்த அளவில் சில படங்களும் சீரிஸும் இந்தப் பிரிவில் இடம்பெற்றிருக்கும். netflix.com/in/watch-free என்ற தளத்தில் அவற்றை உயர்தரத்தில் நீங்கள் ஸ்ட்ரீம் செய்யலாம். பிரவுசரில் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். மொபைல் ஆப்களில் இது இருக்காது.

இந்த ஸ்ட்ரீம் ஃபெஸ்ட் சலுகை குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே வழங்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. அதனால் இலவசமாக நெட்ஃப்ளிக்ஸ் பார்க்க நினைப்பவர்கள் சீக்கிரம் பதிவுசெய்வது நல்லது.
அடுத்த கட்டுரைக்கு