Published:Updated:

மேற்கே போகும் ரயில்!

WEB SERIES
பிரீமியம் ஸ்டோரி
WEB SERIES

WEB SERIES

மேற்கே போகும் ரயில்!

WEB SERIES

Published:Updated:
WEB SERIES
பிரீமியம் ஸ்டோரி
WEB SERIES

கதை என்னன்னா

குளோபல் வார்மிங் உச்சம் தொட்ட ஓர் அற்புத தருணத்தில் உலகம் மொத்தமாய் உறைந்துபோகிறது. ஒரு ரயில். ஒரே ஒரு ரயிலை இயக்கச் செய்கிறார் வில்ஃபோர்டு. பனிப் பாறைகளைக் குடைந்து 1001 பெட்டிகளுடன் அது உலகம் முழுக்கச் சுற்றி வருகிறது. ரயில்தான் உலகம் என்றானபின், அதிலிருக்கும் பணக்காரர்- ஏழை பிரச்னை, உயிர் பிழைக்க வலியவர்கள் எடுக்கும் முடிவுகள் போன்றவற்றைப் பேசுகிறது ‘ஸ்நோபியர்சர்.’ 1980களில் வெளியான பிரெஞ்சு கிராஃபிக் நாவல்தான் அடிப்படை. அதன், அடுத்தடுத்த பாகங்களை வெவ்வேறு நபர்கள் எழுதினார்கள். உலகத்தை ஒரு ரயிலாக உருவகப்படுத்தி, சோசலிசத்தை மிக்ஸ் செய்து மனிதனின் ஆசைகளைப் பேசுவதுதான் ஒன்லைன். இதைத்தான் திரைப்படமாகவும் வெப் சீரிஸாகவும் எடுத்திருக்கிறார்கள்.

மேற்கே போகும் ரயில்!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மேற்கே போகும் ரயில்!

ஸ்நோபியர்சர் ( படம் )

ஆஸ்கர் வென்ற ‘பாராசைட்’ படம் மூலம் உலக வைரலான இயக்குநர் பொங் ஜூன் ஹோ, இந்த நாவலை மையமாக வைத்து 2013-ம் ஆண்டு ஒரு படம் எடுத்தார். கொரிய இயக்குநரின் முதல் ஆங்கிலப்படம் என்பதால் படத்துக்கு ஏகப்போக வரவேற்பு. படமும் செம ஹிட். கடைசிப் பெட்டிகளுக்குத் தள்ளப்பட்ட ஏழைகளுக்கும், முதன்மைப் பெட்டிகளில் நிறைந்திருக்கும் பணக்காரர்களுக்குமான யுத்தம் தான் படம். பணக்காரர்களுக்கு சேவை செய்ய ஏழை மக்களைக் காவல்துறை கொண்டு ஒடுக்கி வைக்கிறார்கள். புரட்சி வெடிக்கிறது. ஒவ்வொரு புரட்சியிலும் மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். இறுதியாக வில்ஃபோர்டை சந்திக்கிறான் நாயகன். அதற்கு அடுத்து ஒரு பெரிய ட்விஸ்டுடன் வாழ்வின் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதுடன் படம் முடியும்.

மேற்கே போகும் ரயில்!

ஸ்நோபியர்சர் ( வெப் சீரிஸ்)

துப்பறியும் நிபுணர் ஆண்டிரி லேடன் ரயிலின் கடைசிப் பெட்டியில் இருக்கிறார். அங்கு ஏழைகளுக்கு நிஜ உலகில் இருக்கும் சூழல்தான் ரயிலுக்குள்ளும் நிலவுகிறது. வசதி படைத்தவர்களுக்கு ஏற்ப, பெட்டிகள் I, II, III கிளாஸ் எனப் பிரிக்கப்படுகிறது. ரயிலில் நடக்கும் கொலைகளைக் கண்டுபிடிக்க லேடனைப் பணக்கார தளத்துக்குள் அனுமதிக்கிறாள் மெலனி கேவில். புதிர்களைக் கண்டுபிடிக்கும் சாக்கில், புரட்சிக்காரர்களுக்கான விடியலையும் இணைத்து சாதிக்க முயல்கிறான் லேடன். லேடன் கைகளுக்கு ரயில் வசப்படுகிறது. அதே சமயம் எல்லோருக்கும் எல்லாம் என்னும் நல்லெண்ணத்தை மனிதனின் ஆசை வழக்கம்போல் தின்று விழுங்குகிறது. அடுத்து என்ன என்ற சஸ்பென்ஸுடன் அடுத்த சீசனுக்குப் புறப்படுகிறது ரயில்.

ப்ளஸ்

படத்தில் இல்லாத ரயிலின் சுவாரஸ்யங்களை வெப் சீரிஸில் பார்க்க முடிகிறது. ரயிலுக்குள் ரயில், தளம் மாற நடக்கும் ரத்தச் சண்டைகள், கொலைகள், போதை மருந்துகள் எனப் படத்துக்கும் வெப் சீரிஸுக்கும் திரைக்கதை முற்றிலுமாக வேறுபடுகிறது. இரண்டாம் சீசனுக்கான லீடு பக்காவாக செட் செய்திருக்கிறார்கள்.

மேற்கே போகும் ரயில்!

மைனஸ்

படத்தின் நாயகன் கேப்டன் அமெரிக்கா கிறிஸ் ஈவன்ஸ் என்பதாலேயே, அதில் இருந்த ஆர்வம், இதில் புதிய முகங்கள் என்பதால் மிஸ்ஸிங்.

மேற்கே போகும் ரயில்!

டோன்ட் மிஸ்

தொடரைப் பார்க்கத் தூண்டும் ஒரே ஸ்டார், அதற்குத் திரைக்கதை எழுதிய பொங் ஜூன் ஹோ தான். அதனால், அவரது இந்தப் படங்களைப் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க

ஓக்ஜா ~ நெட்ஃபிளிக்ஸ்

ஸ்நோபியர்சர் ~ நெட்ஃபிளிக்ஸ்

மெமரீஸ் ஆஃப் மர்டர் (கொரிய திரைப்படம்)

மேற்கே போகும் ரயில்!

உப தகவல்

அடுத்த சீசனும் கொரோனாவுக்கு முன்பே எடுத்துவிட்டார்களாம். கொரோனா காலத்துக்குள்ளேயே அதுவும் வெளியாகி விடும்.