Published:Updated:

ஒன்று மட்டும் 18++... மற்றவை 18+... எப்படி இருக்கிறது நெட்ஃபிளிக்ஸின் 'பிட்ட கதாலு' ஆந்தாலஜி?!

'பிட்ட காதலு' அந்தாலஜி

பெண்களை சரி, தவறு எனும் நிலைப்பாடுகளுக்குள் வரையறை செய்யாமல், அவர்களின் காதல், காமம் பற்றிப் பேசுகிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஆந்தாலஜி படமான 'பிட்ட கதாலு'.

ஒன்று மட்டும் 18++... மற்றவை 18+... எப்படி இருக்கிறது நெட்ஃபிளிக்ஸின் 'பிட்ட கதாலு' ஆந்தாலஜி?!

பெண்களை சரி, தவறு எனும் நிலைப்பாடுகளுக்குள் வரையறை செய்யாமல், அவர்களின் காதல், காமம் பற்றிப் பேசுகிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் ஆந்தாலஜி படமான 'பிட்ட கதாலு'.

Published:Updated:
'பிட்ட காதலு' அந்தாலஜி
ராமுலா
தருண் பாஸ்கர்
ராமுலா | Pitta Kathalu
ராமுலா | Pitta Kathalu

தெலுங்கானாவின் வறண்ட கிராமத்தில் கிளை விரித்து பறக்கிறது ஒரு டிக்டாக் ஜோடி. ஆதிக்க சாதி ஆணுக்கும், வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் வரும் இந்த காதல் என்ன ஆனது என்பதையும், அதை அரசியலில் துளிர்விடத்துடிக்கும் ஒரு பெண் எப்படி பயன்படுத்திக்கொள்கிறார் என்பதையும் பற்றிப் பேசுகிறது 'ராமுலா'. 'பெல்லி சூப்புலு' இயக்குநரின் திரைப்படம். தத்தக்கா பித்தகா ஆங்கில வார்த்தைகளாலும், காதலையும், காமத்தையும் குழப்பிக்கொள்ளும் நாயகனாலும் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறது படம். தனக்கான அங்கீகாரம் தொடர்ந்து மறுக்கப்படும் காட்சிகளில் லஷ்மி மஞ்சு சிறப்பாக நடித்திருக்கிறார். காட்சிகளின் அடர்த்தியை நிறைக்கிறது விவேக் சாகரின் பின்னணி இசை. தான் முன்னேறே எதையும் எப்படியும் செய்யும் பெண் எனும் கருத்தியலும், இறுதிக் காட்சி தரும் ஷாக் வேல்யூவும் தான் 'ராமுலா'வை மற்ற படங்களில் இருந்து தனித்துக் காட்டுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
மீரா
நந்தினி ரெட்டி
மீரா | Pitta kadhalu
மீரா | Pitta kadhalu

பேரழகி மனைவியும், வயது மூத்த சந்தேகக் கணவனும் என்பதுதான் 'மீரா'வின் ஒன்லைன். எழுத்தாளர் மீராவுக்கு (அமலா பால்) அவரின் அழகும், எழுத்தும் தான் முதலீடு. ஒட்டுமொத்தமாய் அமலா பாலின் முன் விழுகிறார்கள் ஆண்கள். வயது ஏற ஏற சந்தேகமும் கணவர் ஜகபதி பாபுவுக்குள் ஏறிக்கொண்டேபோகிறது. ஒரு கணவன், மனைவியை அடிமைப்படுத்தி வைக்க கர்ப்பம்தான் தீர்வு எனும் முடிவை எடுக்கிறார். அதையெப்படி அமலா பால் முறியடிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை. அமலா பாலுக்கு மற்றுமொரு கனமான, அசாத்திய வேடம். சிறப்பாகச் செய்திருக்கிறார். சிரித்துக்கொண்டே இருப்பதாகட்டும், காய் நகர்த்தல்களின் மூலம் ஜகபதிபாபுவை விழ வைப்பதாகட்டும், அமலா கிளாஸ். ராதிகா ஆனந்த் எழுதியிருக்கும் இக்கதை, சில வாரங்களுக்கு முன்னர் வெளியான நலனின் 'ஆடலும் பாடலும்' ஆந்தாலஜி படத்தையும், மாப்பாஸானின் 'யூஸ்லெஸ் பியூட்டி' சிறுகதையையும் நினைவுபடுத்தினாலும், திரைக்கதையாலும், அமலா பாலின் நடிப்பாலும் கை தட்ட வைக்கிறாள் 'மீரா'.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

xLife
நாக் அஷ்வின்
xLife | Pitta kathalu
xLife | Pitta kathalu

சயின்ஸ் ஃபிக்ஷன் என்னும் களத்தில் இப்போதெல்லாம் எப்படியாவது ஒரு படம் வெளியாகிவிடுகிறது. அது பெரும்பாலும், நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருக்கும் பிளாக் மிரர் ஆந்தாலஜியை நினைவுபடுத்துகிறது என்பதுதான் இதிலிருக்கும் சோகம். அந்தப் பாவத்திலிருந்து நாக் அஷ்வினின் Xlife-ம் தப்பவில்லை. விர்ச்சுவல் ரியாலிட்டி கேம் ஒன்றை உருவாக்கி, மனிதர்களை அவர்களின் நற்குணங்களில் இருந்து சில காலத்துக்கு ஓய்வெடுக்க வைக்கிறார் சஞ்சித் ஹெக்டே. உலகம் முழுக்க பில்லியன் வாடிக்கையாளர்கள் என பில்ட் அப்பில் வாழும் சஞ்சித்தை எப்படி வழிக்கு கொண்டுவருகிறார் அங்கு வேலை செய்யும் ஸ்ருதி என்பது தான் Xlife சொல்லும் சயின்ஆ ஃபிக்‌ஷன் கதை. 'மகாநடி' திரைப்பட இயக்குநரிடம் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சினிமா. அழகழகாய் உடைகள், வித்தியாசமான விர்ச்சுவல் ரியாலிட்டி போன்றவற்றால் அட போட வைக்கும் xLife , அதன் ஆதி கால ட்விஸ்ட்டால் 'போங்க பாஸ் ' சொல்ல வைக்கிறது

பிங்கி
சங்கல்ப் ரெட்டி
பிங்கி | Pitta kathalu
பிங்கி | Pitta kathalu

நான்கு குறும்படங்களில் பார்ப்பவரைகளை ஏகத்துக்கும் குழப்பி , நான்-லீனியரில் கதை சொல்கிறது பிங்கி. எழுத்தாளர் ஒருவரின் வெற்றி வரை காத்திருக்காமல், ̀விக்ரமன் ' பட காதலி போல் குட்பை சொல்லிவிடுகிறாள் மனைவி. புதிய கணவன், புதிய சூழல் என வேறு வாழ்க்கைக்குள் வந்த மனைவியின் வாழ்க்கையின் குறுக்கேவருகிறது முன்னாள் எழுத்தாளர் கணவனின் வெற்றி. மீண்டும் அந்த விவாகரத்து வாழ்க்கையை விவகாரமாக தொடர முயல்கிறார். எழுத்தாளரின் இரண்டாவது மனைவியும் இதை எப்படி ( லைட்டா சுத்துதா ப்ரோ) எடுத்துக்கொள்கிறார் என்பதுதான் மீதிக் கதை. காதல் மட்டுமல்ல ஆசையும் அழிவற்றதுதான் எனும் தத்துவத்தை சொல்ல முயன்றிருக்கிறார் சங்கல்ப். ஆனால், கதையும், நடிகர்களின் போதாத நடிப்பும், 90'ஸ் கிட்ஸை 'சிங்கிளாவே இருந்துக்கறோம்டா சாமி' என எண்டு கார்டு போட வைக்கிறது.

பாலிவுட் இயக்குநர்களை வைத்து 'லஸ்ட் ஸ்டோரிஸ்' வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நெட்ஃபிளிக்ஸ், அப்படியே தெலுங்கு வெர்ஷன் ஒன்றும் தமிழ் வெர்சன் ஒன்றும் செய்ய முடிவு செய்தது. அதன் தமிழ் வெர்ஷன்தான் 'பாவக் கதைகள்'. தெலுங்கு வெர்ஷனுக்கு 'பிட்ட கதாலு' என்கிற பெயரைப் பார்த்ததும், வேற அர்த்தம் போல என நினைத்துக்கொண்டிருக்க, அதன் அர்த்தம் சின்ன கதைகளாம். 'லஸ்ட் ஸ்டோரிஸ்'-ல் ஏற்படுத்திய பிரமிப்பையும், அதிர்ச்சியையும் தமிழ், தெலுங்கு படைப்புகள் ஏற்படுத்தியவில்லை. நான்கு கதைகளும் தமிழ் ஆடியோவிலேயே இருப்பதால், நெட்ஃபிளிக்ஸில் தாராளமாக இவற்றைப் பார்க்கலாம். மீரா மட்டும் 18++. மற்றவை 18+.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism