Published:Updated:

“படிக்கிறதைவிட நடிக்கிறது பிடிக்கும்!”

 அனிகா
பிரீமியம் ஸ்டோரி
அனிகா

‘குயின்’ வெப்சீரிஸ்

“படிக்கிறதைவிட நடிக்கிறது பிடிக்கும்!”

‘குயின்’ வெப்சீரிஸ்

Published:Updated:
 அனிகா
பிரீமியம் ஸ்டோரி
அனிகா

“படிக்கிறதைவிட நடிக்கிறது பிடிக்கும்!”

‘குயின்’ வெப்சீரிஸில் சக்தி சேஷாத்ரியின் இரண்டு பருவங்களைப் பிரதிபலிக்கும் இரண்டு பாத்திரங்கள் நடித்தவர்கள் அனிகா சுரேந்திரனும், அஞ்சனாவும். இரண்டு ராணிகளிடமும் பேசினோம். முதலில் அனிகா...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ ‘குயின்’-க்கு முன்னாடி வரைக்கும் எந்த வெப் சீரிஸ்லயும் நடிச்சது இல்லை. ஆனால் கெளதம் மேனன் சாரோட யூனிட் எனக்குப் பழக்கமான ஒண்ணுதான். இருந்தும் இதுல ஒரே நேரத்துல ரெண்டு இயக்குநர்களுடன் வேலை பார்த்தது புது அனுபவம். என்னோட போர்ஷன் மூணு எபிசோடு மட்டும்தான். ஆனா இந்த எபிசோடுகள் ஒரு படத்துக்கு சமம்.

“படிக்கிறதைவிட நடிக்கிறது பிடிக்கும்!”

நான் மலையாளப் பொண்ணுங்கிறதனால எனக்குத் தமிழ் வசனம் பேசுறது எப்போவும் கஷ்டமா இருக்கும். இதுல அதிர்ஷ்டவசமாக இங்கிலீஷ் டயலாக்ஸ் அதிகமா இருந்தது. அதனால நடிக்குறது ஈஸியா இருந்தது. தமிழ் மற்றும் இங்கிலீஷ்ல நேரடியா ஷூட் பண்ணுனாங்க. மலையாளம் மற்றும் பெங்காலியில டப் பண்ணுனாங்க. நான் நடிச்ச வெப்சீரிஸ் நாலு மொழிகளில் ரிலீஸானது செம ஹேப்பியா இருந்தது. முக்கியமா, இந்த சீரிஸ் கதையை என்கிட்ட சொன்னப்போ அஞ்சனா மேம், ரம்யா மேம் இவங்களுடைய போர்ஷனையும் சேர்த்துதான் கெளதம் சார் சொன்னார். அதனால கதையை உள்வாங்கிட்டு முழுமையா நடிக்க முடிஞ்சது.”

``கெளதம் மேனன் படங்களில் நடித்திருக்கிறீர்கள். ஆனால் அவருடனே நடித்தது எப்படியிருந்தது?’’

“என் வாழ்க்கையில முக்கியமான நபர் கெளதம் மேனன். என்னோட மென்டர், காட்பாதர்னு சொல்லலாம். அவர்கூட நடிக்கிறப்போ கொஞ்சம் பதற்றமா இருந்தது. ஆனால் அவர் என்னை இயல்பாக்கினார்.

அனிகா
அனிகா

நான் நடிச்ச மூணு எபிசோடும் என்னோட முகபாவனை, பாடி லாங்குவேஜ் அனைத்தும் ஒரே மீட்டர்ல டிராவல் ஆகியிருக்கும். இதை எப்படி சரியா கையாளணும்னு எனக்கு அவர்தான் சொல்லிக்கொடுத்தார். இதை பெரிய வாய்ப்பா நினைக்கிறேன்!”

“படிச்சிக்கிட்டே எப்படி நடிப்பையும் கையாள்றீங்க?”

“இப்போ பத்தாவது படிச்சிருக்கிறதனால போர்டு எக்ஸாம் இருக்கு. அதனாலேயே இந்த வருஷம் எந்தப் படத்துலயும் கமிட்டாகலை. தவிர, இந்த வெப்சீரிஸும் 2018 டிசம்பரில்தான் ஷூட்டிங் நடத்தினாங்க. அதனால எந்த விதத்துலயும் என்னோட படிப்பு பாதிக்கல. மலையாளத்துல நிறைய படங்களில் நடிச்சிருந்தாலும் ஸ்கூலில் என் நண்பர்கள் எல்லாரும் என்னைப் பெரிய ஸ்டாரா பார்க்க மாட்டாங்க. என்னோட படங்கள் பார்த்துட்டு சிலர் விமர்சனங்கள் சொல்லுவாங்க. இருந்தும் எனக்கு எப்போவும் படிக்கிறதவிட நடிக்கிறது ரொம்பப் பிடிக்கும். ‘குயின்’ சக்தி மாதிரியில்லை. நான் பிடிச்சுதான் நடிக்கிறேன்.”

“ ‘குயின்’ ஷூட்டிங் ஸ்பாட்டின்போது ரம்யா கிருஷ்ணனை நேர்ல பார்த்தீங்களா?”

“என்னோட ஆல்டைம் ஃபேவரைட் ரம்யா கிருஷ்ணன் மேடம். கெளதம் சார் ஆபீஸுக்குப் போனப்போ அவங்களை நேர்ல பார்த்தேன். ரொம்ப கம்பீரமா இருந்தாங்க. என்னை அறிமுகப்படுத்திக்கிட்டேன். நல்லாப் பேசுனாங்க. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவங்களை ஒரு முறை பார்த்தேன். அப்போ எப்படி நடிக்கணும்னு சில டிப்ஸ் கொடுத்தாங்க.”

“எனக்குத்தான் பொறுப்பு அதிகம்!”

இரண்டாம் ராணி அஞ்சனாவுடன் ஓர் உரையாடல்...

“சின்ன வயசு சக்திக்கும் அரசியல்வாதி சக்திக்கும் இடையில இருக்கிற பரிணாம வளர்ச்சி உங்க காட்சிகளில்தான் நடக்கும். அது ரொம்பக் கஷ்டமா இருந்திருக்குமே?”

“கண்டிப்பா. ஆனா நான் அதை ஒரு சுமையா பார்க்கல. காரணம், ஒரு நடிகரோட கடமை அதுதானே. என்னோட முதல் காட்சியே ஜி.எம்.ஆரைச் சந்திக்கிற காட்சிதான். அங்க இருந்துதான் சக்தியோட வாழ்க்கையே மாறும்.

“எனக்குத்தான் பொறுப்பு அதிகம்!”
“எனக்குத்தான் பொறுப்பு அதிகம்!”

அதே மாதிரி அனிகாவோட காட்சிகள்ல இருந்த சில கதாபாத்திரங்கள் திரும்ப என்னோட காட்சிகள்லயும் வரும். உதாரணத்துக்குப் பிங்கி, அலமேலு எல்லாரும் திரும்ப கதைக்குள்ள வருவாங்க. அதே மாதிரி காதல் காட்சிகள் எல்லாம் என்னோட பகுதியில தான் வரும். அதுதான் சக்திய மனசளவுல பலவீனமாக்கி, அந்த வலியில இருந்து மீண்டு வர மாதிரி மாத்தும். இத்தனை உணர்வுகளையும் காட்டவேண்டிய பொறுப்பு இருந்தது. எனக்கு முன்னாடியும் எனக்குப் பிறகும் கதையில என்ன நடக்கும்னு சொல்லித் தந்தது இந்தத் தொடருக்குத் திரைக்கதை வசனம் எழுதின ரேஷ்மா.”

“கரியரோட தொடக்கத்திலேயே ஒரு பயோபிக்கில் நடிக்கிறதில் நல்லது, சவால்னு ரெண்டுமே இருக்குமே?”

``ஒருத்தரோட வாழ்க்கை வரலாற்றுல நடிக்கிறதுல நல்லது நிறைய இருக்கு. நம்ம திறமை என்ன, நம்மால என்ன முடியும்னு எல்லாமே காட்டுறதுக்கான வாய்ப்பு. எனக்கும் ‘குயின்’ அப்படித்தான். ஆனா அதே நேரத்துல, இதுக்கு அடுத்து நான் நடிக்கப்போற படங்கள்ல என்னோட தோற்றம், நடிப்பு எல்லாமே ரொம்ப கவனமா பார்க்கப்படும்.

அஞ்சனா
அஞ்சனா

சக்தி சேஷாத்ரி பிம்பத்துல இருந்து நான் வெளிய வருவது ரொம்ப சவாலா இருக்கும். என்னோட அடுத்த படம், இல்லைனா தொடர் அப்படிப் பட்டதா இருக்கணும்னு விரும்புறேன். இது ஒரு பீரியட் கதை. அதனால, அடுத்து நடிக்கிறது இந்த ரெட்ரோ களத்துல இல்லாம முழுக்க வேற விதமான களத்துலயும், என்னோட கதாபாத்திரமும் சக்தியில இருந்து முழுக்க வேற மாதிரியும் இருக்கவேண்டியது அவசியம்னு நினைக்கிறேன். எல்லாத்துக்கும் மேல, எந்தக் கதாபாத்திரமா இருந்தாலும், ரொம்ப ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் எழுதப்பட்ட கதாபாத்திரமாகவும் இருக்கவேண்டியது ரொம்ப முக்கியம்.”

“அனிகா, ரம்யா கிருஷ்ணன் நடிச்ச காட்சிகளை ஷூட்டிங்கின்போது நீங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சதா?”

“நான் ‘குயின்’ முழுசா பார்த்தது டப்பிங் சமயத்துலதான். அதுவரை எனக்கு அவங்க ரெண்டு பேரும் எப்படி நடிச்சிருந்தாங்கன்னுகூடத் தெரியல. ஆனா ரேஷ்மா எனக்கு எல்லாக் காட்சிகளும் ஏன் இப்படி இருக்கு, இதுக்கு என்ன காரணம், இந்தக் கேரக்டருக்கும் சக்திக்கும் என்ன சம்பந்தம்னு எல்லாமே சொல்லிக்கொடுத்தாங்க. எனக்கான இன்புட்ஸ் எல்லாமே இப்படி வந்ததுதான். அதுல இருந்து நான் சக்தியா இருந்தா எப்படி இருப்பேனோ அப்படித்தான் கெளதம் சார் என்னை நடிக்கச் சொன்னாரு. அப்படித்தான் நடிச்சிருக்கேன். என்கிட்ட மட்டுமல்ல, மூணு பேர்கிட்டயுமே இதைத்தான் சொல்லி நடிக்க வெச்சிருக் காங்கன்னு நம்புறேன். அனிகாவும் என்னையோ ரம்யா மேமையோ இமிடேட் பண்ணல. நானும் ரம்யா மேமை இமிடேட் பண்ணலை”