Published:Updated:

காஜல் அகர்வாலைத் தொடர்ந்து சமந்தா- வெப் சீரிஸில் கவனம் செலுத்தும் பிரபலங்கள்!

வெப் சீரிஸில் நடிக்கிறார் சமந்தா!

samantha
samantha

'இந்தியன் 2', 'தி கால் சென்டர்' எனும் ஆங்கிலப் படம், 'மும்பை சாகா' எனும் இந்திப் படம் என பிஸி மோடில் நடித்து வருகிறார், காஜல் அகர்வால். தவிர, 'குயீன்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாரிஸ் பாரிஸ்' படம் தற்போது ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. இந்நிலையில், வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஹாட் ஸ்டாரில் வெளியாகவிருக்கும் இந்த சீரிஸில், வைபவ் நாயகனாக நடிக்கிறார். இவரைத் தொடர்ந்து சமந்தாவும் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

samantha
samantha

`ராஜ் நிதிமொரு' மற்றும் கிருஷ்ணா டிகே இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான வெப் சீரிஸ், 'தி ஃபேமிலி மேன்'. ஆக்‌ஷன் ட்ராமா ஜானரில் உருவான இதில் மனோஜ் பாய்பாய், பிரியாமணி, சந்தீப் கிஷன் எனப் பலர் நடித்திருந்தனர். இந்த வெப் சிரீஸின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை விரைவில் தொடங்கவிருக்கின்றனர். அதன் முன்னணி கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பெரிய நடிகர் - நடிகைகள் ஆன்லைன் தளத்தில் இயங்கும் வெப் சீரிஸ், சினிமாக்களில் ஆர்வம் செலுத்துவதால் இதற்கான வரவேற்பு அதிகமாக உள்ளது.