Published:Updated:

சமந்தா நடிக்கும் முதல் வெப் சீரிஸின் களமும் கதையும் என்ன? தெரிஞ்சுக்கங்க! #TheFamilyMan #Season2

ஒரே மாதிரியான வேலைகளைப் பார்த்து சலித்துப்போய், குழந்தைகளையும் சமாளித்து, வீட்டையும் சமாளிக்கும் குடும்பத் தலைவியாக பிரியாமணி. இந்த இறுக்கத்தினாலே இருவருக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.

சமந்தா பிரபு
சமந்தா பிரபு ( தி ஃபேமிலி மேன் )

OTT தளங்களில் தற்போது முக்கிய இடத்தில் இருக்கும் அமேசான் ப்ரைமில் ஆக்‌ஷன் - டிராமா ஜானரில் வெளிவந்த வெப் சீரிஸ், `தி ஃபேமிலிமேன்'. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்த சீரிஸை, பாலிவுட் இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கியிருக்கின்றனர். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, நீரவ் மனோஜ் போன்ற பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த சீரியஸுக்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. 

தி ஃபேமிலி மேன்
தி ஃபேமிலி மேன்
கொடூரக் கொலைகள், கேங்ஸ்டர் நட்பு, டீ-ஏஜிங் புரட்சி! எப்படியிருக்கிறது ஸ்கார்சஸியின் #TheIrishman

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் தொடுக்கத் திட்டமிடும் ஐ.எஸ் அமைப்பின் திட்டத்தை, என்.ஐ.ஏ நிறுவனத்தின் சிறப்பு அதிகாரியான ஶ்ரீகாந்த் திவாரி (மனோஜ் பாஜ்பாய்) எப்படித் தகர்த்து, அதை முறியடிக்கிறார் என்பதே கதையின் ஒன் லைன்.

நாட்டுப் பிரச்னைகளைப் பேசிய அதே சமயம், குடும்பத்துக்குள் ஏற்படும் குழப்படிகளையும் நுட்பத்துடன் கையாண்டிருக்கிறது `தி ஃபேமிலிமேன்'. மும்பையைப் போன்றதோர் மெட்ரோ சிட்டியில் கணவன் - மனைவி இருவரும் வேலைக்குப் போனால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். மனோஜ் பாஜ்பாய் தன்னுடைய வேலையில் காட்டும் ஆர்வத்தைக் குடும்பத்தில் காட்ட நேரமின்றி வேலையே கதியென்று இயங்கிக்கொண்டிருப்பவர். 

சமந்தா பிரபு
சமந்தா பிரபு
தி ஃபேமிலி மேன்

ஒரே மாதிரியான வேலைகளைப் பார்த்து சலித்துப்போய், குழந்தைகளையும் சமாளித்து வீட்டையும் சமாளிக்கும் குடும்பத் தலைவியாக பிரியாமணி. இந்த இறுக்கத்தினாலே இருவருக்குமிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இல்லற வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள், கணவன் - மனைவி கருத்துவேறுபாடு, அதனால் ஏற்படும் இடைவெளி, இந்தப் பாதிப்பால் குழந்தைகள் திசைமாறுவது என வீட்டுப் பிரச்னைகளையும் பேசியிருக்கிறது, `தி ஃபேமிலிமேன்'.

இந்தியாவில் எப்போது சர்ச்சைக்குறிய பிரச்னையாகக் கருதப்படுவது, காஷ்மீர் விவகாரம். இதை வைத்து மதத்தின் பெயராலும் இந்துத்துவத்தின் பெயராலும் சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள், போலி என்கவுன்டர்கள் என நாட்டை அச்சுறுத்தும் சில சென்சிட்டிவ் விஷயங்களை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். டெல்லியை ஒழித்துக்கட்ட நச்சுக் காற்றை ஊருக்குள் பரப்ப முயலும் தீவிரவாதிகளின் திட்டத்தைத் தகர்ப்பது, ஶ்ரீகாந்த் திவாரியின் குடும்பப் பிரச்னை தீர்ப்பது எனத் திரைக்கதையிலும் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறார்கள் இதன் கிரியேட்டர்கள்.

மனோஜ் பாஜ்பயி
மனோஜ் பாஜ்பயி
தி ஃபேமிலி மேன்'

தற்போது 2-வது சீஸனின் படப்பிடிப்பு வேலைகளும் தொடங்கியுள்ளன. அதுமட்டுமன்றி இதில் சமந்தா முக்கிய  வேடத்தில் நடிக்கிறார். இதுகுறித்துப் பேசிய சமந்தா, "தற்போது உள்ள OTT தளங்களுக்குக் கிடைத்து வரும் வரவேற்பு அனைவருக்கும் தெரிந்ததே. டிஜிட்டல் யுகத்தில் இது ஒரு புரட்சி என்றே சொல்லலாம். இப்படியான சூழலில் எல்லோருக்கும் பிடித்த `தி ஃபேமிலிமேன்' சீரிஸ் மூலம் OTT தளத்துக்கு அறிமுகமாவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் உலக அளவில் பலதரப்பட்ட ரசிகர்களையும் சென்றடைய முடியும். இதுவரை நடித்த கதாபாத்திரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று இதில் நான் நடித்திருக்கிறேன். இது என் ரசிகர்களுக்கு நிச்சயம் சர்ப்ரைஸ் கொடுக்கும்'' என்று தெரிவித்தார். 

மனோஜ் பாஜ்பாய் தனது அனுபவம் குறித்துப் பேசும்போது, "ஒரு நடிகனுக்கு ரசிகர்களின் பாராட்டுதான் மிகப் பெரிய அங்கீகாரம். அந்த வகையில் `தி ஃபேமிலிமேன்' சீரிஸில் என்னுடைய நடிப்பை பலரும் பாராட்டியது எனக்கு மகிழ்ச்சி. அமேசான் ப்ரைம் ஒரிஜினலில் ரசிகர்கள், அதிகளவில் பார்க்கப்பட்ட சீரிஸ் லிஸ்டில் `தி ஃபேமிலிமேன்' இடம்பெற்றுள்ளது. முதல் சீஸனைப்போலவே 2-வது சீஸனும் சிறப்பாக வந்திருக்கிறது. இந்தக் கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என நம்பி எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராஜ், டிகே மற்றும் அமேசான் தளத்துக்கு நன்றி'' எனத் தெரிவித்தார்.

``என்.ஐ.ஏ பணியில் லெஜெண்ட்... வீட்டில் டம்மி பீஸ்!’’ - எப்படி இருக்கிறது #TheFamilyMan சீரிஸ்?

பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் OTT தளத்தில் அறிமுகமானதும் 'தி பேமிலி மேன்' சீரிஸில்தான். குடும்பத் தலைவன் மற்றும் என்.ஐ.ஏ சிறப்பு அதிகாரி என டபுள் செஞ்சுரி அடித்திருக்கிறார் இவர்.

அனுராக் காஷ்யப், கெளதம் மேனன் போன்ற முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் இந்த சீரிஸை பாராட்டியதோடு, சமந்தாவுக்கு வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். மொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 2-வது சீஸன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.