Published:Updated:

ரியாலிட்டி ஷோவாகும் Squid Game - 4.56 மில்லியன் டாலர் பரிசு; கேமில் கலந்துகொள்வது எப்படி?

Squid Game

Squid Game மூலம் 4.56 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வெல்லப் போவது நீங்களாககூட இருக்கலாம். எப்படி என்று கேட்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படிங்க...

ரியாலிட்டி ஷோவாகும் Squid Game - 4.56 மில்லியன் டாலர் பரிசு; கேமில் கலந்துகொள்வது எப்படி?

Squid Game மூலம் 4.56 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வெல்லப் போவது நீங்களாககூட இருக்கலாம். எப்படி என்று கேட்பவர்கள் இந்தக் கட்டுரையைப் படிங்க...

Published:Updated:
Squid Game
உலகம் முழுவதும் பல கோடி பேர்களால் பார்க்கப்பட்ட கொரியன் வெப் சிரீஸ் Squid Game. Netflix-இல் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இதன் இரண்டாவது சீசனுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. அதனை தொடர்ந்து Squid Game கதையில் வருவது போல பல மில்லியன் டாலருக்கான போட்டியை உண்மையாகவே நடத்தவிருக்கிறது Netflix. இதற்கான அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த பரிசு தொகை, 4.56 மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் 35,59,35,588 ரூபாய். இந்தப் பரிசை வெல்லப் போவது நீங்களாககூட இருக்கலாம் என்கிறது நெட்பிளிக்ஸ்.

Squid Game கதையில் வருவது போல போட்டியில் நீங்கள் தோற்றுவிட்டால் நிச்சயம் கொல்லப்பட மாட்டீர்கள். என்ன வெறும் கையோடு வீட்டிற்கு வர நேரிடும்.

Squid Game: The Challenge என்கிற பெயரில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சிக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் உலகம் முழுவதும் இருந்து போட்டியாளர்களை வரவேற்கிறது நெட்பிளிக்ஸ். ரூல்ஸ் என்னன்னா, உங்களுக்கு 21 வயதுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும், ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு ரியாலிட்டி ஷோ இவ்வளவு பெரிய பரிசோடு நடத்தப்படுவது டிவி நிகழ்ச்சி வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாம்.
Squid Game
Squid Game

"வசீகரிக்கும் கதை மற்றும் தனித்துவமான காட்சிகளால் உலகையே உலுக்கியது Squid Game. இந்தப் புனைவுலகத்தை மிகப்பெரிய போட்டியாகவும் சமூக பரிசோதனையாகவும் மாற்ற ஆதரவு கொடுத்ததற்கு இதனை உருவாக்கிய Hwang Dong-hyuk-க்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். ஊகித்தே பார்க்க முடியாத, கவர்ச்சிகரமான பயணத்திற்கு இந்த சீரிஸின் ரசிகர்களை வரவேற்கிறோம். 456 உண்மையான போட்டியாளர்கள் ஏராளமான டென்ஷன், திருப்பங்கள், மிகப்பெரிய பணப்பரிசு என இதுவரை காணாத போட்டிக்குள் செல்லவிருக்கின்றனர்" என்கிறார் பிரண்டன் ரிக், நெட்பிளிக்ஸ் டாக்குமெண்டரி பிரிவின் துணைத் தலைவர்.

2023-ம் வருடத்தின் ஆரம்பத்தில் இந்தப் போட்டி தொடங்கப்படலாம். இதில் கலந்து கொள்ள உங்களைப் பற்றியும், நீங்கள் ஏன் இதில் கலந்து கொள்ள வேண்டும், உங்கள் கேம் பிளான் என்ன, அந்தப் பரிசை வைத்து நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை ஒரு நிமிடத்திற்கு வீடியோவாக பேசி கொடுக்கப்பட்ட ஃபார்மை நிரப்பி அனுப்ப வேண்டும்.

அதற்கான லிங்க் இதோ, Squid Game: The Challenge Casting (squidgamecasting.com)

வாழ்த்துகள், மக்கா!