Published:Updated:

"எல்லா கேரக்டர்களையும் சந்தேகப்படணும்"- `சுழல்' சுவாரஸ்யங்கள் சொல்லும் இயக்குநர்கள் பிரம்மா, அனுசரண்

'சுழல்' டீம்

"மயானக் கொள்ளை காட்சிகள் எல்லாம் நைட்ல எடுத்தோம். சாயந்திரம் 6 மணியிலிருந்து காலை 6 மணி வரைக்குமே ஷூட் போகும். நீங்க பாக்குற சூறை காட்சிகள் எல்லாம் சிங்கிள் டேக்ல எடுத்தது." - இயக்குநர்கள் பிரம்மா, அனுசரண்

"எல்லா கேரக்டர்களையும் சந்தேகப்படணும்"- `சுழல்' சுவாரஸ்யங்கள் சொல்லும் இயக்குநர்கள் பிரம்மா, அனுசரண்

"மயானக் கொள்ளை காட்சிகள் எல்லாம் நைட்ல எடுத்தோம். சாயந்திரம் 6 மணியிலிருந்து காலை 6 மணி வரைக்குமே ஷூட் போகும். நீங்க பாக்குற சூறை காட்சிகள் எல்லாம் சிங்கிள் டேக்ல எடுத்தது." - இயக்குநர்கள் பிரம்மா, அனுசரண்

Published:Updated:
'சுழல்' டீம்

தமிழ் வெப்சீரிஸ்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது 'சுழல்'. 'விக்ரம் வேதா' புஷ்கர்- காயத்ரி எழுத்தில் பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி, கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஹரீஷ் உத்தமன் உள்பட பலரும் நடித்துள்ள இந்த வெப்சீரீஸை இயக்கிய பிரம்மா, அனுசரண் இருவருரிடமும் பேசினேன்.

இயக்குநர் பிரம்மா இதற்கு முன்னர் 'குற்றம் கடிதல்', 'மகளிர் மட்டும்' படங்களையும், இயக்குநர் அனுசரண் 'கிருமி', 'பன்னிக்குட்டி' படங்களையும் இயக்கியிருக்கிறார்கள்.

சுழல் வெப்சீரிஸ்
சுழல் வெப்சீரிஸ்

"புஷ்கர் - காயத்ரி ரெண்டு பேருமே எங்களைக் கூப்பிட்டு கதை சொன்னாங்க. அப்பவே பிடிச்சுப் போச்சு. உடனே ஸ்கிரிப்ட்டையும் கொடுத்தாங்க. அவங்க ரெண்டு பேருமே டெக்னீஷியன்ஸ், ரைட்டர்ஸ் அப்படிங்கறதால கதை ரொம்ப பிடிச்சிருந்தது. த்ரில்லர் வேற, அந்த ஆர்வத்துல நாங்க இயக்க ரெடியாகிட்டோம்" - பிரம்மாவும், அனுசரணும் ஒருமித்த குரலில் சொல்கிறார்கள். இவர்கள் இருவருக்குமான ஒற்றுமை இருவரின் முதல் படமும் ஒரே தேதியில் வெளியாகியிருந்தன.

"கதை, இயக்கம் பேசி முடிவானதும் நடிகர் - நடிகைகள் தேர்வுக்கு உட்கார்ந்தோம். எல்லா கேரக்டர்களையும் சந்தேகப்படணும் என்பதற்காக அதுக்கான ஆட்களைப் பிடிச்சோம். ஆடிஷன்கள் வச்சு செலக்ட் பண்ணியிருந்தாலும் சந்தானபாரதி பண்ண கேரக்டருக்கு அவரையே நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சொல்லி வெச்ச மாதிரி நினைச்சது ஆச்சர்யமான விஷயம். அதே டைம்ல ஸ்ரேயா ரெட்டி, கதிர், ஐஸ்வர்யா இவங்களை முடிவு பண்ணி எங்ககிட்ட கேட்டாங்க. எங்களுக்கும் பிடிச்சிருந்தது. மொத்தம் 8 எபிசோடுல முதல் நாலு எபிசோடுகளுக்கு பிரம்மா, அடுத்த நாலு எபிசோடுகளுக்கு அனு அப்படின்னு பிரிச்சு வெச்சுக்கிட்டு இயக்கினோம்.

சுழல் வெப்சீரிஸ் இயக்குநர்கள் டீம்
சுழல் வெப்சீரிஸ் இயக்குநர்கள் டீம்

கொரோனா லாக்டௌனுக்குப் பிறகு, படப்பிடிப்புக்கு கிளம்பலாம்னு அரசு அனுமதி வழங்கின டைம்ல ஷூட்டுக்குக் கிளம்பினோம். அதனால எல்லாருக்குமே, அதாவது ஸ்பாட்டுல இருந்த ரெண்டாயிரம் பேருக்குமே கோவிட் டெஸ்ட் எடுத்தோம். எல்லாருக்குமே இன்ஷூரன்ஸும் ரெடி பண்ணி பக்கா முன்னேற்பாடுகளோடுதான் ஷூட்ல இருந்தோம். எட்டு எபிசோடுகளையும் 89 நாள்களில் கொடைக்கானலில்தான் எடுத்து முடிச்சோம். ராத்திரியும் பகலுமா வேலை செய்தோம். அதிலும் மயானக் கொள்ளை காட்சிகள் எல்லாம் நைட்ல எடுத்தோம்.

சாயந்திரம் 6 மணியிலிருந்து காலை 6 மணி வரைக்குமே ஷூட் போகும். நீங்க பாக்குற சூறை காட்சிகள் எல்லாம் சிங்கிள் டேக்ல எடுத்தது. அதேபோல மியூசிக் பேசப்படுறதுல சந்தோஷமா இருக்கு. கொடைக்கானல்ல ஸ்பாட்ல இருந்தப்பவே ஆன்லைன்லேயே கம்போஸிங் ஒர்க்கும் போச்சு. டைட்டான ஷெட்யூல்குள்ளதான் வேலையும், பட்ஜெட்டும் கொடுக்கப்பட்டது. இனிவரும் சிரீஸ்களுக்கு இன்னும் பெரிய பட்ஜெட் அமையும்ன்னு நம்பறோம்" என்கிறார்கள் சிரித்துக்கொண்டே!