Published:Updated:

தமன்னா நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் `நவம்பர் ஸ்டோரி'!

நவம்பர் ஸ்டோரி
நவம்பர் ஸ்டோரி

ஒரு சிட்டிங்கிலேயே பார்க்கக்கூடிய தொடர் என்பதால், இன்று இரவே பார்ப்பவர்களுக்குத் த்ரில்லுக்குப் பஞ்சமிருக்காது.

இது ஓடிடி - வெப்சீரிஸ் காலம். முன்னணி நடிகை தமன்னா தமிழில் 'நவம்பர் ஸ்டோரி' மூலம் ஓடிடி உலகில் தடம் பதித்து இருக்கிறார். ஏழு எபிசோடுகள் கொண்ட தொடராக விகடன் டெலிவிஸ்டாஸின் தயாரிப்பில் உருவான இந்த வெப் சீரிஸ் நாளை (மே 20) தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
NOVEMBER STORY
NOVEMBER STORY

அப்பாவின் அல்செய்மரை குணப்படுத்த பணம் தேவை. அதற்கு வீட்டை விற்க வேண்டும். ஆனால், வீடு அப்பா பேரில் இருக்கிறது. அப்பாவின் கையெழுத்தின்றி விற்க முடியாது. பணத்துக்கான வழிகளை அனுராதா தேடிக்கொண்டிருக்க, அனுராதாவின் வீட்டில் ஒரு பெண்ணின் சடலம். அதன் அருகில் நிர்கதியாய் அனுராதாவின் அப்பா. யார் அந்தப் பெண்? ஏன் இங்கு வந்தார், அடுத்து என்ன என்னும் திருப்பங்களுடன் பட்டாசாய் நகர்கிறது 'நவம்பர் ஸ்டோரி'.

அனுராதா என்கிற மென்பொருள் நிபுணராக தமன்னா. இந்தியாவின் மிகச்சிறந்த க்ரைம் நாவல் எழுத்தாளர் கணேசனின் மகள். க்ரைம் நாவல் எழுத்தாளர் கொலை செய்திருக்கிறாரா என ஆரம்பித்து, எந்தப் பக்கம் திரும்பினாலும், கொலைக்கான சாட்சியக் கூறுகளை போலீஸ் ஆராய்ந்தால் அது கணேசன் பக்கமே திரும்புகிறது. இதையெல்லாம் எப்படி தமன்னா தனியொரு பெண்ணாக முறியடிக்கிறார் என்பதுதான் கதை.

இன்னும் சில நிமிடங்களில் (இரவு 12 மணிக்கு மேல்) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருக்கும் நவம்பர் ஸ்டோரியின் டிரெய்லரே வித்தியாசமாக இருந்தது. தொடரின் முக்கியமான ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார் பசுபதி. கணேசனாக ஜி.எம்.குமார். தமன்னாவின் பாஸாக விவேக் பிரசன்னா என ஜாலி ஒரு பக்கம். இன்னொரு பக்கம் கொலை, அதற்கான காவல்துறை தேடுதல்... இப்படி இருவேறு பயணம் என விரைகிறது திரைக்கதை.

ஒரு சிட்டிங்கிலேயே பார்க்கக்கூடிய தொடர் என்பதால், இன்று இரவே பார்ப்பவர்களுக்குத் த்ரில்லுக்குப் பஞ்சமிருக்காது. ஏனெனில் நாளை ஸ்பாய்லர்கள் பாய்லர்களாய் கொதிக்கத் தொடங்கிவிடும்.

ஆல் தி பெஸ்ட் ஃபோக்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு