Published:Updated:

டெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்): டே பிரேக்!

கார்த்தி

டெக் தமிழாவின் மாதாந்திர ஷேரிங்ஸ்!

டே பிரேக் | Daybreak
டே பிரேக் | Daybreak
DayBreak - (Netflix)
டெக் தமிழாவின் இந்த மாத ஸ்ட்ரீமிங் ரெகமெண்டேஷன்!

உலகம் அதன் பெரும்பான்மை மனிதர்களை இழந்து, மீதமிருக்கும் நபர்களை வைத்து நகரும் அற்புதத் தருணத்தில் நிகழும் மற்றுமொரு அப்போகலிப்டிக் சினிமாதான் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருக்கும் இந்த 'DayBreak' என்னும் தொடர்.

ஒரு நல்ல நாளில் ஒட்டுமொத்தமாய்ப் பெரியவர்கள் மடிந்துவிட, மீதமிருப்பவர்கள் ஜாம்பிகளாக, கௌலிகளாக (வேற பேர்ல வர்ற ஜாம்பி) மாறிவிடுகிறார்கள். கிளேண்டல் என்னும் பள்ளியில் இருக்கும் சில மாணவர்கள் மட்டுமே தப்பிப் பிழைக்கிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்த ஊரையும் நாட்டாமை செய்கிறார்கள். சிலர் எஜமானர் ஆகிறார்கள். ஜாம்பிக்களை விரட்டுகிறார்கள். சிலர் உயிருக்குப் பயந்து ஓடுகிறார்கள். சில ஜாம்பிக்கள் தத்திகளாக உலவுகின்றன. இதுபோக ஒரு ஜாம்பி ஆசிரியை, ஒரு ப்ரின்சிபால் வில்லன் என ஆங்காங்கே சில கதாபாத்திரங்கள். ஹீரோ ரோலே சொல்லாமல் இதற்கு மேல் இழுத்தடித்தால் நல்லாயிருக்காது. தன் காதல் நாயகியைத் தேடி பத்து எபிசோடுகளும் அலையோ அலை என அலைகிறான் ஹீரோ. ஹீரோவுக்கு பக்கபலமாக ஒரு காந்தியவாதி நண்பரும், சிறுமியும் உடன் வருகிறார்கள்.

டெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்): டே பிரேக்! | DayBreak
டெக் தமிழா Shares (ஸ்ட்ரீமிங்): டே பிரேக்! | DayBreak

இந்த வெப்சீரிஸின் ஜாலி ஹிட்டுக்குக் காரணமே வித்தியாசமான கதை சொல்லல்தான். கிட்டத்தட்ட காஞ்சனா போல் ( ஹாரர் காமெடிக்கு நமக்கு இருக்கும் ரெஃபரென்ஸ் இதுதானே) காமெடி கலந்த ஹாரர் கதை. முதல் மூன்று எபிசோடுகளை நமக்கு விவரித்தபடியே வருகிறார் ஹீரோ. இந்தக் காட்சி போரடிக்கும் ஸ்கிப் செய்யலாமே என இயக்குநரிடம் கேட்பது என ஆங்காங்கே சினிமாவுக்கான இலக்கணத்தை உடைத்திருக்கிறார்கள். 'எனக்கு அவன மாதிரியெல்லாம் கதை சொல்ல வராதுப்பா' என நான்காவது எபிசோடை ஜாலியாகச் சொல்கிறாள் சிறுமி கதாபாத்திரத்தில் வரும் ஏஞ்சலிகா. ஜாம்பி கடித்தவுடன், ஜாம்பியாக மாறிவிடுவோம் என்கிற பயத்தில் கையை வெட்டிக்கொள்கிறான் ஹீரோ. 'சினிமா பார்க்காதேன்னா கேட்கிறயா அப்படியெல்லாம் ஒண்ணும் நடக்காது' என ஒட்டுமொத்த ஜாம்பி படங்களுக்கான இலக்கணத்தையும் போகிற போக்கில் சாக்கடைக்குள் தள்ளியிருக்கிறார்கள். 'லாஜிக்கா அப்படின்னா?' என அதன் மேலும் ஒரு டன் புல்டோசரை ஏற்றி இறக்கியிருக்கிறார்கள்.

2006-ம் ஆண்டு இதே பெயரில் வெளியான காமிக் நாவலை மையமாக வைத்து இந்தத் தொடரை எழுதியிருக்கிறார் பிராட் பேய்டன்.
டே பிரேக் காமிக் நாவல்
டே பிரேக் காமிக் நாவல்

ஜாம்பிலாண்டு மாதிரியான அப்போகலிப்டிக் படங்களில் வரும் காமெடியோ, டெட்பூல் படத்தில் வருவது போல் பார்வையாளனுடன் தொடர்ந்து பேசுவதோ (ஜாம்பிலாண்டுலயும் பார்வையாளன்ட்ட தொடர்ந்து பேசுவாங்க, இருந்தாலும் ரெண்டு உதாரணம் சொல்லலாமேன்னு...) உங்களுக்குப் பிடிக்குமாயின் இந்த டேபிரேக் ஓர் அட்டகாசத் தொடர்.