'உலகம் இப்போது முடிந்துவிடும்' என ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு மனிதர்கள் சமிக்ஞை சொல்லியிருக்கிறார்கள். பூமி தட்டையானது என்று சொன்ன காலத்துக்கு முன்பே, இந்த உலகம் அழியப்போகிறது என்னும் கான்செப்ட் உருவாகிவிட்டது. உண்மையில், உருவான எதுவும் ஒருநாள் அழிந்தே தீரும், நெகிழி உள்பட. ஆனால், உலகம் அழிதல் என்பது, நாம் நமக்காகவே உருவாக்கிய உலகம் அழிவதுதான். ஒரு காதலனுக்கு, தன் காதலி விபத்தில் இறப்பதே உலகம் அழிந்துவிட்டதாக கருதிக்கொள்ள வேண்டியதொரு தருணம்தான்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சரி, இந்த Coming Of Age தொடருக்கு இவ்வளவு சீரியஸாக இன்ட்ரோ தேவையில்லை. பதின் பருவத்தில் இருக்கும் நாயகனுக்கும் நாயகிக்குமிடையே உண்டாகும் காதலும் துரோகமும், இனக் கவர்ச்சியும் ஹார்மோன்களின் சித்து விளையாட்டுகளும் எந்த அளவுக்கு செல்லும் என்பதை விபரீதமாகவும், அதே சமயம் ஜாலியாகவும் சொல்லும் தொடர்தான் The End of the F***ing World .
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS17 வயதான ஜேம்ஸுக்கு, பார்க்கும் எல்லாவற்றையும் கொல்ல வேண்டும். தன் கையை கொதிக்கும் எண்ணெய்யில் விட்டுப் பார்த்துவிட்டு, 'நாம சைக்கோதான்' என தனக்குத்தானே தீர்மானம் செய்துகொள்ளும் கதாபாத்திரம். பூச்சிகள், விலங்குகளை எல்லாம் கொன்றுவிட்டு, ஒரு மனிதரைக் கொல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறான். வாழ்க்கைமீது உச்சபட்ச வெறுப்பில் இருக்கிறார், 17 வயதான அலைஸா. அலைஸாவுக்கு எங்காவது ஓட வேண்டும். ஜேம்ஸுக்கோ, ஒருவரைக் கொலை செய்ய வேண்டும். இந்த இரண்டு சிறார்களும் இங்கிலாந்தில் செய்யும் ரோடு ட்ரிப்தான் இந்தத் தொடர்.

2017-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்தத் தொடர், அதிரிபுதிரி ஹிட் அடிக்க, முதல் சீசனில் நடந்த ஒரு கொலையை மையமாக வைத்து, இரண்டாம் பாகத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். முதல் சீசன், விமர்சகர்கள் மத்தியிலும் ஏகபோக ஹிட். ஒப்பிட்டுப்பார்த்தால், இரண்டாம் சீசன் சற்றே டொங்கல்தான். இப்படிப் போய் அப்படிப் போய் எப்படியோ போனானாம் என்பதுபோல் இருக்கிறது, இரண்டாம் பாதியின் திரைக்கதை. ஆனால், பதின் பருவத்தில் நடக்கும் பல விஷயங்கள் இப்படித்தான் இருக்கும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதல் பாகத்தில் அலைஸாவுக்கு ஒரு ஆபத்து நேர, அவரை அதிலிருந்து மீட்கிறான் ஜேம்ஸ். அந்த ஆபத்தின் மீதம், இவர்களை இரண்டாம் பாதியில் துரத்துகிறது. முதல் பாகத்தைப் போல், பாதியில் முடியாமல், சிறப்பாகவே இந்த பாகத்தை முடித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு எபிசோடும் 20 நிமிடமே என்பதால், ஒரு பாப்கார்ன் பவுல் முடிவதற்குள் இரண்டு எபிசோடுகளைப் பார்த்துவிடலாம். மின்னல் வேகத்தில், ஓவர்நைட்டில் பார்க்க அட்டகாசமான ஒரு ஜாலி சீரிஸ், இந்த The End of the F***ing World