Published:Updated:

`பாகுபலி', `குயின்', `ஃபேமிலி மேன்' - இந்த ஆண்டைக் கலக்கவிருக்கும் வெப்சீரிஸ்களின் பட்டியல்!

வெப்சீரிஸ்

இந்த வருடம், ரசிகர்களின் விஷ் லிஸ்ட்டில் இடம்பெற்று வெளிவர இருக்கும் சில இந்திய வெப்சீரிஸ்களின் பட்டியல்...

`பாகுபலி', `குயின்', `ஃபேமிலி மேன்' - இந்த ஆண்டைக் கலக்கவிருக்கும் வெப்சீரிஸ்களின் பட்டியல்!

இந்த வருடம், ரசிகர்களின் விஷ் லிஸ்ட்டில் இடம்பெற்று வெளிவர இருக்கும் சில இந்திய வெப்சீரிஸ்களின் பட்டியல்...

Published:Updated:
வெப்சீரிஸ்

ஒரு திரைப்படம் வெளியாவதற்கு இணையான, எதிர்பார்ப்பும் வரவேற்பும், கடந்த சில வருடங்களில் OTT தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸுக்கும், படங்களுக்கும் கிடைத்து வருகிறது. முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், புதியவர்கள் என தரமான படைப்புகளுக்கு இணைய வளர்ச்சியில் OTT அமைத்து கொடுத்த களம் பெரிது. அதற்கேற்றாற்போல, ஆந்தாலஜி படங்கள், பல இயக்குநர்கள் ஒரு படத்தில் இணைவது என பல புதிய பரிசோதனை முயற்சிகளுக்கும் ரெட் கார்பெட் விரித்தது OTT.

web series
web series

அந்த வகையில், இந்த வருடம் ரசிகர்களின் விஷ் லிஸ்ட்டில் இடம்பெற்று வெளிவர இருக்கும் சில இந்திய வெப்சீரிஸ்களின் பட்டியல்...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'தி ஃபர்காட்டன் ஆர்மி'- The forgotten army:

the forgotten army
the forgotten army

பிரிட்டிஷ் அரசின் காலனி ஆதிக்கத்திலிருந்து இந்தியாவை மீட்டெடுக்க, நாடு முழுவதும் பல போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலக்கட்டம் அது. ஆங்கிலேயரிடமிருந்து இந்தியாவை மீட்க, 'சல்லோ தில்லி' என்ற முழக்கத்துடன் தலைநகரை நோக்கி அணிவகுத்த இந்திய வீரர்களின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட கதைதான், 'தி ஃபர்காட்டன் ஆர்மி'. இந்த மாதம் 24, அதாவது குடியரசு தினத்திற்கு இரண்டு நாள்கள் முன்னதாக, அமேசான் ப்ரைம் ஒரிஜினலில் வெளிவரவுள்ளது. இரண்டாம் உலகப் போர் நடைபெற்றபோது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, சுபாஷ் சந்திர போஸ் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவம் (இதில் பெண்களுக்கென தனிப்பிரிவு உண்டு), ஆங்கிலேயருக்கு எதிராக நடத்திய போராட்டமும் வீரர்களின் மறக்கப்பட்ட கதையையும் பேசவிருக்கிறார், இயக்குநர் கபீர் கான்.

சோபி மற்றும் மாயா என்கிற இரு வீரர்களுக்கிடையேயான காதல், சுதந்திர வேட்கை, அதைத் தக்கவைக்க முன்னெடுத்த போராட்டம் எனப் பலவற்றையும் பேசவுள்ளது, 'தி ஃபர்காட்டன் ஆர்மி'

'ப்ரீத் 2'- Breath 2:

breath
breath

இரண்டு வருடங்களுக்கு முன்பு அமேசான் ப்ரைமில், க்ரைம் ட்ராமா த்ரில்லர் ஜானரில் வெளிவந்த சீரிஸ் 'ப்ரீத்'.

நுரையீரல் பாதிப்பில் உள்ள தன் மகனின் உயிரைக் காப்பாற்ற மாற்று உறுப்பு கிடைக்க, அந்தக் குழந்தையின் தந்தை எந்த எல்லை வரை செல்கிறார் என்பதுதான் இதன் ஒன்லைன். மாதவன், அமித்ஷத் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த இந்த சீரிஸ், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

தற்போது, அதன் இரண்டாவது சீசன் இந்த மாதம் 26-ம் தேதி வெளிவரவிருக்கிறது. இந்த சீசனில், அபிஷேக் பச்சன், நித்யா மேனன் எனப் பலரும் நடித்துள்ளனர். டிஜிட்டல் ப்ளாட்ஃபார்மில் அபிஷேக் பச்சனின் முதல் சீரிஸ் இது.

'ஹோஸ்டேஜ்'- Hostage 2:

hostage2
hostage2

கடந்த வருடம், ஹாட்ஸ்டாரில் க்ரைம் திரில்லர் ஜானரில் வெளிவந்த `ஹோஸ்டேஜ் சீசன்1' பெற்ற வரவேற்பைத் தொடர்ந்து, இதன் இரண்டாவது சீசன் இந்த வருடம் வெளிவர உள்ளது.

ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சருக்கு, அடுத்த நாள் சர்ஜரி செய்யவிருக்கும் நிலையில், முந்தைய நாள் இரவு டாக்டர் மீராவின் குடும்பம் கடத்தப்படுகிறது. சர்ஜரியின்போது, முதலமைச்சரைக் கொன்றால் மீராவின் குடும்பம் காப்பாற்றப்படும் என கார்னர் செய்யப்பட, அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

ரோனிட் ராய், டிஸ்ஸா சோப்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த சீரிஸை சுதிர் மிஸ்ரா இயக்கியுள்ளார்.

'மிர்சாப்பூர்'- Mirzapur 2:

Mirzapur2
Mirzapur2

போதை நிழலுலகில் சிக்கிய இரண்டு சகோதர்களைச் சுற்றி நடக்கும் கதை, `மிர்சாப்பூர்'. கடந்த ஆண்டின் இறுதியில் அமேசான் ப்ரைமில் வெளிவந்த `மிர்சாப்பூர்'. வெப்சீரிஸ் ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றது. இதன் இரண்டாவது சீசன், இந்த ஆண்டு வெளிவரவிருக்கிறது. பங்கஜ் திரிபாதி, அலி பசல் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர்.

'பாகுபலி- ஃபிபோர் தி பிகினிங்'- Baahubali- before the beginning:

Baahubali- before the beginning:
Baahubali- before the beginning:

'பாகுபலி' தி பிகினிங், கன்க்லூசன் என இரண்டு பாகங்களாக வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற திரைப்படம். இப்போது, 'பாகுபலி- பிஃபோர் தி பிகினிங்' எனும் வெப்சீரிஸாகவும் மிரட்ட இருக்கிறது.

எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டனின் 'தி ரைஸ் ஆஃப் சிவகாமி' புத்தகத்தை அடிப்படையாகக்கொண்டு, ராஜமெளலி தயாரிப்பில் நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினலில் இந்த வருடம் வெளிவரவுள்ளது. இதற்கான அறிவிப்பை 2018ல் நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதில், சிவகாமியாக சின்னத்திரை நடிகை மிருணால் தக்கூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பெரிய திரையில் கொண்டாடியது போலவே, OTT தளத்திலும் சிவகாமியை வரவேற்கக் காத்திருக்கின்றனர், 'பாகுபலி' ரசிகர்கள்.

தி ஃபேமிலி மேன் 2- (The family man 2):

the family man2
the family man2

அமேசான் ப்ரைமில் ஆக்‌ஷன் - டிராமா ஜானரில் வெளிவந்த வெப் சீரிஸ், `தி ஃபேமிலிமேன்'. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இந்த சீரிஸை, பாலிவுட் இயக்குநர்களான ராஜ் மற்றும் டிகே இயக்கியிருக்கின்றனர். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, நீரவ் மனோஜ் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் இந்த சீரியஸுக்கு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் தொடுக்கத் திட்டமிடும் ஐ.எஸ் அமைப்பின் திட்டத்தை, என்.ஐ.ஏ நிறுவனத்தின் சிறப்பு அதிகாரியான ஶ்ரீகாந்த் திவாரி (மனோஜ் பாஜ்பாய்) எப்படித் தகர்த்து, அதை முறியடிக்கிறார் என்பதே கதையின் ஒன் லைன். நாட்டுப் பிரச்னைகளைப் பேசிய அதே சமயம், குடும்பத்துக்குள் ஏற்படும் குழப்படிகளையும் நுட்பத்துடன் கையாண்டிருக்கிறது, `தி ஃபேமிலிமேன்'. டெல்லியை ஒழித்துக்கட்ட நச்சுக் காற்றை ஊருக்குள் பரப்ப முயலும் தீவிரவாதிகளின் திட்டத்தை எப்படித் தகர்ப்பது, ஶ்ரீகாந்த் திவாரியின் குடும்பப் பிரச்னை தீர்ந்ததா? போன்ற கேள்விகளுக்கான விடையை சீசன் 2ல் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கலாம்.

குயின் - சீசன்2 (Queen):

queen
queen

தமிழகப் பெண் அரசியல் ஆளுமை ஒருவரின் வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, அதில் புனைவைச் சேர்த்து, கடந்த ஆண்டின் இறுதியில் எம்.எக்ஸ் ப்ளேயரில் வெளியான வெப் சீரிஸ், `குயின்'. 11 எபிசோடுகளைக்கொண்ட இந்த சீரிஸை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க, இந்திரஜித், ரம்யா கிருஷ்ணன், அனிகா, அஞ்சனா ஆகியோர் நடித்துள்ளனர்.

திறமையான மாணவியான சக்தி, குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடரமுடியாமல் சினிமாவுக்குள் நுழைந்து, அரசியல் வரை சென்ற பயணத்தை சீசன் 1 சொல்லியிருக்கும். அதற்குப் பிறகான அரசியல் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் அடுத்த சீசனில் பார்க்க, இந்த வருடம் ஆவலுடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.