Published:Updated:

Loki: அஜித்துக்கும் லோகிக்கும் என்ன சம்பந்தம்... லோகியின் சாகசங்கள் ஈர்க்கிறதா?!

Loki | லோகி

லோகி என்றாலே அஜித்தான் சமயங்களில் நினைவுக்கு வருவார். 'முதுகுல குத்திட்டாங்க' என்பது அஜித்தின் டிரேட்மார்க் என்றால், முதுகில் குத்துவது லோகியின் டிரேட்மார்க். எப்படியிருக்கிறது இந்த 'லோகி' வெப்சீரிஸ்?

Loki: அஜித்துக்கும் லோகிக்கும் என்ன சம்பந்தம்... லோகியின் சாகசங்கள் ஈர்க்கிறதா?!

லோகி என்றாலே அஜித்தான் சமயங்களில் நினைவுக்கு வருவார். 'முதுகுல குத்திட்டாங்க' என்பது அஜித்தின் டிரேட்மார்க் என்றால், முதுகில் குத்துவது லோகியின் டிரேட்மார்க். எப்படியிருக்கிறது இந்த 'லோகி' வெப்சீரிஸ்?

Published:Updated:
Loki | லோகி
எல்லாவற்றையும் மாற்றவல்லது நேரம்தான். சரியான இடத்தில் தவறான நேரத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், எதிர்பாராதவொரு திருப்பத்தை உருவாக்கிவிடும். ஆனால், இப்படியான நிகழ்வுகளின் முடிவுகளைத் தீர்மானிப்பது யார்? எது சரி, எது தவறு?

நிர்ணயிக்கப்பட்ட நேரக்கோட்டில், காலத்தின் போக்கில் நாம் செய்யும் தவறுகள், உருவாக்கும் முரண்கள், கிளம்பும் புதிய கிளைகள் எனக் காலத்தை வைத்து பல்வேறு மாயாஜாலங்களை உருவாக்க இயலும். ஆனால், மார்வெல் வெப் சீரிஸான 'லோகி' பேசுவது அதை மட்டுமல்ல. தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருக்கும் சில மனிதர்களை அப்புறப்படுத்துகிறது ஒரு குழு. அந்தக் குழு யார், அதை லோகி என்ன செய்கிறார் என்பதுதான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் 'லோகி' தொடரின் கதை.

Loki | லோகி
Loki | லோகி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்' நிகழ்வில் ஆரம்பிக்கிறது கதை. டெஸராக்ட்டை லோகி களவாடி மறைந்துவிட அது காலப்பிழை ஆகிவிடுகிறது. ஒரு காலப்பிழை நடக்கவேண்டிய நிகழ்வை மாற்றி அமைத்துவிடும். அப்போது புதியதொரு இணை உலகத்தை (Multiverse) உருவாக்கிவிடும். அப்படியான காலப்பிழைகளை உருவாக்குபவர்களை (Variant) அங்கிருந்து அப்புறப்படுத்தி காலத்தைக் கட்டுக்கோப்பில் (Sacred Timeline) வைத்திருப்பவர்கள்தான் Time Variance Authority. இந்த Time Variance Authority எனப்படும் TVAவிடம் குற்றவாளியாகச் சிக்கிக்கொள்ளும் லோகி, அங்கே எப்படி தன் இருப்பை நிலைநாட்டுகிறார், தன் இயல்பான தன்மையை விடுத்து அங்கே என்னவெல்லாம் செய்கிறார் என்பதைச் சொல்கிறது 'லோகி'.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
டிவி தொடர்களில் DC-யின் ஏரோ (Arrow) தொடரின் ஸ்பின் ஆஃபாக வெளிவந்த DC Legends of Tomorrow கிட்டத்தட்ட இந்தக் கதைதான். காலத்தின் போக்கை மாற்றியமைக்கும்படி யாரெல்லாம் பிரச்னை செய்கிறார்களோ, அவர்களை அதைச் செய்யவிடாமல் தடுத்து, காலத்தைச் சீராகப் பார்த்துக்கொள்வதுதான் இவர்கள் வேலை. காமெடி ஆக்ஷன் எனக் கலந்துகட்டி சென்றுகொண்டிருக்கும் தொடர் தற்போது அமேசான் ப்ரைமில் ஏழாவது சீசனை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சரி, லோகிக்கு வருவோம்.
லோகி என்றாலே அஜித்தான் சமயங்களில் நினைவுக்கு வருவார். 'முதுகுல குத்திட்டாங்க' என்பது அஜித்தின் டிரேட்மார்க் என்றால், முதுகில் குத்துவது லோகியின் டிரேட்மார்க்.

குறும்புகளின் கடவுளான லோகியை யாருமே எப்போதுமே நம்புவதில்லை. தன் வெற்றிக்காக யாரையும் பணயம் வைக்கத்துணியும் ஒரு கதாபாத்திரம். அப்படியான லோகி இதில் யாரை எதிர்க்கிறார். நண்பர் எப்படி எதிரி ஆகிறார். எதிரி எப்படி நண்பனாகிறார். காலமாற்றங்கள் என்ன ஆனது என்பதையெல்லாம் ஆறு எபிசோடுகளாகச் சொல்லிவிட்டு, அடுத்த சீசனுக்கான மிகப்பெரிய ட்விஸ்ட்டுடனும் 'லோகி'யை முடித்திருக்கிறது மார்வெல்.

Loki | லோகி
Loki | லோகி
Chuck Zlotnick

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் (MCU) படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அதில் சொல்லப்படாத கதைகளை, தனிப்படங்களாக எடுக்கமுடியாத கதாபாத்திரங்களை வைத்துத் தொடர்ந்து வெப்சீரிஸ்களை எடுத்து வருகின்றன மார்வெல் காமிக்ஸும் டிஸ்னி நிறுவனமும். 'வாண்டாவிஷன்', 'தி ஃபால்கன் அண்டு தி வின்டர் சோல்ஜர்' சீரிஸ்களைத் தொடர்ந்து தற்போது 'லோகி'யை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் களமிறக்கியிருக்கிறார்கள்.

எப்படி 'அயர்ன்மேன்' என்றதும் நமக்கு ராபர்ட் டௌனி ஜூனியர் நினைவுக்கு வருகிறாரோ அதேபோல் 'லோகி' என்றவுடன் நமக்கு டாம் ஹிடில்ஸ்டனின் முகம்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு நம் மனதில் பதிந்துவிட்ட ஒரு துணைக் கதாபாத்திரத்தை (வில்லன்) வைத்து தனியாக ஒரு சீரிஸ் என்பது சற்றே சவாலான விஷயம்தான். அதை உறுத்தாத வண்ணம் சாத்தியப்படுத்தியிருக்கிறார் சீரிஸ் கிரியேட்டரான மைக்கேல் வால்ட்ரோன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'வாண்டா விஷன்' தொடரில் திரைக்கதைக்குக் கடும் உழைப்பைப் போட்டிருந்த மார்வெல், 'தி ஃபால்கன் அண்டு தி வின்டர் சோல்ஜர்'ல் நிற அரசியல், அறம் குறித்து ஒரு விரிவான உரையாடலைத் தொடங்கி வைத்திருந்தது. படங்களின் பாதையில் செல்லாமல் கதைக்கும் கதாபாத்திரங்களின் பரிணாம வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து தொடர்கள் வருவது வரவேற்கத்தக்கது. ஓடிடியைப் பொறுத்தவரைத் திரை அனுபவம் மிஸ்ஸிங் என்பதால் நல்ல கதை மட்டுமே எடுபடும் என்பதை மார்வெல் புரிந்து வைத்திருப்பது சிறப்பு. அந்த வரிசையில், 'லோகி' பாத்திரத்தின் பல்வேறு பரிமாணங்களை இந்த சீரிஸ் முதன்முறையாகக் காட்சிப்படுத்துகிறது.

Loki | லோகி
Loki | லோகி
'லோகி'யாக டாம் ஹிடில்ஸ்டன் தன் கிராஃபை பல மடங்குக் கூட்டியிருக்கிறார். இதுவரை அவரின் குறும்புத்தனங்களை மட்டுமே பார்த்த நாம், அவரின் கோபம், அழுகை, காதல், ஏமாற்றம் எனப் பல்வேறு உணர்வுகளை இதில் பார்க்கிறோம். ஒரு கதாபாத்திரமாக 'லோகி'யின் வளர்ச்சி நிச்சயம் மார்வெல்லின் புதிய படங்களுக்குப் பெரியளவில் உதவும் என்று எதிர்பார்க்கலாம்.

'லோகி'யின் சர்ப்ரைஸ் பேக்கேஜ் ஏஜென்ட் மோபியஸாக வரும் ஓவன் வில்சன்தான். லோகியை நம்பும் நண்பனாக, கதையின் ஓட்டத்துக்குப் பக்கபலமாக முதிர்ச்சியானதொரு பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். லேடி லோகி எனும் சில்வியாக வரும் சோபி டி மார்ட்டினோவுக்கு லோகியையே சுற்றவிடும் கதாபாத்திரம். அதிரடி ஆக்ஷன், அடாவடித்தனம் என இறுதிவரை அந்தப் பாத்திரத்தின் மீட்டர் குறையாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.

மார்வெல் படங்களிலும் இவரின் பாத்திரம் இடம்பெறுமாயின் அது நிச்சயம் பலம் சேர்க்கும் ஒன்றாகவே இருக்கும். அதேபோல் நீதிபதி ரென்ஸ்லேயர் மற்றும் ஹண்டர் பி.15-ஆக வரும் இருவருமே சிறப்பானதொரு நடிப்பை வழங்கியிருக்கின்றனர். பர்ஃபாமன்ஸாக பார்த்தால் லோகி எங்குமே சறுக்கவில்லை என்பதே மிகப்பெரிய பலம்.

காலத்துக்கு அப்பாற்பட்டு இயங்கும் டைம் வேரியன்ஸ் அத்தாரிட்டி, காலப்பிழையை நிகழ்த்தும் வேரியன்ட்கள், இணை பிரபஞ்சம் எனும் மல்டிவெர்ஸ், நெக்சஸ் ஈவென்ட் என நோலன் பட ரேஞ்ச்சிற்கு அறிவியல் புனைவு வார்த்தைகளைப் புகுத்தியிருந்தாலும், 'டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்' படம்போலவே தெளிவான பாதையில் எல்லாவற்றையும் எளிமையாக விளக்கியவாறே நகர்கிறது திரைக்கதை.

டைட்டில் தொடங்கி எண்டு கார்டு வரை எண்ணற்ற குறியீடுகள். அனைத்தையும் டிகோட் செய்ய 0.25x ஸ்பீடில்தான் பார்க்கவேண்டும் போல! "நீ யாரையும் நம்ப மாட்ட, என்னை யாரும் நம்ப முடியாது", "நம்மளோட லிமிட் என்னன்னு முயற்சி பண்றவரைக்கும் நமக்கே தெரியாது", "எனக்கான இடம் இதுதான். ஆனா, நீ தேடிவந்தது வேற, அதை நோக்கி போ" எனப் பல இடங்களில் வசனங்கள் ஸ்கோர் செய்கின்றன.

Loki | லோகி
Loki | லோகி

நிறைய 'லோகி'க்கள் தோன்றும் 5-வது எபிசோடு ரசிக்கவைக்கும் கலாட்டா. காலப்பிழை எனும் குற்றம் நிகழ்த்தும் வேரியன்ட்களை சிறைப்படுத்தும் உலகமாக 'வாய்ட்' என்று ஒன்று இருக்குமாயின், அதில் மற்ற பிரபஞ்சங்களைச் சேர்ந்த லோகிக்கள் நிச்சயம் நிரம்பியிருப்பார்கள் என்பது அசரவைக்கும் லாஜிக் மேஜிக். அதிலும் அங்கிருக்கும் ஒவ்வொரு லோகியும் மற்றொருவரை முதுகில் குத்தி ஏமாற்ற நினைப்பது ஜாலி கலாட்டா! நாயகன் 'லோகி' முதிர்ச்சியடையும் காரணத்தைத் தெளிவாக விளக்கியிருந்தாலும் அவர் தன் நாரதர் வேலையை இறுதிவரை பார்க்காமல் இருப்பது அந்தப் பாத்திரத்தைச் சற்றே அந்நியப்படுத்துகிறது.

'லோகி'யின் மைனஸ் என்றால் மொத்தமாகப் பார்க்கும்போது ஒரு இரண்டரை மணிநேர திரைப்படமாகச் சுருங்கிவிடக் கூடிய அளவே கதை இருக்கிறது. குறிப்பாக, லெமன்டிஸ் உலகில் நடக்கும் மூன்றாவது எபிசோடு ஃபில்லர் ரகம். ஒரு சீசனுக்கு 20+ எபிசோடுகள் எடுக்கும் டிவி சீரிஸ்கள் ஃபில்லர் எபிசோடு வைத்தால் அதை ஒருவகையில் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், ஆறே எபிசோடுகள் கொண்ட 'லோகி'யில் ஃபில்லர் என்பதைதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கட்டமைத்த பல பிம்பங்களை பழைய ஃபர்னிச்சராக உடைத்திருக்கிறது 'லோகி'.

Loki | லோகி
Loki | லோகி
இன்ஃபினிட்டி ஸ்டோன்களை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்துவது தொடங்கி, TVA எப்படி எல்லாவற்றையும் கட்டியாளும் பவர்ஃபுல்லான இடமாக இருக்கிறது என்பதைச் சொல்லும்போது இதற்காகவா அவெஞ்சர்ஸ் குழு பூமியில் தானோஸுடன் அத்தனை யுத்தம் நடத்தி இழப்புகளையும் சந்தித்தது என்ற கேள்வி எழாமல் இல்லை.

ஒருவேளை ஒருவர் 'லோகி' பார்த்தபின்பு மார்வெல்லின் பழைய படங்களைப் பார்க்க நேர்ந்தால், அது அவருக்கு எந்தவித எமோஷன்களையும் கடத்தப்போவதில்லை என்பதே நிதர்சனம்.

இருந்தும், வரவிருக்கும் புதிய வில்லன், திறந்துவிடப்பட்டிருக்கும் மல்டிவெர்ஸ் என்னும் இணை பிரபஞ்சம், எண்ணற்ற புதிய கதாபாத்திரங்கள் என தன் அடுத்த ஃபேஸை பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கவிருக்கிறது மார்வெல் சினிமாட்டின் யுனிவர்ஸ். அதற்கான பலமானதொரு முன்னுரை இந்த 'லோகி'!

பி.கு : இந்த 'லோகி'யை தமிழிலும் ரசிக்கலாம். சீசன் 2-க்கும் இப்போதே ஆர்டர் கொடுத்துவிட்டது மார்வெல். லோகி ஃபேன்ஸ்... அசெம்பிள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism