Published:Updated:

ஆம்னி பஸ்ஸில் அபிக்கு நேர்ந்த பிரச்னை, அறிமுகமான கௌதம்... அடுத்து என்ன? #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Co presenting by ITC Aashirvaad Superior MP Atta )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 24-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இதோ...

ஹர்ஷிதாவும் அவருடைய பார்ட்னரும் நின்றுகொண்டிருக்கிறார்கள். சித்தார்த் அவர்களை உள்ளே வரச் சொல்லிவிட்டு, அபியை அழைக்கிறான். `என்ன நடக்கப் போகிறதோ' என்ற பயத்தில் அபி இருக்கிறாள்.

``அபி, நீங்க சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன். பணம் பின்னால ஓடி ஓடி மனிதர்களைப் புரிஞ்சுக்காம போயிட்டேன். இனி ரித்விக்கோட அப்பாவாகத்தான் இங்கே வருவேன்... சார், அபி மாதிரி ஒரு மனைவி கிடைக்க நீங்க கொடுத்து வைத்திருக்கணும். எவ்வளவு அழகா எனக்குப் புரிய வச்சிட்டாங்க” என்று பாராட்டிவிட்டு, ஹர்ஷிதாவுடன் அவர் கிளம்பிப் போகிறார்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

ஊரிலிருந்து உடனே அபியைக் கிளம்பி வரச் சொல்கிறார்கள். ``திடீர்னு இப்படிக் கிளம்பினா எப்படி? குழந்தைகளை நாளைக்கு யார் பார்த்துக்கிறது? உனக்கு என்ன மாசமானா பணம் வந்துடறது. நான்தான் நாயா உழைக்கிறேன்” என்று வழக்கம்போலவே கோபமாகப் பேசிக்கொண்டே பஸ்ஸில் ஏற்றுவதற்காக அழைத்துச் செல்கிறான் சித்தார்த்.

``நிலம் என் பேர்ல எழுதிக் கொடுக்கப் போறாங்க. அதான் வரச் சொல்லிருக்காங்க. குழந்தைகளை வாட்ச்மேன் ஒய்ஃப் பார்த்துப்பாங்க” என்கிறாள் அபி.

பஸ் ஒன்று வர அவசரமாக ஏறி அமர்கிறாள்.

நிகழ்காலத்தில் ஹோட்டல் அறையில் தங்கியிருக்கும் அபியின் போன் அடிக்கிறது. சித்தார்த் அவளைச் சந்திக்க வேண்டும் என்கிறான். தன் மீது சிறிய தவறுகள் இருக்கலாம். ஆனால், நீ செய்தது துரோகம் என்கிறான். அழைப்பைத் துண்டிக்கிறாள் அபி.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

மீண்டும் ஃப்ளாஷ்பேக். சற்று நேரத்தில் அதே இருக்கைக்கு ஒருவன் வருகிறான். அபியும் அவனும் தங்களுக்கான இருக்கையே அது என்கிறார்கள். பிறகுதான் அடுத்த பஸ்ஸில் ஏற வேண்டிய அபி, இதில் ஏறிவிட்டாள் என்று தெரிகிறது. சித்தார்த்திடம் தகவல் சொல்கிறாள். `பார்த்து ஏற மாட்டியா' என்று திட்டிவிட்டு, வீட்டுக்கு வரச் சொல்கிறான் அவன்.

படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்ஸில் டிக்கெட்டைப் பரிசோதிக்காமல் ஏற்ற மாட்டார்கள். அப்படியே ஏதோ தவறு நடந்தாலும் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சரியான பஸ்ஸில் ஏற ஏற்பாடு செய்வார்கள். அங்கே இறங்குவதில் பிரச்னை ஒன்றும் இருக்காது. அடுத்த பஸ்ஸில் ஏற வேண்டியதுதான். லாஜிக் உதைக்குதே!

இரவு நேரத்தில் எப்படி இறங்குவது என்று அபி யோசித்துக்கொண்டிருக்கும்போது, அந்த இருக்கையின் சொந்தக்காரன் இருக்கையை ஷேர் செய்து உட்கார்ந்தே செல்வதற்கு ஒப்புக்கொள்கிறான்.

தான் கெளதம் என்றும் ஐ.டி-யில் வேலை செய்கிறேன் என்றும் அறிமுகம் செய்துகொள்கிறான். அபியும் கெளதமும் இரவு முழுவதும் பேசிக்கொண்டே பயணிக்கிறார்கள்.

அடுத்து என்ன?

இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!

- எஸ்.சங்கீதா

அடுத்த கட்டுரைக்கு