Published:Updated:

பரிதவிக்கும் குழந்தைகள்... நிதானமான அபி... புதிய சிக்கலில் சித்தார்த்! #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Co-presenting by ITC Aashirvaad Superior MP Atta )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 71-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...

அபியும் சித்தார்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சங்கடத்தில் நிற்கிறார்கள். குழந்தைகள் இருவரையும் தனியே விட்டுவிட்டு அறையைவிட்டு வெளியேறுகிறார்கள். `நான் குழந்தைகளை அழைச்சிட்டுப் போக வரலை, பயப்பட வேண்டாம்' என்கிறான் சித்தார்த்.

அவன் சண்டை போட்டுத்தான் பார்த்திருக்கிறாள் என்பதால், அபிக்கு இந்தப் பதில் நிம்மதியைக் கொடுப்பதோடு, அவன் மீது இரக்கத்தையும் உண்டு பண்ணுகிறது. இது இயல்புதான்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

``அன்னிக்கு அப்படியெல்லாம் நடக்கும்னு நினைக்கல. நீங்க திருந்தணும்னுதான் கோபத்தில் பேசினேன். எப்போ சென்னைக்கு வந்தீங்க?”

``குழந்தைகளை விட்டுட்டு அக்காகூட போனது தப்புதான். ஒரு இன்டர்வியூக்காக வந்தேன். ஊர்ல இருந்தா டிவோர்ஸ், கல்யாணம்னு பேசிட்டிருக்காங்க. அது எனக்குப் பிடிக்கல” என்றான் சித்தார்த்.

அபிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. `சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்' என்கிறாள். அவன் துணிகளை எடுத்துக்கொண்டு செல்வதாகவும் சாப்பாடு வேண்டாம் என்றும் கூறுகிறான்.

``குழந்தைங்க உங்க மேல ரொம்பப் பிரியமா இருக்காங்க. நீங்க எப்ப வேணா இங்கே வந்து குழந்தைகளைப் பார்த்துட்டுப் போங்க. சாப்பிட வாங்க” என்று சொல்கிறாள் அபி.

சித்தார்த் சாப்பிடாமல் கிளம்புகிறான். குழந்தைகள் அவனை இருக்கச் சொல்லி அழுகிறார்கள். ``குழந்தைகளுக்காவது சாப்பிடுங்க” என்று சாப்பிட வைக்கிறாள் அபி.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

சாப்பிட்ட பிறகு யாரிடமும் எதுவும் சொல்லாமல் கிளம்புகிறான் சித்தார்த். அனுவும் ஹர்ஷிதாவும், ``நீங்க ரெண்டு பேரும் ஒருத்தரை இன்னொருத்தர் பார்த்துக்கிட்டதை எல்லாம் கவனிச்சிட்டுதான் இருந்தோம். குழந்தைகளுக்கு மட்டும்தான் சித்தார்த் மேல பாசமான்னு எங்களுக்கு டவுட்” என்று சிரிக்கிறார்கள்.

``எனக்கும் அவருக்கும் ரொம்பவே கோபம் இருக்கு. ஆனா, நேர்ல பார்த்தப்ப அதெல்லாம் கவனத்துல வராம, ஒருத்தரை இன்னொருத்தர் பார்த்துட்டுதான் இருந்தோம். எந்த எமோஷனும் வரலை. அவருக்கும் குழந்தைகளை ரொம்பப் பிடிக்கும். இந்த மாதிரி ஒரு நிலைமை வரக் கூடாதுன்னுதான் இத்தனை நாளும் பொறுத்துக்கிட்டேன்” என்கிறாள் அபி.

``திருமண பந்தம் சாதாரணமானது இல்ல அபி. உங்க ஃபீலிங்ஸ் புரியுது” என்கிறாள் ஹர்ஷிதா.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

``உன்னைப் பார்த்துதான் அவர் சீரியஸா இருந்தார். கார்டன்ல குழந்தைகளைப் பார்த்து சந்தோஷமா இருந்தார். சரி, நாம எல்லாம் மாலுக்குப் போய் ஜாலியா இருப்போம். கிளம்புங்க ஹர்ஷிதா” என்று அனு சொல்ல, ஹர்ஷிதா வேலை இருப்பதாகச் சென்றுவிடுகிறாள்.

சித்தார்த் பப்புக்குச் சென்று அளவுக்கு அதிகமாகக் குடித்து, விழுந்து கிடக்கிறான். அங்கு வரும் ஹர்ஷிதா அவனை மற்றவர் துணையோடு காருக்கு அழைத்துச் செல்கிறாள்.

இனி?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா
அடுத்த கட்டுரைக்கு