Election bannerElection banner
Published:Updated:

அபியை அவமானப்படுத்தும் குடும்பம்... சரியாகக் கையாளும் அபி... அடுத்து என்ன? #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Co-presenting by ITC Aashirvaad Superior MP Atta )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 76-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...

``இது என் வீடு. நான் எங்கும் போக மாட்டேன்” என்று சொல்லும் சித்தார்த்திடம், ``இதுதான் நீங்க. நான் மனசால எப்பவோ உங்களைப் பிரிஞ்சிட்டேன். குழந்தைகளுக்காகத்தான் சேர நினைச்சேன். ஆனா, நீங்க திருந்த மாட்டீங்க. வீட்டுக்குக் கொடுத்த அட்வான்ஸை உங்க அக்கவுன்ட்ல போட்டுட்டேன். லீகலா என்ன செய்யணுமோ அதை நான் பார்த்துக்கறேன். அதனால நீங்க சீக்கிரம் கிளம்பறது நல்லது” என்கிறாள் அபி.

``என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணிட்டே அபி. வேலைக்குப் போற திமிர்லதானே எல்லாத்தையும் தூக்கி எறியறே? உன்னைச் சும்மா விட மாட்டேன்டி” என்று கோபத்துடன் கிளம்பிச் செல்கிறான் சித்தார்த்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

``எல்லாம் கேட்டுட்டுதான் இருந்தேன் அபி. நீங்க ரெண்டு பேரும் சேரணும்னுதான் ஆசைப்பட்டேன். சித்தார்த் திருந்திட்டார்னு நினைச்சேன். இவரெல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை அபி. உன் வாழ்க்கையில் இப்பதான் நீ தெளிவா ஒரு முடிவு எடுத்திருக்கே... எப்பவும் நான் உன் கூடவே இருப்பேன் அபி” என்கிறாள் அனு.

வெளிநாடு செல்ல பேக் செய்கிறாள் அபி. அப்பா ஆசையாகக் கொடுத்த நிப்பான் ஃபிளாப்பி பொம்மையை மறக்காமல் எடுத்துக்கொள்கிறாள் ஆதிரா.

நிகழ்காலத்தில் டிபன் சாப்பிட ஹோட்டலுக்கு அழைத்துச் செல்கிறான் சித்தார்த். அபி அமைதியாக இருக்கிறாள். ``இந்த மாதிரி மறுபடியும் சேர்ந்து இருக்க மாட்டோமான்னு ரொம்ப ஏங்கியிருக்கேன் அபி. நான் இவ்வளவு பேசறேன், நீ ஒண்ணுமே பேச மாட்டேங்கிறியே, ஏன்? ஒரு ஃபிரெண்டாகூடப் பேசக் கூடாதா?” என்று கேட்கிறான் சித்தார்த்.

எவ்வளவு மோசமாக நடந்துகொண்டாலும் தவறு செய்தவர்களுக்கு அது பெரிதாகத் தோன்றாது. இல்லையென்றால் தன்னை ஒரு ஃபிரெண்டாக நினைத்துப் பேசக் கூடாதா என்று கேட்பானா சித்தார்த்? உண்மையில் இதுபோன்ற கேள்விகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு எரிச்சலைத்தானே கொடுக்கும்?

அப்போது சித்தார்த்தின் நண்பன் ஒருவன் வந்து, ரீயூனியனுக்கு வாழ்த்துகளைச் சொல்லிவிட்டுச் செல்கிறான். சித்தார்த் அதற்காக மன்னிப்பு கேட்டுவிட்டு, ``நான் உன்னை கன்வின்ஸ் செய்யற மாதிரி இருக்கா?” என்று கேட்கிறான்.

இல்லை என்கிறாள் அபி.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

மருத்துவமனையில் அப்பாவும் பெரியப்பாவும் அபியைப் பார்த்து டென்ஷனாகிறார்கள். ``எதுக்காக இங்க வந்தே? இப்பதான் அவ தேறிட்டு வர்றா... உன்னைப் பார்த்தா போய்ச் சேர்ந்துடுவா. உன்னை நாங்க அனுமதிக்க மாட்டோம். கிளம்பு” என்று கத்துகிறார் அபியின் அப்பா.

``நான் என்ன தப்பு செஞ்சேன்? என்னிக்காவது என் நிலைமையில் இருந்து யோசிச்சிருக்கீங்களா? இல்ல, என்ன பிரச்னைனுதான் கேட்டிருக்கீங்களா? தப்பே செஞ்சிருந்தாலும் மகள் பக்கத்துல இருக்கிறவங்களைத்தான் பார்த்திருக்கேன். தப்பே செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறவ நானாதான் இருப்பேன்” என்று தீர்க்கமாகப் பதில் சொல்கிறாள் அபி.

``நாங்க அமைச்சுக் கொடுத்த வாழ்க்கை சரியில்லைன்னுட்டியே... எங்க மானத்தை வாங்கிட்டியே... கிளம்பு” என்கிறார் அபியின் பெரியப்பா.

``உங்களுக்கு என் வாழ்க்கையைவிட மானம்தான் முக்கியம். நான் சண்டை போட வரலை. அம்மாவைப் பார்த்துட்டுக் கிளம்பிடறேன்.”

முடியாது என்று அவர்கள் மறுக்க, ``மாமா, அபி மேல எந்தத் தப்பும் இல்லை. தப்பு செஞ்சது நான்தான். டிவோர்ஸ் ஆன பிறகும் என்னை மாப்பிள்ளைன்னு கூப்பிடறீங்க. அபியை இப்படிப் பேசறீங்க. அபி பார்க்கட்டும்” என்கிறான் சித்தார்த்.

அடுத்து என்ன?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ். சங்கீதா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு