Published:Updated:

சித்தார்த்துக்கு அனு கொடுத்த `சர்ப்ரைஸ்', ஷாக் ஆன அபி... காத்திருக்கும் சிக்கல்?! #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Screenshot from Vikatan TV )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 15-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இதோ...

தோழிகள் எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தாலும் இப்படித்தான்... தாங்கள் படித்த காலத்தில் எப்படிப் பேசிப் பழகினார்களோ அப்படியேதான் இப்போதும் நடந்துகொள்வார்கள். அதனால்தான் அந்த நட்பு அவ்வளவு ஸ்பெஷலாக இருக்கிறது. அதை உறுதி செய்யும் வகையில் அபியும் அனுவும் சந்தோஷமாகச் சிரித்துப் பேசி, விதவிதமாகச் சமைத்துச் சாப்பிடுகிறார்கள்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

லேண்ட்லைனிலிருந்து மீண்டும் கால் வருகிறது. அனு எடுக்கிறாள். எதிர்முனையில் சித்தார்த், ``நான்தான் பேசுகிறேன்'' என்கிறான். ``நான்தான்னா சிஎம்மா, பிஎம்மா?'' என்று வழக்கம்போல இங்கிதம் இன்றி கிண்டல் செய்துவிடுகிறாள் அனு. சித்தார்த்தோ ``யார் பேசுவது'' என்று டென்ஷனாகிறான். அபிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சட்டென்று போனை வைத்துவிடுகிறாள். மீண்டும் அழைப்பு வருகிறது. அபியிடம் ``இதற்கு முன் யார் பேசியது'' என்று கேட்கிறான் சித்தார்த். ``இப்போதுதான் கால் வந்தது'' என்று சமாளிக்கிறாள் அபி.

``சித்தார்த்திடம் நான் வரும் விஷயத்தை ஏன் சொல்லவில்லை'' என்று அனு கேட்க, ``வந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்'' என்கிறாள் அபி. ``நீ சொல்லியிருக்க வேண்டும்'' என்கிறாள் அனு. ``ஏற்கெனவே நீ செய்தது எல்லாம் போதாதா? அதுவும் அந்த காண்டம் கிஃப்ட் எல்லாம்... போதும் போதும்” என்கிறாள் அபி.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

அப்போது பக்கத்து வீட்டுப் பெண் வந்து, குழந்தையின் பர்த்டே பார்ட்டிக்கு வரும்படி அழைப்பு விடுக்கிறார். வேலை இருப்பதாகச் சொல்லி, தயங்குகிறாள் அபி. உடனே அனு, ``கண்டிப்பாக வருகிறோம்'' என்று அந்தப் பெண்ணை அனுப்பி வைக்கிறாள்.

``அவங்க கணவன் மனைவியே கிடையாது. அங்கெல்லாம் என்னால வர முடியாது” என்கிறாள் அபி. ``அடடா, சுவாரஸ்யமான கேரக்டர் கண்டிப்பாகப் போக வேண்டும்” என்கிறாள் அனு.

அபிக்கு பேன்ட், ஷர்ட் கொடுத்து போடச் சொல்கிறாள். அபியைப் பார்க்கும் அபார்ட்மென்ட்வாசிகளில் சிலர் உடையைப் பார்த்து பாராட்டுகிறார்கள். சிலர் முறைத்துவிட்டுச் செல்கிறார்கள். அபியும் அனுவும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, ஊர் சுற்றிவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வருகிறார்கள்.

இரவு பர்த்டே பார்ட்டிக்குப் போனார்களா?

திங்கள் இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!

- எஸ்.சங்கீதா
அடுத்த கட்டுரைக்கு