Election bannerElection banner
Published:Updated:

புதிய சுமை, வீட்டுச்சிறை... என்ன செய்யப் போகிறாள் அபி? #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Screenshot from Vikatan TV )

`வல்லமை தாராயோ’ தொடரின் முதல் எபிசோடை பார்த்துவிட்டு தன் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார் விகடன் வாசகி. அடுத்தடுத்த எபிசோடுகள் பற்றிய தன் கருத்துகளையும் தினமும் பகிரவிருக்கிறார்.

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸ் `வல்லமை தாராயோ’. விஜயதசமி தினத்திலிருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.00 மணிக்கு யூடியூபில் (VikatanTV) மட்டும் ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிறது.

தொடரின் முதல் எபிசோடைப் பார்த்துவிட்டு தன் கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார் விகடன் வாசகி சங்கீதா. அடுத்தடுத்த எபிசோடுகள் பற்றிய தன் கருத்துகளையும் தினமும் பகிரவிருக்கிறார். நேற்றைய எபிசோடு குறித்த கருத்து இதோ...

என்ன செய்யப் போகிறாள் அபி?

டிவி சேனல்களில்தாம் சீரியல்களைப் பார்க்க முடியும் என்கிற நிலை இனி இல்லை. டிஜிட்டல் யுகத்தின் புரட்சிகரமான மாற்றங்கள், பல புதிய வாசல்களைத் திறந்துவிட்டிருக்கின்றன. அந்த வகையில் இப்போது யூடியூப் வாயிலாகவே பல லட்சம் பார்வையாளர்களுக்கு ப்ரீமியம் சீரிஸை வழங்கும் முயற்சியில் காலடி பதித்திருக்கிறது விகடன் டிவி.

விகடன் குழுமத்தின் தயாரிப்பு என்பதும் `கோலங்கள்’ திருச்செல்வத்தின் கதை, திரைக்கதை என்பதும் டிரெய்லர் வந்தவுடனேயே `வல்லமை தாராயோ’ மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. `வல்லமை தாராயோ’ என்கிற தலைப்பு மட்டுமல்ல; அதன் ப்ரமோவும் பெண்களின் பிரச்னைகளை அழுத்தமாகப் பேசப்போகும் சீரியல் என்கிற எண்ணத்தை உருவாக்கியிருந்தது.

நேற்று வெளியான முதல் அத்தியாயம் எப்படி?

இன்று பெண்களின் ரசனை இந்தி சீரியல்களைத் தாண்டி, கொரியன் சீரிஸ் வரை சென்றுவிட்டது. ஆனால், டிவியில் வரும் சில தொடர்களோ பார்வையாளர்களை முப்பது ஆண்டுகளுக்குப் பின்னே இழுத்துச் சென்றுவிடுகின்றன. இன்றைய காலத்துக்கு ஒவ்வாத கருத்துகள், மூடநம்பிக்கைகள் போன்றவற்றை பெண்கள் விரும்புவார்கள் என்கிற முன்முடிவில் அந்தக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. `வல்லமை தாராயோ’ சீரிஸ் இப்படியிருக்காது என்கிற நம்பிக்கையை முதல் நாளே அளித்திருப்பது நல்ல விஷயம்!

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

பெருந்தொற்றுக் காலத்தில் கனடாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் தமிழ்நாட்டுக்கு வருவதற்காக நாயகி அபி விமான நிலையத்தில் காத்திருக்கிறார். அபியின் அழுகையை வைத்து, அவருக்கு ஏதோ ஒரு கஷ்டம் என்று உணர்ந்த சக பயணி ரங்கராஜன், `அம்மாவைக் கட்டிப் பிடித்து அழுதால் எந்தப் பிரச்னையும் மறைந்துவிடும்’ என்கிறார். இதைத் தொடர்ந்து அம்மாவின் உடல்நிலையைப் பற்றி தன் அண்ணன் மூலம் அறியும் அபி, நினைவோட்டத்தில் குழந்தைப் பருவத்துக்குத் திரும்புகிறார்.

உத்ரா உன்னிகிருஷ்ணன் குரலில் ஒலிக்கும் பாடலும் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் ரசனை ப்ளஸ் ரகளை. தன் பெற்றோருக்கு மட்டுமின்றி, கூட்டுக்குடும்பத்தின் ஒரே பெண் குழந்தையான அபியை அவள் அம்மா கோகிலா `பையன்களுடன் விளையாடாதே, டைட்டான உடையை அணியாதே’ என்று அபியின் விருப்பத்துக்கு எதிராகவே சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.

பாத்திர அமைப்பில் பாட்டி, தாத்தா போன்று இருப்பவர்களை அபியின் அப்பா, பெரியப்பா, பெரியம்மா என்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. வளர்ந்த பிள்ளைகளுக்கே இளமையான அம்மா, அப்பா என்று பார்க்க ஆரம்பித்துவிட்ட பிறகு, இப்படிப் பார்ப்பது கொஞ்சம் இடிக்கிறது.

அந்த வீட்டில் பெரியப்பா, சித்தப்பா மகன்களுக்கு இருக்கும் சுதந்திரம் தனக்கு இல்லை என்பது அபியைக் குழம்ப வைக்கிறது. பருவம் அடைந்த அபியை நினைத்து பெரியம்மாவும் பெரியப்பாவும் மகிழ்கிறார்கள். அபியின் அம்மாவும் அப்பாவும் கலங்குகிறார்கள். தனியறையில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் அபியை அவளுடைய அண்ணன், `இந்தச் சிறையிலிருந்து ஓடிப் போய்விடு’ என்கிறான்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

பெண் குழந்தைகளுக்கு வீட்டில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், அவர்களை இயல்பாகவே கேள்வி கேட்கவும் எதிர்க்கவும் தூண்டிவிடுகின்றன. அவர்களின் கேள்விகளில் நியாயம் இருக்கிறது. அதே போல சமூகம் குறித்த பெற்றோரின் பயத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை. என்ன செய்யப் போகிறாள் அபி? இன்று இரவு 7 மணிக்குப் பார்ப்போம்!

- எஸ். சங்கீதா
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு