Published:Updated:

குழந்தைகளைக் காணாது தவித்த அபி... வேடிக்கை பார்த்த கௌசல்யா... என்ன நடந்தது? #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Co-presenting by ITC Aashirvaad Superior MP Atta )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 38-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...

கெளசல்யாவுக்கு போன் செய்து, குழந்தைகளை அழைத்து வரும்படி வேண்டுகிறாள் அபி. தன்னால் முடியாது என்று சொல்லும் கெளசல்யா, சிறிது கெஞ்சலுக்குப் பிறகு சம்மதிக்கிறார்.

அபியின் வேலை முடியவில்லை என்பதை அறியும் கெளதம், தான் மீதி வேலையை முடித்து அனுப்புவதாகவும் அவளை வீட்டுக்குக் கிளம்பும்படியும் சொல்கிறான்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

வீட்டுக்கு வந்தால் குழந்தைகளைக் காணோம். கெளசல்யாவிடம் கேட்டால், `குழந்தைகளை அழைத்து வர நான் போகவில்லை' என்கிறார். அக்காவும் தம்பியும் அடுத்தவர்களை அலறவிடுவதில் கில்லாடிகளாக இருக்கிறார்கள். இதில் ஓர் அற்ப சந்தோஷம் போலிருக்கிறது! அபி பதறிக்கொண்டிருக்கும்போது சேதுராமன் குழந்தைகளுடன் வருகிறார். நிம்மதியாகிறாள் அபி.

அபி வேலைக்குப் போவதில் மகிழ்ச்சியடைகிறார் சேதுராமன். `சித்தார்த் வேலையை விட்டுவிட்டதால்தான் வேலைக்குப் போகிறேன் என்றும் எத்தனை நாள் போக முடியும் என்று தெரியவில்லை என்றும் சொல்கிறாள் அபி. இந்த விஷயத்தை ஊரில் யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறாள்.

``நான் வீட்டில் சொல்லவே மாட்டேன் அபி. சொன்னால் அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு அத்தனை பேரும் இங்கே வந்து, உன்னைத் தாளிச்சிடுவாங்க. கெளசல்யா இருக்கிறதுனால நான் கிளம்பறேன். ரெண்டு நாள் இங்கதான் இருப்பேன். என்ன உதவின்னாலும் போன் பண்ணு” என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறார் சேதுராமன்.

ஓர் ஆண் வேலைக்குப் போவது எவ்வளவு இயல்பான விஷயமாக இருக்கிறது! ஒரு பெண் வேலைக்குப் போவது என்றால், வீட்டை, குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு, குடும்பத்தினரின் விருப்பு வெறுப்புகளையும் சமாளித்துக்கொண்டுதானே செல்ல வேண்டியிருக்கிறது. இது மாற இன்னும் நூற்றாண்டுகள் ஆகுமோ?

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

மறுநாள் சித்தார்த் வந்தவுடனேயே, ``பெரியவங்களை இப்படித்தான் எடுத்து எறிந்து பேசுவீயா, மரியாதை தெரியாதா? அவங்க என் அக்கா. நம்ம குழந்தைகளைப் பார்த்துக்க வந்திருக்காங்க” என்று கத்துகிறான்.

``நான் எதுவும் மரியாதைக் குறைவா பேசலை. என் சுயமரியாதைக்கு பாதிப்பு வந்ததால்தான் பதில் சொன்னேன்” என்கிறாள் அபி.

“எல்லாம் அவன் சொல்லிக் கொடுக்குறதுதான். அவன் நேரடியா கேட்க வேண்டியதை எல்லாம் இவள் மூலமா பேச வைக்கிறான். எல்லாத்தையும் உனக்காகவும் குழந்தைக்ளுக்காகவும்தான் பொறுத்துக்கிறேன்” என்று கண்ணீர் வடிக்கிறார் கெளசல்யா.

யார் என்று கேட்க, சேதுராமன் என்று அபி சொல்ல, சித்தார்த் முகம் மாறுகிறது. இனி?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!


- எஸ்.சங்கீதா

அடுத்த கட்டுரைக்கு