Published:Updated:

அபியின் இன்னிங்ஸ் ஆரம்பம்... வாயடைத்துப்போன சித்தார்த் - கௌசல்யா! #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Co-presenting by ITC Aashirvaad Superior MP Atta )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 39-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...

``என் புருஷனுக்கு வேலை போயிருச்சு. நான்தான் இந்தக் குடும்பத்தைக் காப்பாத்தறேன். எனக்குப் பிடிச்சவங்களைக் கூப்பிடுவேன்னு முடிவு பண்ணிட்டீயா?” என்று கத்துகிறான் சித்தார்த்.

தம்பிக்கு வேலை போன அதிர்ச்சியைவிட, அதை அபி சொல்லவில்லை என்று கோபப்படுகிறார் கெளசல்யா. யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சித்தார்த் சொன்னதைக்கூட அவளைச் சொல்லவிடவில்லை. ``அவனே தனக்கு வேலை போனதை எப்படிச் சொல்வான்? என்கிட்ட சொல்லணும்னு உனக்குத் தோண வேணாமா?” என்று கேட்கிறார்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

``வேலை விஷயமாதான் ஹைதராபாத் போயிட்டு வந்தேன். என்னோட தகுதிக்கு இது சாதாரணம். இன்னொரு வேலை டிரை பண்றேன். அது கிடைச்சா யுகே போயிடுவேன்” என்று அக்காவைச் சமாதானம் செய்கிறான் சித்தார்த்.

அப்போது சேதுராமன் வர, வீட்டை விட்டு வெளியே போகச் சொல்கிறான் சித்தார்த். ``ஏன் இப்படி அசிங்கமா நடந்துக்குறீங்க? உங்க அக்காகிட்ட எப்படி நடந்துக்கணும்னு எனக்குப் பாடம் எடுத்துட்டு, இப்ப என் அண்ணன்கிட்ட இப்படி நடந்துக்குறீங்களே? உங்க மனநிலை என்னால புரிஞ்சுக்க முடியுது. அதுக்காக வந்தவங்ககிட்ட இப்படிக் காட்டுறது சரியில்லை” என்று முதல்முறையாக ஆணித்தரமாகப் பேசும் அபியைப் பார்த்து, சித்தார்த்தும் கெளசல்யாவும் வாயடைத்துப் போகிறார்கள்.

`நீ வேலைக்குப் போறதை அவங்களால ஏத்துக்க முடியலைன்னா, அங்கேதான் உன் சக்ஸஸ் இருக்கு. எந்தக் காரணம் கொண்டு வேலையை விட்டுடாதே” என்று சொல்லிவிட்டுக் கிளம்புகிறார் சேதுராமன்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

யுகே வேலை கிடைத்தால் உடனே போக வேண்டும் என்று சித்தார்த் சொல்லும்போது, ``வேலை கிடைக்கட்டும், நீங்க செட் ஆகுங்க, பிள்ளைங்க படிப்பு இந்த வருஷம் முடியட்டும், அப்புறம் போகலாம்” என்கிறாள் அபி. டப்பா வேலைக்கு இவ்வளவு ஆட்டிடியூட் காட்டுவது அதிகம் என்கிறான் சித்தார்த். அவன் அக்கவுன்ட்டில் 40,000 ரூபாய் கிரெடிட் ஆகியிருக்கிறது. அபியிடம் கேட்கிறான். சம்பளம் வந்துவிட்டது என்று சொன்னவுடன், ``இதைச் சீக்கிரம் திருப்பித் தந்துடுவேன்” என்கிறான்.

கெளசல்யா காலையில் ஊருக்குப் போவதாகச் சொல்ல, ஆதிரா குட்டி அம்மாவிடம் தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறாள். ``அத்தை உங்களுக்காகத்தானே வந்திருக்காங்க... அப்படியெல்லாம் பேசக் கூடாது” என்கிறாள் அபி.

தன் அம்மாவை அவமானப்படுத்துவதை எந்தக் குழந்தையால் தாங்கிக்கொள்ள முடியும்?

இனி என்ன?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா

அடுத்த கட்டுரைக்கு