அபி வீட்டுக்கு வந்த பர்த்டே கேக்... சித்தார்த்துக்கு சர்ப்ரைஸா, அதிர்ச்சியா? #VallamaiTharayo
இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 46-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...
அபியின் வேலையை நீண்ட நேரம் இழுத்துவிடுகிறார் வீணா. வீட்டுக்குக் கிளம்பும்போது ஆபீஸ் வண்டி கிடைக்கவில்லை. ஏதோ ஸ்டிரைக் என்று வெளியிலும் கேப் இல்லை. சித்தார்த்துக்கு போன் செய்தால் எடுக்கவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் அபி உட்கார்ந்திருக்கிறாள். அப்போது கெளதம் வருகிறான். தன்னுடன் வரச் சொல்கிறான்.
சித்தார்த் குழந்தைகளுடன் பேசிக்கொண்டிருக்கிறான். அவனிடம் `அவசர வேலை, லேட் ஆகிவிட்டது' என்கிறாள் அபி. `இதை ஏன் என்னிடம் சொல்லிட்டிருக்கிறே' என்று இடத்தைவிட்டு நகர்கிறான் சித்தார்த்.
நிகழ்காலத்தில் ஹோட்டல் அறையில் இருக்கும் அபிக்குக் குழந்தைகள் போன் செய்கிறார்கள். அம்மாவின் பர்த்டேக்காக சர்ப்ரைஸ் கொடுக்க இருப்பதாகவும், `எப்போது வருவீர்கள்' என்றும் கேட்கிறார்கள். `உடனே வர முடியாது, அதுவரை சமர்த்தாக இருக்க வேண்டும்' என்று இணைப்பைத் துண்டிக்கிறாள் அபி.
மீண்டும் அந்தக் காலம்... அப்பார்ட்மென்ட் செகரட்டரியின் மனைவி வருகிறார். நாளை ஒரு மீட்டிங் இருக்கிறது, கண்டிப்பாகக் கலந்துகொள்ள வேண்டும் என்கிறார். சித்தார்த் வருவதாகச் சொல்கிறான்.
அவர் அபியைப் பார்த்து, ``என்ன வேலையில் பிஸி போல? லேட்டா வர்றீங்க?” என்று கேட்கிறார்.
``ஆமாம், பிஸி. அதான் ஆபீஸ் கேபில் வந்தேன்.”
``அது ஆபீஸ் கேப் மாதிரி இல்லையே... பிரைவேட் கார் மாதிரி இருந்ததே? முன்னாடி வேற உட்கார்ந்துட்டு வந்தீங்களே?”
``பின்னாடி என் ஃபிரெண்ட்ஸ் இருந்தாங்க. இன்னொரு ஃபிரெண்டோட காரில் வந்தேன்” என்று அபி சொல்லவும் அந்த அம்மா வந்த வேலை முடிந்த திருப்தியில் செல்கிறார்.
பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பார்க்கக்கூட முடியாத மெக்கானிகல் வாழ்க்கையில், இப்படி யாராவது அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைப்பார்களா? சித்தார்த் இறுக்கமாக இருக்கிறான்.
இரவு 12 மணிக்கு அபிக்கு போன் வருகிறது. ``யாரது, இந்த நேரத்துல? போனை ஆஃப் பண்ணிட்டுத் தூங்கு” என்கிறான் சித்தார்த்.
அனு பர்த்டே விஷ் செய்கிறாள். சித்தார்த் காரணம் கேட்க, `பர்த்டே' என்கிறாள். உடனே, `இதை நீ முதலிலேயே சொல்லக் கூடாதா' என்று கேட்டுச் சிரிக்கும்போது, மீண்டும் காலிங்பெல்.
மனைவியின் பர்த்டேகூடத் தெரியாதவனாக இருக்கும் சித்தார்த்தை என்ன செய்வது?
கதவைத் திறந்தால் பெனிடாவும் லோகேஷும் கேக்குடன் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
கெளதம் பற்றி சித்தார்த்துக்குத் தெரியப்போகிறது என்று புரிகிறது.
இனி என்ன?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!
- எஸ்.சங்கீதா