Election bannerElection banner
Published:Updated:

தொடரும் சொதப்பல்கள்... சித்தார்த்தை எப்போது புரிந்துகொள்வீர்கள் அபி? #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Co-presenting by ITC Aashirvaad Superior MP Atta )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 57-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...

Vallamaiவீட்டில் நடந்ததை விவரிக்கிறாள் அபி. ``சித்தார்த்துக்கு வேலை இல்லைங்கிற விரக்திலதான் இப்படி நடந்துக்குறார்னு எனக்குப் புரியுது. அதுக்காக நீங்க வேலையை ரிசைன் பண்றதெல்லாம் தேவையில்லாதது. அவர் ரெஸ்யூமை எனக்கு அனுப்புங்க. நான் வேலைக்கு ஏற்பாடு பண்றேன்” என்கிறான் கெளதம்.

அபி வீட்டுக்கு வரும்போது ஆதிரா ஹோம் வொர்க் செய்துகொண்டிருக்கிறாள். அப்போது சித்தார்த் வருகிறான். குழந்தையிடம் `என்ன சாப்பிட்டே' என்று கேட்க, பிஸ்கட் மட்டும்தான் என்கிறாள். உடனே சித்தார்த்தைப் பார்க்கிறாள் அபி.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

``நீ இல்லாதப்ப சமைச்சேன். இப்பதான் வந்துட்டீல்ல... சமைச்சுப் போடு. வேலையில்லாமல் வெட்டியா இருக்கறவன்தானே... சமைக்கட்டும்னு நினைச்சியா? இனி அது நடக்காது. எனக்கு ஒரு நல்ல ஆஃபர் வந்திருக்கு. உன்னோட ஆறு மாச சம்பளம் என் ஒரு மாச சம்பளம். நீ கொடுத்ததை எல்லாம் வட்டியோட கொடுத்துடுறேன்” என்கிறான்.

சித்தார்த்துக்கு வேலை கிடைக்கப் போகிற சந்தோஷம் அபியின் முகத்தில் தெரிகிறது. ``ஸ்வீட் செஞ்சிட்டு வரேன்” என்று சொல்லும் அபியிடம், ``நான் என்ன இப்பதான் வேலைக்குப் போறேனா? ஸ்வீட்டெல்லாம் செய்யுறேன்னு சொல்றே?” என்று கத்துகிறான்.

வேலை கிடைப்பதற்குள்ளே யாராவது ஸ்வீட் செய்வாங்களா? ஏன் அபி இப்படிச் சொதப்பிட்டு இருக்கே?!

மறுநாள் காலை இன்டர்வியூவுக்குத் தயாராகிறான் சித்தார்த். அவன் சாப்பிடும்போது, அபியையும் சாப்பிடச் சொல்கிறான். அவள், ``நான் விரதம். உங்களுக்கு வேலை கிடைக்கணும்கிறதுக்காக இருக்கேன். நீங்களும் எவ்வளவோ இன்டர்வியூ போயிட்டு வந்துட்டீங்க. எதுவும் கிடைக்கல. அதனாலதான் இந்த வேண்டுதல்” என்கிறாள்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

சித்தார்த்துக்குக் கோபம் அதிகமாகிறது. ``அப்போ எனக்கு வேலை கிடைக்காது. உன்னோட வேண்டுதல்லதான் எனக்கு வேலை கிடைக்கப்போகுது. அப்போ இத்தனை மாசமும் வேலை இல்லாத வெட்டிப் பயல்னு நினைச்சிட்டிருந்திருக்கே. உன் தயவால் எனக்கு வேலை வேணாம். உட்கார்ந்து சாப்பிடு” என்கிறான். வேறு வழியின்றி அபியும் சாப்பிடுகிறாள்.

இத்தனை வருட வாழ்க்கையில் சித்தார்த் எப்படிப்பட்டவன் என்று தெரியாதா? அபி செய்வதெல்லாம் சித்தார்த்தைவிட நமக்குத்தான் அதிக எரிச்சலூட்டுகிறது.

ஆபீஸில் சேது அபியைப் பார்க்க வருகிறான். அப்போது கெளதமை அறிமுகம் செய்கிறாள் அபி. கெளதமுக்கு ஒரு கால் வருகிறது. ``என்னடா, அந்த ஆளுக்குத் திறமை எல்லாம் இருக்கு. ஆனா, ரொம்ப ஆட்டிடியூட் காட்டறான்” என்று கெளதமின் நண்பன் கத்துகிறான். அபிக்கு அது தெரிய வருகிறது. அந்த ஆள் யாராம்!

இனி என்ன?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு