Published:Updated:

சித்தார்த்தின் ஈகோவை சீண்டிய சேது... சமாதானம் செய்யும் அபி... இனி என்ன? #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Co-presenting by ITC Aashirvaad Superior MP Atta )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 59-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...

கெளதமை அசிங்கப்படுத்தியதோடு, அபி வேலைக்கு வர மாட்டாள் என்று சொன்ன சித்தார்த் மீது கோபம் வரவில்லை என்றால்தான் பிரச்னை. நல்லவேளை, இந்தத் தருணத்திலாவது அபிக்குக் கோபமும் தைரியமும் வந்ததே என்று தோன்றுகிறது.

``நீங்களும்தான் ஐடி கம்பெனியில் வேலை பார்த்திருக்கீங்க. பெண்களிடம் பேசியதே இல்லையா? நான் பேசினால் மட்டும் தப்பா?” என்று அபி கேட்க, ``எனக்கு அவனைப் பார்த்தாலே சுத்தமா பிடிக்கலை. அவன் நல்லவனா தெரியலை” என்று கத்துகிறான் சித்தார்த்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

``இதுதான் உங்ககிட்ட இருக்கிற பிரச்னை. ஒருத்தரைப் பத்தி தெரியாமலேயே பிடிக்கலைன்னு சொன்னா என்ன அர்த்தம்? இதுக்காகத்தான் நான் கெளதம் பத்தி உங்ககிட்ட பேசவே பயந்தேன்” என்கிறாள் அபி.

``நிறுத்து அபி. இனி நீ வேலைக்குப் போக வேண்டாம். தம்பிக்குதான் நல்ல சம்பளத்துல வேலை கிடைச்சிருச்சுல்ல... இனி நீ வீட்டிலிருந்து குழந்தைகளைப் பார்த்துக்க” என்கிறார் கெளசல்யா.

கணவன், மனைவி பேசும்போது உறவினர்கள் உள்ளே நுழைந்தால் அது பிரச்னையைப் பெரிதாகத்தான் மாற்றும். ஒதுங்கியிருப்பதுதான் நல்லது. ஆனால், கெளசல்யாவால் அது முடியாத காரியம். பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது வருமானத்துக்காக மட்டுமில்லை. அது ஒரு தன்னம்பிக்கை. சொந்தக் காலில் நிற்கிறோம் என்கிற பெருமிதம். ஒரு சுதந்திர உணர்வு.

``அந்த வேலையே கெளதம் வாங்கித் தந்ததுதான். உங்க அருமைத் தம்பியின் குணம் பார்த்து வேலை கொடுக்க முடியாதுன்னு சொன்னாங்க. அபிதான் கெளதம்கிட்ட கெஞ்சி இந்த வேலையை வாங்கிக் கொடுத்திருக்கா” என்று சேது சொன்னவுடன், அதிர்ச்சியில் மாடிக்குச் சென்றுவிடுகிறான் சித்தார்த்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

தனியாக இருக்கும் சித்தார்த்திடம், தன் அண்ணன் பேசியதற்கு மன்னிப்பு கேட்கிறாள் அபி. `அமைதியாக இருக்க வேண்டாம், ஏதாவது பேசுங்கள்' என்கிறாள். ``எல்லாத்தையும் பேசிட்டு, இப்ப டிராமா போடறீயா? நீ ஒரு கிரிமினல். என்னை இத்தனை நாளும் ஏமாத்தியிருக்கே” என்றெல்லாம் ஓவராகப் பேசுகிறான் சித்தார்த்.

ஒட்டுக் கேட்கும் கெளசல்யா, ``என்னை வேணா திட்டிக்க. என் தம்பியை ஒண்ணும் செய்யாதே” என்று எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறார்.

``இனிமேல் எங்க வீட்டுலேருந்தும் உங்க வீட்டுலேருந்தும் யாரும் வர வேண்டாம். மத்தவங்களால்தான் நமக்குள் பிரச்னை வருது. எல்லாத்தையும் விட்டுடுங்க. நாளை ஆபிஸ் போறது பற்றி மட்டும் யோசிங்க" என்கிறாள் அபி.

இதற்கு மேலும் சித்தார்த் வேலைக்குப் போவானா என்ன? எந்த நம்பிக்கையில் அபி இப்படிப் பேசுகிறாள் என்று தெரியவில்லை.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

``கெளதம் கண்ணியமானவன். நான் கேட்டதால்தான் உதவி செய்தான்" என்று அபி சொல்ல, ``புருஷன்கிட்ட பேசும்போது அவனைப் பத்திப் பேசறியே... உனக்கு அசிங்கமா இல்லையா? இப்பவே ஜாயின் பண்ணலைனு மெயில் அனுப்பப் போறேன்” என்று அலறுகிறான் சித்தார்த்.

இனி என்ன ஆகும்?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா
அடுத்த கட்டுரைக்கு