கௌதமைத் தாக்கிய சித்தார்த்... சீறும் அபி... என்ன நடந்தது? #VallamaiTharayo
இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 61-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...
வீட்டுச் செலவுகளுக்காக காரை விற்கிறான் சித்தார்த். அப்போது அந்த வழியே வரும் கெளதம், சித்தார்த்திடம் பேச வருகிறான்.
``நான் எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவேன். எல்லோருக்கும் உதவி செய்வேன். அது என் இயல்பு. நீங்க எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்குறீங்க... ஆபீஸில் ஆண்களும் பெண்களும் பேசிக்கிறது சகஜமானது. அது உங்களுக்கே தெரியும்” என்று கெளதம் சொல்லச் சொல்ல, சித்தார்த்துக்குக் கோபம் அதிகமாகிறது.
``நீங்க லேடீஸ்க்கு மட்டும்தான் ஹெல்ப் பண்ணுவீங்களோ? ஆண்களுக்கெல்லாம் பண்ண மாட்டீங்களே... உன்கிட்ட பேச எனக்கு ஒண்ணும் இல்ல...” என்று கத்துகிறான்.
“நீங்க ஒரு பத்து நிமிஷம் டைம் கொடுத்தால், உங்களுக்குப் புரிய வச்சிடுவேன். அநாவசியமா ஒருத்தரோட கரியரை ஸ்பாயில் பண்ணாதீங்க” என்கிறான் கெளதம்.
உடனே கோபம் வந்து டீ கிளாஸைத் தூக்கி அடிக்கிறான் சித்தார்த்.
வீட்டுக்கு வந்தவன் அபியிடம் செலவுக்குப் பணம் கொடுக்கிறான். இது தன்னுடைய வீடு என்றும் இங்கே செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் தன்னுடையதாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறான். பணம் எப்படி வந்தது என்று அபி கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது.
``காரை வித்துட்டு செலவு செய்ய வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு? ஏன் இவ்வளவு ஈகோவோட இருக்கீங்க. என் அக்கவுன்ட்லதான் பணம் இருக்கே... யார் செலவு செஞ்சா என்ன?” என்று அபி கேட்க, சித்தார்த் கோபமாகக் கத்துகிறான்.
பெனிடா, போனில் கெளதமுக்கு அடிபட்ட விஷயத்தைச் சொல்கிறாள். அபி பதறிக்கொண்டு மருத்துவமனை செல்கிறாள். கண்ணுக்கு மேல் காயத்துடன் இருக்கும் கெளதமிடம் காரணம் கேட்கிறாள். அவன் மறைக்கிறான்.
``பெனிடா சொல்லிட்டா. இது சித்தார்த்தால ஏற்பட்ட காயம்தான். அவர் எப்படி உங்களை இப்படிச் செய்யலாம்?”
``விடுங்க அபி. நான் வேற ஆபீஸ் போகப் போறேன். நீங்க கரியரை விட்டுடாதீங்க” என்கிறான்.
``நீங்க ஏன் இப்படிப் பண்றீங்க? நாம ரெண்டு பேரும் எந்தத் தப்பும் பண்ணாம எதுக்கு தண்டனை அனுபவிக்கணும்? இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்” என்று சொல்லிவிட்டு, அபி கிளம்புகிறாள்.
ஹர்ஷிதா அபியிடம் பேசுகிறாள். நடந்த விஷயங்களைச் சொல்கிறாள் அபி.
``ஆணாதிக்கச் சிந்தனையுள்ளவங்களுக்கு எல்லாம் எதுவும் புரியாது. இதில் சந்தேகப்புத்தி வேற. அமைதியா இருக்காதீங்க அபி. உடைச்சுப் பேசுங்க. இல்லைன்னா வாழ்க்கையே நரகமாகிடும்” என்று சொல்லி அனுப்பிகிறாள் ஹர்ஷிதா.
அபி என்ன செய்யப் போகிறாள்?
இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்
- எஸ். சங்கீதா