Published:Updated:

அபியின் வாழ்வில் அடுத்தடுத்து அரங்கேறும் நாடகங்கள்... அடுத்து என்ன? #VallamaiTharayo

Vallamai Tharayo
Vallamai Tharayo ( Co-presenting by ITC Aashirvaad Superior MP Atta )

இந்தியாவின் முதல் யூடியூப் டெய்லி சீரிஸான `வல்லமை தாராயோ’ குறித்து தினம்தோறும் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார் விகடன் வாசகர். 65-வது எபிசோடு குறித்த அவரின் கருத்துகள் இங்கே...

வீட்டுக்கு வந்த சித்தார்த் பித்துப் பிடித்தவன்போல் அமர்ந்திருக்கிறான். கெளசல்யாவுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்கிறான். ``டேய், கொஞ்ச நேரம் வெளியில் வச்சா, அவ தப்பை உணர்வான்னு சொன்னா, ராத்திரி முழுவதுமா நிக்க வைப்பே, என்னடா சொல்றே. வாட்ச்மேன், செகரட்டரி எல்லாம் பார்த்துட்டாங்கன்னு வேற சொல்ற. ஏண்டா, இப்படி யோசிக்காமல் செஞ்சே? அவளுக்கு ஏதாவது சிக்கல் ஆச்சுன்னா நீதான் மாட்டுவே. இப்போ ஆம்பளைங்களுக்கு யாரும் சப்போர்ட் பண்றதில்லை. சரி, விடு. உடனே அபிக்கு போன் செஞ்சு விசாரி. அதுக்கு அப்புறம் எனக்குத் தகவல் சொல்லு” என்கிறார் கெளசல்யா.

அதாவது, சித்தார்த் செய்தது பெரிய குற்றமில்லை, அதை மற்றவர்கள் பார்த்ததில்தான் பிரச்னை வரும் என்று பயப்படுகிறார் கெளசல்யா. ஒருவன் தவறு செய்யும்போது அதைத் தவறு என்று சொல்லாதவர்களும் இந்தக் குற்றத்தில் பங்கு வகிக்கிறார்கள்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

சித்தார்த் யோசனையோடு அபிக்கு போன் செய்கிறான். போனை எடுக்கும் ஹர்ஷிதா, ``ஏங்க நீங்க எல்லாம் மனுஷனா? நைட் முழுக்க வெளியில நிக்க வச்சிருக்கீங்க? இது மனித உரிமை மீறல்” என்கிறாள்.

``நீங்க யாரு என் வொயிஃபை ஹாஸ்பிடலில் சேர்க்க? எனக்குத் தெரியாதா? போனை அவகிட்ட கொடுங்க” என்று கத்துகிறான் சித்தார்த்.

அபி பதறுகிறாள். கெளதம் போனை வாங்கி, ``சார், புரிஞ்சுக்கோங்க... அவங்கள உடனே அட்மிட் பண்ணினதால ரிஸ்க் இல்லை. நீங்க உடனே ஹாஸ்பிடல் வாங்க” என்கிறான்.

``நீ யாருடா என் வீட்டுக்கு வந்து என் வொய்ஃபை அழைச்சிட்டுப் போவ. என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது? அவகிட்ட போனை கொடுடா” என்கிறான் சித்தார்த்.

``என்ன அபி பண்றே? ஒரு வேலையை முடிச்சிட்டு வர்றதுக்குள்ளே அவனைக் கூப்பிட்டு ஹாஸ்பிடலில் சேர்ந்துட்டீயா? நீ என்னவோ பிளான் பண்ணிட்டே. இனி நீ சரி வர மாட்டே. உன்னை என்ன செய்யணும்னு தெரியும்” என்று போனை வைக்கிறான்.

Vallamai Tharayo
Vallamai Tharayo
Screenshot from Vikatan TV

``ஹர்ஷிதா, நாம அவசரப்பட்டுட்டோம். அவர் நம்ம கூட்டிட்டு வந்ததைத்தான் திரும்பத் திரும்பச் சொல்றார்” என்று வருத்தப்படுகிறான் கெளதம்.

ஸ்கூலுக்குச் சென்ற குழந்தைகளை அழைத்து வருபவன், துணிகளை எடுத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்புகிறான். ஆதிரா அம்மாவைக் கேட்டுக்கொண்டே இருக்கிறாள்.

இதைப் பார்த்த வாட்ச்மேன் அபிக்கு போன் செய்கிறார்.

அபி பதறுகிறாள். ``குழந்தைகளை அழைச்சிட்டு கோயம்பேடு போயிட்டாராம். இப்படியெல்லாம் நடக்கக் கூடாதுன்னுதான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட் டேன்” என்று அழுகிறாள் அபி.

கெளசல்யா வீட்டுக்கு வந்து சேர்கிறான் சித்தார்த்.

இனி என்ன?

திங்கள் இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா

அடுத்த கட்டுரைக்கு