Published:Updated:

வெல்டன் அபி... வெல்கம் அபி! `வல்லமை தாராயோ'- வெற்றிக்கதை

வல்லமை தாராயோ
பிரீமியம் ஸ்டோரி
வல்லமை தாராயோ

இந்த யூடியூப் சீரிஸில் ஒரு பெண்ணோட கதையைக் காட்சி யாக்கியிருக்கோம். ஆனால், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சொல்லப்படாத பல கதைகள் ஒளிஞ்சிருக்கு.

வெல்டன் அபி... வெல்கம் அபி! `வல்லமை தாராயோ'- வெற்றிக்கதை

இந்த யூடியூப் சீரிஸில் ஒரு பெண்ணோட கதையைக் காட்சி யாக்கியிருக்கோம். ஆனால், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சொல்லப்படாத பல கதைகள் ஒளிஞ்சிருக்கு.

Published:Updated:
வல்லமை தாராயோ
பிரீமியம் ஸ்டோரி
வல்லமை தாராயோ

`விகடன் டெலிவிஸ்டாஸ்’ மற்றும் ‘மோஷன் கன்டென்ட் குரூப்’ இரண்டு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கியிருக்கும், இந்தியாவின் முதல் டெய்லி யூடியூப் சீரிஸ் ‘வல்லமை தாராயோ' விரைவில் முக்கியமான மாற்றத்தை நோக்கி நகர இருக்கிறது. பெண்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இந்த சீரிஸ், ஆண்களின் மனதில் மாற்றத்துக்கான விதையை விதைத்துள்ளது. ஒவ்வொரு பெண்ணின் உணர்வையும் காட்சிகளாக்கி, கனவுகளுக்கும் சுதந்திரத்துக்கும் இடையேயான மெல்லிய கோட்டில் பயணிக்கும் வல்லமை தாராயோ சீரிஸின் ஸ்கிரிப்ட் ரைட்டர் வே.கி.அமிர்தராஜிடம் பேசினோம்.

 அமிர்தராஜ்
அமிர்தராஜ்

“என் மகளுக்கோ, மனைவிக்கோ என்ன பிடிக்கும்னு எனக்குத் தெரியாதான்னு கேட்கிறாங்க பலர். இப்படித்தான் குடும்பத்தில உள்ளவங்களின் அக்கறை என்ற பெயரில், ஒரு பெண் தனக்கான அடையாளமே இல்லாமல் போயிடுறாள். பிள்ளைகளின் நலனுக் காகன்னு நெனச்சு பல பெற்றோர்கள் செய்யும் விஷயங்கள், அந்தப் பிள்ளைகள் வளர்ந் ததும் விருப்பு வெறுப்புகளைக்கூட வெளிப் படுத்தத் தெரியாதவங்களாக்கிடுது. ஆணும் பெண்ணும் பிறப்பில் ஒரே வலிமையோடுதான் பிறக்குறாங்க. ஆனால், ஆண் வீரமானவன், பெண் பலவீனமானவள்னு சொல்லிச் சொல்லியே பெண்களை பலவீனப்படுத்தி, சுதந்திரமாக இயங்கவிடாம சார்ந்து வாழப் பழக்கப்படுத்துது இந்தச் சமூகம். இப்படி கண்ணுக்கே தெரியாம, உணர்வுரீதியா நம் வீட்டுப் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் தான் ‘வல்லமை தாராயோ' கதைக் களம்.

இந்த யூடியூப் சீரிஸில் ஒரு பெண்ணோட கதையைக் காட்சி யாக்கியிருக்கோம். ஆனால், ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் சொல்லப்படாத பல கதைகள் ஒளிஞ்சிருக்கு. இன்னும் சொல்ல ணும்னா, ஜெயிச்சு உலகமே கொண்டாடும் இடத்துல உள்ள பெண்களுக்குள்ளும்கூட போராட்டத்தின் வலி மிச்சம் இருக்கும்.

‘முதல் குழந்தை பெண்ணா பொறந்துட்டா, ‘கவலைப் படாதப்பா, அடுத்தது ஆம்பள புள்ள பொறக்கும்’னு சொல்ற வழக்கம் இன்னும் நம்ம சமூகத்தில் மாறல. இதுகூட கண்ணுக்குத் தெரியாத ஒரு வன்முறைதான். பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுத்துக் கொலை செய்யும் பழக்கம் குறைஞ்சுருச்சு என்பதற்காக, சமுதாயத்தில் பெண்கள் கொண்டாடப் படுறாங்கனு சொல்லிட முடியாது. சுதந்திரக் காற்றை சுவாசிக்க, வீட்டின் கதவைத் திறக்க முடியாம திணறும் பெண்கள்தான் இங்கு ஏராளம். அதையெல்லாம் உடைச்சு வெளியே வந்தாலும் குடும்பப் பொறுப்பு, சந்தேகம், பிள்ளைகளைச் சரியாகப் பார்த்துக்க முடியலைங்கிற குற்ற உணர்வுனு ஏதோ ஒரு வளையம் பெண்களைச் சுத்தி இருந்துட்டேதான் இருக்கு.

வெல்டன் அபி... வெல்கம் அபி!
`வல்லமை தாராயோ'- வெற்றிக்கதை

தான் ஆண் என்கிற கர்வம், கிட்டத்தட்ட அத்தனை ஆணுக்குள்ளும் சின்ன அளவிலாவது இருக்கத்தான் செய்யுது. அந்தக் கர்வம், வீட்டில் இருக்கும் பெண்கள் தன் எண்ணப்படிதான் நடக்கணும்னு எதிர்பார்க்க வைக்கும். `வல்லமை தாராயோ'வில் சித்தார்த் கேரக்டரும் அதையே பிரதிபலிக்குது. அது தலைமுறை தலைமுறையா மனசுக்குள் விதைக்கப்பட்ட விஷம்.

மாற்றத்தை உடனே கொண்டு வந்துட முடியாது. ஆனா, மாற வேண்டிய நேரம் இது. அதையெல்லாம் அபி கேரக்டர் மூலம் `வல்லமை தாராயோ' பேசியிருப்பதால் நிறைய பெண்களோடு கனெக்ட் ஆயிருச்சு. ஒவ்வொரு நாளும் சீரிஸ் பார்க்கிற பெண்கள், இந்தச் சூழலை நானும் கடந்து வந்துருக்கேன், இந்தச் சூழலைக் கடக்க முடியாமல் கனவுகளைத் தொலைச்சுட்டேன்னு கமென்ட் பாக்ஸில் அவங்க வேதனைகளைக் கொட்டித் தீர்க்கிறாங்க. அதுதான் இந்த சீரிஸின் வெற்றி.

போட்டுக்கிற டிரஸ்ஸில் தொடங்கி, கட்டிக்கிற கணவன் வரை வேறு யாரோ ஒருத்தருக்குப் பிடிச்சதைத் தான் ஒரு பெண் ஏத்துக்க வேண்டிய சூழல் இருக்கு. அந்தச் சூழலை உடைச்சு எறிஞ்சு தனக்காக வாழ நினைக்கிற பெண்களுக்கு ‘திமிர் பிடிச்சவ, வீட்டுக்கு அடங்காதவ, படிச்ச திமிர்ல பேசறா'ங்கிற முத்திரைகளைக் குத்திடறாங்க. அவங்க விருப்பு வெறுப்புகளைச் சொல்லவிடாமலேயே வளர்த்து, அடுத்தவங்களை நம்பி இயங்கும் சூழலை இந்தச் சமுதாயம்தான் ஒரு பெண்ணுக்கு உருவாக்கிக் கொடுக்குது. ஒருகட்டத்தில் இந்த அழுத்தங்கள் பயமா மாறி `வல்லமை தாராயோ'வில் அபி கேரக்டர் போல, நாம் பண்றது சரியா, தப்பானு குழப்பத்திலேயே இருக்கும் பெண்களா மாறி, தயக்கத்துடனே பயணிக்க ஆரம்பிக்கிறாங்க.

நல்லா சம்பாதிப்பது, குழந்தை களையும் குடும்பத்தையும் பார்த்துக்கிறது, எதிர்காலத்துக்காக ஓடுறது மட்டும் ஆண்மை ஆகிடாது. குடிப்பழக்கம் எவ்வளவு கெட்டதோ, தீமையானதோ அதைவிட ஆயிரம் மடங்கு கெட்டது வீட்டிலிருக்கும் பெண்களை சுதந்திரமாக யோசிக்கவிடாமலும், செயல்பட விடாமலும் தடுக்கிறது. தன் வீட்டுப் பெண்களைத் தனக்கு சரிசமமா நடத்தணுங்கிறது ஆண்களுக்கு இருக்க வேண்டிய அவசியமான குணம்.

`வல்லமை தாராயோ' மூலம் அந்த மாற்றத்துக்கு முயற்சி பண்ணி யிருக்கோம். இனி பெண்கள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் நிச்சயம் ஒரு பாதையா உருவாகும்” என்று நம்பிக்கை பொங்கச் சொல்கிறார் அமிர்தராஜ்.

வெல்டன் அபி... வெல்கம் அபி!