Published:Updated:

"சரி சரி ரசத்தை ஊத்து..." எப்படியிருக்கிறது வெங்கட் பிரபுவின் `லைவ் டெலிகாஸ்ட்'?!

லைவ் டெலிகாஸ்ட்

'சென்னை 28' படத்துக்கு முன்னர் வெங்கட் பிரபு எடுக்க நினைத்திருந்த கதை இதுவாம். உண்மையில், தொடரின் மேக்கிங்கும் அப்படித்தான் இருக்கிறது. இடையில் இதே கதையின் சாயலில் லாரன்ஸ் வேறு 'காஞ்சனா 2' எடுத்துவிட்டார் என்பது தனிப் பேய்க்கதை.

"சரி சரி ரசத்தை ஊத்து..." எப்படியிருக்கிறது வெங்கட் பிரபுவின் `லைவ் டெலிகாஸ்ட்'?!

'சென்னை 28' படத்துக்கு முன்னர் வெங்கட் பிரபு எடுக்க நினைத்திருந்த கதை இதுவாம். உண்மையில், தொடரின் மேக்கிங்கும் அப்படித்தான் இருக்கிறது. இடையில் இதே கதையின் சாயலில் லாரன்ஸ் வேறு 'காஞ்சனா 2' எடுத்துவிட்டார் என்பது தனிப் பேய்க்கதை.

Published:Updated:
லைவ் டெலிகாஸ்ட்
பேயை லைவாகக் காட்டினால் கல்லா கட்டலாம் என நினைக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும், அதன் முடிவுகளும்தான் ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸான 'லைவ் டெலிகாஸ்ட்'டின் ஒன்லைன்.

பேய்க் கதைகளை மையமாக வைத்து நிகழ்ச்சி நடத்துகிறார் ஜென்னி. நிகழ்ச்சிக்குத் திடீரென பிரச்னை வர, புதிதாக வேறொரு ஐடியா பிடிக்கிறது அவர் குழு. பேய் இருக்கும் வீட்டுக்குச் சென்று, அதை லைவாகப் படம் பிடித்தால் ஷோ பிச்சிக்கும் என யாரோ ஐடியா தர, அதைப் பின்பற்றுகிறார்கள். வீட்டுக்குள் வந்தவர்களை, 'இது ஒரு வழி பாதை' என பேய் போக்குக்காட்ட அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை 7 எபிசோடுகளாக நீட்டி எடுத்திருக்கிறார்கள்.

லைவ் டெலிகாஸ்ட்
லைவ் டெலிகாஸ்ட்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷோ இயக்குநர் ஜென்னியாக காஜல் அகர்வால். ஓடிடி என வந்தபின் கெட்ட வார்த்தை பேசாமல் இருக்க முடியுமா? ஒரு லோடு கெட்ட வார்த்தைகளையும், சிகரெட்களையும் காஜலுக்கு பார்சல் கட்டியிருக்கிறார்கள். கலை இயக்குநராக வைபவ், மேக் அப் கலைஞராக கயல் ஆனந்தி, கேமரா மேனாக 'குக் வித் கோமாளி' அஷ்வின் பின்னர் தேவைக்கேற்ப வெங்கட் பிரபுவின் குழுவில் இருந்து சில நடிகர்களை ஆங்காங்கே தூவியிருக்கிறார்கள். நான், என் பொண்ணு, என் பையன் அப்புறம் பேய் என வாழும் தாயாக 'வெயில்' பிரியங்கா. வைபவ் மற்ற படங்களில் என்ன செய்வாரோ அதையே இதிலும் செய்திருப்பதால், அது மட்டும்தான் இயல்பாக இருக்கிறது. மிரட்சிக்கான பாதி வேலையை காஜலின் கண்கள் சிறப்பாக செய்துவிடுகிறது. மீதியை காஜல் செய்துவிடுகிறார். சில காட்சிகளில் அறிமுக நடிகர் அஷ்வின் தரும் ரியாக்‌ஷன்களைக்கூட மற்றவர்கள் தர மறுக்கிறார்கள். அதிலும் 'ஓவர் ஆக்ட் பண்ணாத' என விஜேவாக வரும் டேனியல் இன்னொருவரைக் கலாய்க்கிறார். ஆனால், அவரே அதுதான் செய்கிறார்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சென்னை 28 படத்துக்கு முன்னர் வெங்கட் பிரபு எடுக்க நினைத்திருந்த கதை இதுவாம். உண்மையில், தொடரின் மேக்கிங்கும் அப்படித்தான் இருக்கிறது. இடையில் இதே கதையின் சாயலில் லாரன்ஸ் வேறு 'காஞ்சனா - 2' எடுத்துவிட்டார் என்பது தனிப்பேய்க்கதை. வெப் சீரிஸ் என்பதாலேயே ஏகத்துக்கும் நீள்கின்றன சில காட்சிகள். ஏங்க அவரென்ன அசிஸ்டென்ட் கமிஷனர் ராகவனா, அவருக்கு எதுக்குங்க பேக் ஸ்டோரி எல்லாம்?

Live Telecast
Live Telecast

லைவ் ஷோ கான்செப்ட், அதில் நம்பகத்தன்மைக்கு 'நீயா நானா' கோபிநாத்தைச் சேர்ப்பது என சில விஷயங்களில் ஈர்க்கிறார் வெங்கட் பிரபு. பேய்ப் படங்களுக்கே உரிய சில லாஜிக் மீறல்களைப் புறந்தள்ளலாம் என்றாலும், திரைக்கதையின் தொய்வு அதையெல்லாம் ஞாபகப்படுத்துகிறது. காஞ்சூரிங் சிலுவைப் பேய்களையும், லாரன்ஸின் தர்க்கா பேய்களையும் பார்த்துப் பழகிய ரசிகர்கள் முன் தாயத்துப் பேயை காட்சிப்படுத்தியிருக்கிறார் வெங்கட். ஆனால், அது டெரரர் ஃபீல் இல்லாமல், 'சரி சரி ரசத்த ஊத்து' மோடில் இருப்பதுதான் வருத்தம். பேய்ப் படங்களில் கதைக்குப் பக்கபலமாக இருப்பது நடிப்பும், பின்னணி இசையும்தான். கதை ஏரியாவை வெங்கட் சரியாக எழுதியிருந்தாலும், பிரேம்ஜியின் பின்னணி இசையும், நடிகர்களின் செயற்கையான நடிப்பும் நம் பொறுமையைச் சோதிக்கிறது.

பேய்ப் படங்கள் எவ்வளவோ மாறிவிட்டன. அடல்ட் காட்சிகள் இல்லாமல் சீட் எட்ஜ் த்ரில்லராக சில படங்கள் அப்கிரேட் ஆகியிருக்கின்றன. சில படங்கள் காமெடி கதகளி என வேறு டிராக்கில் பயணம் செய்கின்றன. வெங்கட் பிரபுவின் லைவ் டெலிகாஸ்ட் தொடரை த்ரில்லர், பயம், காமெடி என எதுவுமே முழுமையாக இல்லாமல் மையமாகவே இறுதி வரை உருட்டியிருப்பதுதான் அதன் மைனஸ்.

லைவ் டெலிகாஸ்ட்
லைவ் டெலிகாஸ்ட்
திரைத்துறையில் இருந்து பெரிய பட்டாளமே ஒடிடிக்கு வந்துவிட்டது. ஆனால், இன்னமும் சுவாரஸ்யமாக நாம் பார்க்க அவர்கள் பெரிதாக எதுவும் மெனக்கெடவில்லை. ஒருவேளை நம்மை மீண்டும் திரையரங்குகளுக்கு வர வைப்பதுதான் இவர்களின் டெக்னிக்கோ!