Published:Updated:

"பசங்க பொண்ணுங்க ஒரே வீட்டுல தங்கியிருக்கிறது தெரிஞ்சா..." `ஆதலினால் காதல் செய்வீர்' ப்ரோமோ!

லவ், ரிலேஷன்ஷிப், சண்டை எனப் பல உணர்வுகளும் தூவப்பட்டு இன்றைய டிஜிட்டல் தலைமுறை, அவர்களது பெற்றோர் தலைமுறை எனக் கதை விரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விகடன் டெலிவிஸ்டாஸ் மற்றும் மோஷன் கன்டென்ட் குரூப் இணைந்து வழங்கும் 'ஆதலினால் காதல் செய்வீர்' டிஜிட்டல் டெய்லி சீரிஸின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கடந்தாண்டு இந்தியாவின் முதல் டிஜிட்டல் சீரிஸ் என்கிற பெருமையுடன் இதே கூட்டணி வெளியிட்ட 'வல்லமை தாராயோ' தொடருக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அடுத்த படைப்பு 'ஆதலினால் காதல் செய்வீர்'.

படிப்பு, பணி முதலான காரணங்களுக்காக ப‌ல பகுதிகளில் இருந்து தலைநகர் சென்னைக்கு வந்து சேரும் பலவிதமான குடும்பப் பின்னணிகளைக் கொண்ட ஆறு பேர்தான் கதையின் மையக் கதாபாத்திரங்கள். அந்த ஆறு பேருடைய குடும்பங்களுமே தொடரில் வந்து போகின்றன.

சென்னை அவர்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதுதான் தொடரின் ஒன்லைன்.

ஆதலினால் காதல் செய்வீர்
ஆதலினால் காதல் செய்வீர்

''ஒரே வீட்டுல பசங்களும் பொண்ணுங்களுமா தங்கியிருக்கறது மட்டும் என் வீட்டுக்குத் தெரிஞ்சா...'' என அந்த ஆறு பேரில் ஒருவரான காயத்ரி பேசுகிற அந்த சில விநாடி வசனம் தொடர் மீது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

லவ், ரிலேஷன்ஷிப், சண்டை எனப் பல உணர்வுகளும் கலந்து இன்றைய டிஜிட்டல் தலைமுறை, அவர்களது பெற்றோர் தலைமுறை எனக் கதை விரிகிறது.

தொலைக்காட்சித் தொடர்கள் பலவற்றை இயக்கிய ராஜிவ்.கே.பிரசாத் இயக்க, 'திருமதி செல்வம்' முதல் 'தமிழும் சரஸ்வதியும்' வரை திரைக்கதையை வடிவமைத்த வே.கி.அமிர்தராஜ் திரைக்கதை எழுதியிருக்கிறார். கதை ஜோ.ஜார்ஜ்.

விகடன் டெலிவிஸ்டாஸ் யூடியூப் சேனலில் ஆகஸ்ட் 23 முதல் இரவு 8.30க்கு ஒளிபரப்பாகிறது தொடர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு