இனி வாரா வாரம் நாலு OTT படைப்புகள் பற்றி

ஒரு குட்டி ஸ்டோரி...

6 நொடிகளில் நம்மால் என்ன செய்துவிட முடியும்? குறைந்தது ஒரு புத்தகத்தின் 6 பக்கங்களைப் புரட்டிவிடலாம். உங்கள் கவனத்தை ஈர்க்காத 2 ஃபேஸ்புக் வீடியோக்களை ஸ்க்ரோல் செய்யலாம். K, CU, TC என இன்டர்நெட் மொழியில் 3 மெசேஜ்களைத் தட்டிவிடலாம். ஆனால், சில அசாத்திய திறமைசாலிகள் இருக்கிறார்கள், Speedcubers. அசாத்திய வேகத்தில் ரூபிக்ஸ் க்யூப்களை சரியான நிலைக்குக் கொண்டுவரும் சூரர்கள்.

Speedcubers என்ற நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படம், மேக்ஸ் பார்க் (Max Park), ஃபெலிக்ஸ் ஸ்மெட்ஜஸ் (Feliks Zemdegs) என்னும் இப்படியான அசகாய சூரர்கள் இருவரைப் பற்றியது. ஃபெலிக்ஸ் உலக சாதனைகளைப் படைத்தவர். மேக்ஸ் வயதில் இளையவர். ஃபெலிக்ஸின் அத்தனை உலக சாதனைகளையும் மேக்ஸ் உடைக்கிறார். ஃபெலிக்ஸின் பதிலடி என்னவாக இருக்கும்..?

ஒரு விளையாட்டைச் சேர்ந்த இருபெரும் வீரர்களின் மோதல் என்ற பிரிவில் இதுவரையில் நாம் பார்த்த, கேட்ட அத்தனை கதைகளையும் வீழ்த்தக்கூடியது ஃபெலிக்ஸ்-மேக்ஸின் கதை. இது நட்பின் கதை. ஃபெலிக்ஸின் ஒவ்வொரு சாதனையையும் மேக்ஸ் முறியடிக்கும்போது அவருக்கு வாழ்த்து சொல்வதும், தோல்வியைத் தழுவும்போது அரவணைப்பதும் ஃபெலிக்ஸ்தான். வேகமும் விறுவிறுப்புமான ஆவணப்படம்.

ஒரு கூலிப்படையிடம் தீவிரவாத முகாம்களை அழிப்பதற்கான ரகசிய வேலை வந்து சேர்கிறது. களத்தில் இறங்கிய பிறகு இது தங்களைச் சிக்கவைத்த சூழ்ச்சி என அவர்களுக்குப் புரிகிறது. சுதாரிக்க அவகாசம் இல்லை, சரமாரியாக குண்டு மழை பொழிகிறது. நால்வரும் உடல் முழுக்க சல்லடை சல்லடையாக துளைக்கப்பட்டு இறந்துகிடக்கிறார்கள். சில நிமிடங்களில், அவர்களின் காயங்கள் ஆறுகின்றன. மீண்டும் எழுந்து நிற்கிறார்கள்.

ஆம், இன்னுமொரு சூப்பர் ஹீரோக்கள் சூழ் உலகுதான் The Old Guard. மரணமில்லாத, காயங்கள் தானாகவே ஆறும் தன்மை கொண்ட இந்த சூப்பர்ஹீரோக்கள், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக வரலாறு நெடுக சில முக்கியமான நல்ல விஷயங்களை விதைத்துக்கொண்டே செல்கிறார்கள். அவர்களின் இந்த சூப்பர் பவரைக் கைப்பற்றத்துடிக்கிறது ஒரு குழு. அதை எப்படி முறியடிக்கிறார்கள் என ஆக்ஷன் தெறிக்க தெறிக்க வந்திருக்கிறது நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘ஓல்ட் கார்டு’ திரைப்படம். காதல், நட்பு, சென்டிமென்ட் கொஞ்சம், அதிரடி ஆக்ஷன் ஜாஸ்தி என பக்கா கமர்ஷியல் காக்டெய்லாக இருக்கிறது சார்லஸ் தீரோன் நடிப்பில் வெளியான தி ஓல்டு கார்டு.

தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன், சங்கமம்... யெஸ் கண்டுபிடிச்சுட்டீங்க. அதேதான்! கிளாசிக்கல் இசைக்கும் ராக்ஸ்டார் பேபிக்கும் நடக்கும் இசைப் போராட்டத்தின் வழியாக கசிந்துருகும் காதலே அமேசானில் வெளியாகியிருக்கும் bandish bandits வெப் சீரிஸின் ஒன்லைன். கிளாசிக்கல் இசைக்குடும்ப வாரிசான ராதேவுக்கு எல்லாமே ராகங்கள்தான். யூடியூப் சென்சேசன் தமன்னாவுக்கு பாட்டு என்றாலே அதிரடிதான். ஒரு சுபயோக சுபதினத்தில், புதிய பயணத்துக்காக தமன்னா பைக்கில் புறப்பட, பிறகென்ன இருவரும் சந்திக்கிறார்கள். இசையும் காதலும் இணைகிறது. `யார் ஒசத்தி’ சண்டைகள் என நீள்கிறது இந்தத் தொடர்.

கிளாசிக்கல் இசையின் சூப்பர் சீனியராக நஸ்ருதீன் ஷா, இணைய உலகுக்கு லேட்டஸ்ட் என்ட்ரி. பாடல்களும் இசையும்தான் எல்லாமே என்பதால் ஷங்கர் இஸான் லாய் கூட்டணி அட்டகாசமாக உழைத்திருக்கிறது.

மியூசிக்கல் தொடர், பாடல்கள், கலர்கலரான செட்கள் எல்லாம் இருந்தும், பழகிப்போன கதையும் புளித்துப்போன கிளிஷேக்களும் லைட்டாய் நம்மைச் சோர்வடைய வைக்கின்றன.

இணையச் சூழலில் வதந்தி பரப்புபவர்கள், அவதூறு பரப்புபவர்கள், திட்டமிட்டு சிலரின் புகழ்ச்சியைத் தடுப்பவர்கள் பற்றிப் பேசுகிறது போலந்துத் திரைப்படமான The hater. சமூக வலைதளங்களில் போலி முகவரிகள் உருவாக்கி ஒருவரின் பிம்பத்தைக் காலி செய்வதில் கில்லாடியாய் இருக்கிறான் படத்தின் நாயகன் தொமஸ். அரசியல்வாதி ஒருவரின் பிம்பத்தைக் காலி செய்யும் பணி கொடுக்கப்பட அது அவன் வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றுகிறது என நீள்கிறது கதை. படத்தின் ஷூட்டிங் முடிந்த மூன்று வாரங்களில் நிஜமாகவே போலந்து அரசியல்வாதி ஒருவர் இப்படிக் கொல்லப்பட, படம் உலக வைரல் ஆகிவிட்டது. தற்போதைய இணைய உலகின் முக்கியமான விஷயத்தைப் பேசியிருப்பதால், கவனம் பெற்றிருக்கிறது இந்த நெட்ஃபிளிக்ஸ் திரைப்படம்.