கட்டுரைகள்
Published:Updated:

தமிழ் பேசும் வெப்சீரிஸ்

கண்ணாமூச்சி.
பிரீமியம் ஸ்டோரி
News
கண்ணாமூச்சி.

WEB SERIES

நாம் எல்லோரும் வீட்டில் முடங்கியிருப்பதால் ஒரு வாரத்துக்கு ஒரு வெப் சீரிஸ் அறிமுகம் போதாது என நினைக்கிறேன். ஆகவே, இந்த வாரம் இரண்டு வெப் சீரிஸை விசிட் செய்வோம். இரண்டுமே தமிழில் இருக்கின்றன என்பது கூடுதல் ப்ளஸ்.

கண்ணாமூச்சி.

டுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் தன் பெண் குழந்தையுடன் வாடகைக்குக் குடியேறுகிறார் பிரியா. பொருள்கள் எல்லாம் அடுக்கி, “லெட்ஸ் ஸ்டார்ட்” என்பதற்குள் சிறுமி ஐஷு காணாமல்போகிறாள். காவல்துறை கைவிரிக்க, சிலரின் உதவியுடன் எப்படி தன் குழந்தையைப் பிரியா மீட்டெடுக்கிறார் என்பதுதான் ஜீ5-ல் வெளியாகியிருக்கும் ‘கண்ணாமூச்சி’ ஹாரர் த்ரில்லர் பாணி வெப் சீரிஸின் கதை.

வெப்சீரிஸ்
வெப்சீரிஸ்

சிங்கிள் மதர் பிரியாவாக அட்டகாசமாக நடித்திருக்கிறார் பூர்ணா. மகளைத் தொலைத்த வேதனையில் புலம்புவது, அவளை மீட்கப் போராடுவது என மிரட்டியிருக்கிறார். பிரியாவுக்கு உதவி செய்யும் நபராக வரும் அம்ஜத் கானும் சிறப்பாக நடித்திருக்கிறார். தான் செய்த பிழைக்கான பிராயச்சித்தம் வேறெங்கோ இருக்கிறதென உதவும் அம்ஜத்தின் கதாபாத்திர வார்ப்பு பக்கா. விவேக் பிரசன்னா, போஸ் வெங்கட் போன்றவர்களுக்குப் பெரிய முக்கியத்துவமில்லை.

சமகால அவலமான பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்களைப் பற்றிப் பேசுகிறது கண்ணாமூச்சி. தமிழ் வெப் சீரிஸில் இப்படியான முயற்சி வரவேற்கத்தக்கது. கதை எழுதிய GR ஆதித்யாவுக்கும், இயக்குநர் அவினாஷ் ஹரிஹரனுக்கும் பாராட்டுகள். கண்ணாமூச்சி தீமில் பயமுறுத்துகிறார் இசையமைப்பாளர் KS சுந்தரமூர்த்தி.

ஆனால், இப்படிச் சமூகத்துக்குத் தேவையான கதைக்குத் தட்டையான திரைக்கதையை வைத்து, சோதிக்கிறார்கள். ஐந்து எபிசோடுகள், ஒவ்வொன்றும் வெறும் 25 நிமிடங்களே என்பதால், சட்டென எடுத்து, மதிய உணவுக்குப்பின் பார்த்துவிடலாம்.

புஷ்பவள்ளி

ன் முயற்சியில் சற்றும் தளராத புஷ்பவள்ளி, தான் ஆசைப்பட்ட நபரைத் திருமணம் செய்து கொள்கிறாரா என்பதுதான் அமேசான் சீரிஸில் வெளியாகி யிருக்கும் புஷ்பவள்ளியின் ஒன்லைன்.

வெப்சீரிஸ்
வெப்சீரிஸ்

ஓர் உணவுத் திருவிழாவில் தான் சந்தித்த நிகிலின் மீது புஷ்பவள்ளிக்குக் காதல். என்ன ஆனாலும் சரி, இவர்தான், தான் நினைத்த, ‘மணாளனே மங்கையின் பாக்கியம்’ என முடிவு செய்கிறார். அதற்காக அவர் சொல்லும் பொய்கள், யார் எக்கேடு கெட்டால் என்ன என எடுக்கும் முடிவுகள், எப்படியெல்லாம் புஷ்பவள்ளியையும் மற்றவர்களையும் பாதிக்கின்றன என நகைச்சுவையும் சோகமும் கலந்து சொல்கிறது இந்த வெப் சீரிஸ்.

அமேசான் ப்ரைமில் 2017-ம் ஆண்டு வெளியாகி முதல் சீசன் ஹிட் அடிக்க, இந்த ஆண்டு இரண்டாவது சீசன் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு எபிசோடும் ஏறக்குறைய 20 நிமிடங்கள் தான். பார்க்கும் பெரும்பாலானோருக்கு புஷ்பவள்ளியைத் திட்டித் தீர்க்கத் தோன்றுவதுதான் இந்த வெப் சீரிஸின் ஹிட் ரகசியம். மாடர்ன் சாமியார், ஒரு டஜன் கெட்ட வார்த்தைகளை அடி பிறழாமல் அடித்து வெளுக்கும், புஷ்பவள்ளியின் நண்பர் பங்கஜ் என ஒவ்வொரு எபிசோடிலும் சிரிப்புக்கு ஒரு ஸ்பெஷல் ஐட்டம் வைத்திருக்கிறார்கள்.

இந்த வெப் சீரிஸை எழுதி இயக்கி, புஷ்பவள்ளியாக நடித்திருப்பவர் ஸ்டேண்ட் அப் காமெடியனான சுர்முகி சுரேஷ். பக்கபலமாக பங்கஜாக நவீன் ரிச்சர்டு. ஹாஸ்டல் வார்டனாக வரும் வாசுவும், அவரது பட்லர் இங்கிலீஷும் அமேசான் ப்ரைம் முழுக்க பிரபலம். புஷ்பவள்ளி தன் இயலாமையால்தான் இதெல்லாம் செய்கிறார் என்பதை நாம் யூகிக்கும் முன்னரே தொடர் முடிந்துவிடுவதுதான் இந்தத் தொடரின் ப்ளஸ் மைனஸ் இரண்டும். இரண்டு சீசன் என்றாலும் ஒரே நைட்டில் பார்த்துவிடும் அளவுக்கு வேகமாகச் செல்லும் தொடர் இந்தப் புஷ்பவள்ளி..