கதை என்னன்னா...

சால்ஸ்பரி... இங்கிலாந்தின் சிறிய நகரம். ஒரு காலை வேளையில், முக்கியப் பூங்கா ஒன்றின் பெஞ்சில் தந்தை, மகள் இருவரும் சுயநினைவின்றி மயங்கிக்கிடக்கின்றனர். அதிக அளவு போதைப்பொருள் உட்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் காவல்துறை விசாரணை நடத்துகிறது. இருவரும் ரஷ்யாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் உளவாளிகள் என்பது தெரிய வருகிறது. இருவரின் உடலிலும் விஷம் கலந்திருக்கிறது. சாதாரண விஷமல்ல, பூமியின் மிகக்கொடிய விஷம் ‘Novichok.’ பயோ வார், நியூக்ளியர் வார் போல கெமிக்கல் வாருக்காக ரஷ்யா தயார் செய்துவைத்திருந்த கொடிய ஆயுதம் இந்த விஷம். அவர்கள் மூலம் மொத்த நகரத்தையுமே விஷம் தாக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதை எப்படித் தடுத்தார்கள் என்பதுதான் ‘தி சால்ஸ்பரி பாய்சனிங்ஸ்’ (The Salisbury Poisonings) வெப்சீரிஸின் கதை. மார்ச், 2018-ல் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இதைத் தயாரித்திருக்கிறது பிபிசி.

ஸ்டார்ஸ்

‘இவர்களையெல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே?’ என்ற மைண்ட்வாய்ஸ் நிச்சயம் கேட்கும். நீங்களே கூகுள் செய்யும் முன் நாங்களே சொல்லிவிடுகிறோம். முன்னணிக் கதாபாத்திரமான ட்ரேசி டாஸ்கவிச்சாக நடித்திருப்பவர் அனே-மேரி டஃப். Shameless, Sex Education, His Dark Materials போன்ற பல ஹிட் தொடர்களில் பார்த்திருக்கலாம். இவருடன் மை-அன்னா பர்னிங், ராபர்ட் ஏடி, ரேஃப் ஸ்பால் எனப் பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் தகவல், ராபர்ட் பாராதீயனாக நடித்தவர்தான் ராபர்ட் ஏடி. ராயல் லுக் இல்லாமல் சராசரி பிரிட்டன் குடிமகனாக வருவதால் நீங்கள் கவனிக்காமல் விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

திரைக்குப் பின்னால்

இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த சால்ஸ்பரி பாய்சனிங்ஸ் சமீபத்திய பிரிட்டன் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. பல ஆயிரம் பேரைக் காவுவாங்கும் அளவுக்கு ‘Novichok’ சால்ஸ்பரியில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் இந்தச் சம்பவத்தில் ஒரே ஒருவர்தான் உயிரிழந்தார். பல மாதங்களுக்குப் பிறகுதான் இந்த விஷம் ஒரு பெர்ஃப்யூம் பாட்டில் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அசாதாரணச் சூழலைக் கட்டுக்குள் வைத்ததைச் சாதாரண மனிதர்களின் மகத்தான சாதனையாகவே பார்க்கிறார்கள் பிரிட்டன் மக்கள். இது திரைவடிவில் தொடராக வருகிறது என்றதுமே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. கடந்த மாதம் அங்கு பிபிசி ஒன் சேனலில் ஒளிபரப்பாகியபோது TRP எகிறியது. முதல் எபிசோடை மட்டும் அங்கு ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்தனர்.

சேம்பிஞ்ச்

செர்னோபில் (தொடர்), க்ரவுன் (தொடர்)

ப்ளஸ்

யாரையும் குற்றம்சாட்டாமல் இதுபோன்ற அவசரச் சூழலில் மனிதர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள், ஒவ்வொரு முடிவும் எவ்வளவு முக்கியம் என்பதையும் ஒரு சிறிய விஷயம் ஒரு நகரத்தின் சராசரி வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்க முடியும் என்பதையும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்தத் தொடர். க்வாரன்டீன், ட்ராக்கிங், லாக்-டௌன் என இந்தத் தொடரில் குறிப்பிடும் விஷயங்கள் மற்ற நேரங்களில்கூட அந்நியமாகத் தெரிந்திருக்கக்கூடும். ஆனால் இன்றைய சூழலில் அனைத்தையும் நம்மால் தொடர்புப்படுத்திக் கொள்ளமுடிகிறது. தற்செயலாக ஏற்பட்டிருக்கும் இந்த ‘கனெக்ட்’தான் இந்தச் சம்பவம் பற்றித் துளியும் அறியாதவர்களையும் சால்ஸ்பரி நகரத்துடன் சுமார் நான்கு மணிநேரம் கட்டிப்போடுகிறது.

மைனஸ்

சால்ஸ்பரி சம்பவம் பற்றி ஏற்கெனவே நன்றாகத் தெரிந்தவர்களுக்கு அதே விறுவிறுப்பைத் தர இந்தத் தொடர் தவறுகிறது. சால்ஸ்பரி பாய்சனிங்ஸ் பற்றித் தெரிந்துகொள்ளப்போகிறீர்கள் என்றால் முதலில் சீரிஸ் பாருங்கள், பின்பு மற்ற தகவல்களை ஆராய்ச்சி செய்யுங்கள்!

எங்கு பார்க்கலாம்?

இந்த லாக்-டௌன் பொழுதுபோக்காக டிராமா, சிட்-காம், சயின்ஸ் ஃபிக்ஷன் எனத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ‘சால்ஸ்பரி பாய்சனிங்ஸ்’ நல்ல பிரேக்காக இருக்கும்!