கட்டுரைகள்
Published:Updated:

OTT கார்னர்!

OTT கார்னர்!
பிரீமியம் ஸ்டோரி
News
OTT கார்னர்!

ஸ்ட்ரீம் பாய்

The great heist Web Series

OTT கார்னர்!
OTT கார்னர்!

கொள்ளையடிக்கும் படைப்புகள்மீது எப்போதும் மக்களுக்குக் கொள்ளைப் பிரியம்தான். 1994-ல் கொலம்பியா விலிருக்கும் ஒரு வங்கியில் 24 பில்லியன் கொலம்பியன் பெஸோசை அபேஸ் செய்த சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் தொடர்தான் The great heist. ஒருவர்கூட கொலை செய்யப்படவில்லை என்பதுதான் அந்தத் திருட்டின் ஹைலைட். நகைக்கடை வைத்துப் பிழைப்பு நடத்தும் சாயோவுக்கு தொழில் மொத்தமாய் முடங்கிப்போகிறது. ஒரு ஹெய்ஸ்ட்டில் லைப் டைம் செட்டில்மென்ட் பிளான் செய்கிறார் சாயோ. ஆனால், அவர் கூட்டாளிகள் எல்லோரும் இப்போது சூப்பர் சீனியர்கள். ஆனாலும், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என இந்தக் கொலம்பியா கொள்ளை யர்கள் செய்வது காமெடி ரகம். மணி ஹெய்ஸ்ட் அடுத்த சீசனுக்குக் காத்திருக்கும் ரசிகர்கள் இந்த நிஜ ஹெய்ஸ்ட்டுக்கு ஒரு விசிட் அடிக்கலாம்.

Wild Karnataka Documentary

OTT கார்னர்!
OTT கார்னர்!

க்கத்து மாநிலம் என்பதைத்தாண்டி கர்நாடகத்தின் வனப்பகுதி என்றாலே நமக்குத் தெரிந்தது சந்தன மரங்களும் வீரப்பனும்தான். ஆனால், Wild karnataka-வில் மேற்குத் தொடர்ச்ச்சி மலைகளின் புலிகள், ராஜநாகம், நண்டுகள், கரடிகள் என வித்தியாசமானதொரு வனத்தை நம் முன் படைத்திருக்கிறார்கள். மூன்றாண்டுக் காலம் திட்டமிட்டு எடுக்கப்பட்டிருக்கும் இதன் ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு செழுமை. ஆவணப்படத்துக்கு அடிப்படை துல்லியமான காட்சிகளும், இசையும் வர்ணனையாளரின் குரலும்தான். கொட்டித் தீர்க்கும் பருவ மழையைப்போல பிரகாஷ்ராஜின் குரல்களில் கொஞ்சும் தமிழ் வார்த்தைகள் வந்து விழுகின்றன. ஆம், இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இதை வெளியிட்டு அசத்தியிருக்கிறது டிஸ்கவரி டீம். 52 நிமிடத்தில் நமக்குக் கர்நாடகத்தின் வனப்பகுதிக்குள் ஆன்லைன் விசிட் அடிக்க வைத்துவிடுகிறது இந்த மிருகங்களின் காணொலி.

project power movie

OTT கார்னர்!
OTT கார்னர்!

ரு மாத்திரையைத் தின்றால் ஐந்து நிமிடத்துக்கு அசுரபலம் பெறலாம் என்பதுதான் நெட்ஃபிளிக்ஸ் திரைப் படமான project Power-ன் ஒன்லைன். லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லைன்ஸ் நகரத்தில் இப்படியான மருந்துகள் எளிய மக்களின் கைகளுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன. பிறகுதான் இவர்கள் இந்த மருந்தின் சோதனை எலிகள் எனத் தெரிகிறது. மாத்திரை வைத்திருக்கும் சிறுமி (டாமினிக் ஃபிஷ்பேக்), முன்னாள் ராணுவ வீரர் (ஜெய்மி ஃபாக்ஸ்), காவல்துறை அதிகாரி (கார்டன் - லெவிட்) இந்த மூவர் கூட்டணி எப்படி தங்கள் நகரத்தை மீட்கிறார்கள் என்பதுதான் கதை. அதிரடி சண்டைக்காட்சிகள், அட்டகாசமான நடிப்பு என டிஸ்டின்சன் பெற வேண்டிய படத்தை சுமாரான திரைக்கதையால் பாஸ் மார்க் வாங்க வைத்திருக்கிறார்கள்.

Sadak 2

OTT கார்னர்!
OTT கார்னர்!

கேஷ் பட் இயக்கிய கிளாசிக் படமான ‘சடக்’, தமிழில் இயக்குநர் வசந்த்தால், பிரசாந்த் நடிப்பில் ‘அப்பு’வாக ரீமேக் செய்யப்பட்டது. இப்போது அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் இந்த ‘சடக் 2’ மேல் வைக்கப்படும் அரசியல் பார்வைகளைத் தாண்டி, விமர்சனப் பார்வையில் அணுகினாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடி ரிலீஸ் கண்டிருக்கும் இந்தப் படம் மூலம் 1999-க்குப் பிறகு மகேஷ் பட் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். மரணம் துரத்தும் அலியாவை, மரணத்தைத் துரத்தும் சஞ்சய் தத் காப்பாற்றினாரா என்பதுதான் ஒன்லைன். ஒரு ரோடு மூவியாகத் தொடங்கி, காதல், சென்டிமென்ட், துரோகம், போலிச் சாமியார் எனப் பல விஷயங்களைத் தொட்டிருக்கும் படம் கதாபாத்திரங்களின் மிகைநடிப்பு, கடிவாளம் போடப்படாத திரைக்கதை போன்றவற்றால் பல இடங்களில் திணறுகிறது. சீரியல் டைப் சினிமாக்களை எப்போதோ நாம் தாண்டிவிட்டோம் மகேஷ் பட் சாப்!