Published:Updated:

கனா காணும் காலங்கள் ஓ.டி.டி: முக்கிய ரோலில் நடித்திருக்கும் அந்த ஒரேயொரு பழைய முகம் யார் தெரியுமா?

கனா காணும் காலங்கள்

புதிய கனா காணும் காலங்கள் தொடரை மொத்தம் பத்து சேப்டராக ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஒரு சேப்டருக்கு 13 எபிசோடுகள் ஒளிபரப்பாகலாம் எனத் தெரிகிறது. அதாவது சுமார் 130 எபிசோடுகள் வரை போகலாம்.

கனா காணும் காலங்கள் ஓ.டி.டி: முக்கிய ரோலில் நடித்திருக்கும் அந்த ஒரேயொரு பழைய முகம் யார் தெரியுமா?

புதிய கனா காணும் காலங்கள் தொடரை மொத்தம் பத்து சேப்டராக ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஒரு சேப்டருக்கு 13 எபிசோடுகள் ஒளிபரப்பாகலாம் எனத் தெரிகிறது. அதாவது சுமார் 130 எபிசோடுகள் வரை போகலாம்.

Published:Updated:
கனா காணும் காலங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி, 'பிக் பாஸ் அல்டிமேட்’ என்கிற பெயரில் ஓ.டி.டி. தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி சில தினங்களுக்கு முன் நிறைவடைந்தது நினைவிருக்கலாம். இதேபோல் ஒரு காலத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்ப்பைப் பெற்ற ’கனா காணும் காலங்கள்’ சீரியலும் தற்போது ஓ.டி.டி.க்கு வந்துள்ளது.

வரும் 22ம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது, 'கனா காணும் காலங்கள்' தொடரின் புதிய சீசன். இதற்கு முன்னர், இந்தத் தொடர் பல சீசன்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

கனா காணும் காலங்கள்
கனா காணும் காலங்கள்

சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் இதற்கான ஷூட்டிங் விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிற நிலையில், இந்த ‘ஓ.டி.டி க.கா.கா.வில்' என்ன ஸ்பெஷல்? யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து விசாரித்தோம்.

மொத்தம் பத்து சேப்டராக இதை ஒளிபரப்பத் திட்டமிட்டிருக்கிறார்களாம். ஒரு சேப்டருக்கு 13 எபிசோடுகள் ஒளிபரப்பாகலாம் எனத் தெரிகிறது. அதாவது சுமார் 130 எபிசோடுகள் வரை போகலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய சீசன், கதையும் புதியது என்கிறார்கள். எனவே டைரக்‌ஷன், நடிக்கிறவர்கள், படக்குழு என எல்லாருமே புதியவர்களாம்.

டிக்டாக், ரீல்ஸ், என சோஷியல் மீடியா மூலம் பிரபலமானவர்களையே அதிகம் நடிக்கத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரங்கள் குறித்த அறிமுக ப்ரோமக்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

கனா காணும் காலங்கள் இர்ஃபான்
கனா காணும் காலங்கள் இர்ஃபான்

ஒரேயொரு சர்ப்ரைஸாக பழைய ’கனா காணும் காலங்கள்’ தொடரிலிருந்து நடிகர் இர்ஃபான் மட்டும் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். விஜய் டிவியில் ‘சரவணன் மீனாட்சி’யில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த போது சீரியலை விட்டு வெளியேறி சினிமா பக்கம் போன இர்ஃபான், சில படங்களிலும் நடித்தார்.

திரும்பவும் ‘குக்கு வித் கோமாளி’ கடந்த சீசனுக்கு இவரை அழைத்தது விஜய் டிவி. ஆனால் அப்போது அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் இர்ஃபான். மீண்டும் ’கனா’வுக்கு அழைப்பு வந்த போது மறுக்காமல் கமிட்டாகி இருக்கிறார். முதல் சேப்டரின் கடைசிப் பகுதியில் இவரது என்ட்ரி இருக்கும் என்கிறார்கள். 'மாஸ்டர்' படத்தில் விஜய் நடித்த கேரக்டர் போன்ற ஒரு கதாபாத்திரமாம் இவருக்கு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism