வல்லவனுக்கும் வல்லவன் (தமிழ்)

பாபி சிம்ஹா, ஷிவதா, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் விஜய் தேசிங்கு இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'வல்லவனுக்கும் வல்லவன்'. இத்திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை ஜனவரி 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஆயிஷா (மலையாளம்)

அமீர் பள்ளிக்கல் இயக்கத்தில் ஆஷிப் கக்கோடி எழுத்தில் உருவாகியிருக்கும் மலையாள மொழித் திரைப்படம் 'ஆயிஷா'. மஞ்சு வாரியர், எஸ்.வி. கிருஷ்ண சங்கர், ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை ஜனவரி 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Puss in Boots (ஆங்கிலம்)

இயக்குநர்கள் ஜோயல் க்ராஃபோர்ட், மேனி சான் பெர்னாண்டோ, ராபர்டோ ரோட்ரிக்ஸ், ராமன் ஹுய், கிறிஸ் மில்லர் ஆகியோர் இயக்கத்தில் அன்டோனியோ பண்டேராஸ், சல்மா ஹயக், கிறிஸ் மில்லர், புளோரன்ஸ் பக் உள்ளிட்டோர் குரலில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழி கார்டூன் திரைப்படம் 'Puss in Boots'. இத்திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை ஜனவரி 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Broker (கொரியன்)

லீ மூ-சாங், ரியு கியுங்-சூ, சாங் சே-பியோக் உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் Hirokazu Kore-eda எழுதி இயக்கியிருக்கும் கொரியன் மொழித் திரைப்படம் 'Broker'. இத்திரைப்படம் கடந்த வெள்ளிக் கிழமை ஜனவரி 20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்
Bed Rest (ஆங்கிலம்) -Amazon Prime video

லோரி எவன்ஸ் டெய்லர் இயக்கத்தில் மெலிசா பாரெரா, கை பர்னெட், கிறிஸ்டன் சாவாட்ஸ்கி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழித் திரைப்படம் 'Bed Rest'. இத்திரைப்பம் 'Amazon Prime' ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 15ம் தேதி வெளியாகியுள்ளது.
Chhatriwali (இந்தி)- Zee5

எஜஸ் விஜய் தியோஸ்கர் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங், சுமீத் வியாஸ், சதீஷ் கௌஷிக், ராஜேஷ் தைலன்சன்யா திங்க்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தி மொழித் திரைப்படம் 'Chhatriwali'. இத்திரைப்பம் 'Zee5' ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியாகியுள்ளது.
Mission Majnu (இந்தி)- Netflix

சாந்தனு பாக்சி இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா, ரஷ்மிகா மந்தனா, இம்ரியல்மோசின், பூமிகா சாவ்லா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தி மொழித் திரைப்படம் 'Mission Majnu'. இத்திரைப்பம் 'Netflix' ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியாகியுள்ளது.
1883: The Road West (ஆங்கிலம்)- Amazon Prime Video

மைக்கேல் டேவிடோவிட்ஸ் இயக்கத்தில் சாம் எலியட், டிம் மெக்ரா, ஃபெய்த் ஹில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழி வெப் சீரிஸ் '1883: The Road West'. இது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 15ம் தேதி வெளியாகியுள்ளது.
The Last of Us (ஆங்கிலம்) - Hotstar

டிரக்மேன் இயக்கத்தில் பெல்லா ராம்சே, பெட்ரோ பாஸ்கல், கேப்ரியல் லூனா, அன்னா டோர்வ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழி வெப் சீரிஸ் 'The Last of Us'. இது 'Hotstar' ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 15ம் தேதி வெளியாகியுள்ளது.
ஜான்சி சீசன் 2 (தெலுங்கு) - Hotstar

இயக்குநர் திரு இயக்கத்தில் அஞ்சலி நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு மொழி வெப் சீரிஸ் 'ஜான்சி- சீசன்2'. இது 'Hotstar' ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 19ம் தேதி வெளியாகியுள்ளது.
ATM (தெலுங்கு/ தமிழ்) - Zee5

சி சந்திர மோகன் இயக்கத்தில் விஜே சன்னி, சுப்பராஜு, ப்ருத்வி, கிருஷ்ணா பூர்குலா, ரவிராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்கு/ தமிழ் மொழி வெப் சீரிஸ் 'ATM'. இத்திரைப்பம் 'Zee5' ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியாகியுள்ளது.
Shanty Town (ஆங்கிலம்)- Netflex

சேவியர் இகோரோட்ஜே இயக்கத்தில் Chidi Mokeme, Ini Edo, Richard Mofe-Damijo உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழி வெப் சீரிஸ் 'Shanty Town'. இது 'Netflex' ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியாகியுள்ளது.
Bling Empire: New York (ஆங்கிலம்) - Netflex

ஜெஃப் ஜென்கின்ஸ் இயக்கத்தில் டோரதி வாங், பிளேக் அபி, டினா லியுங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆங்கில மொழி வெப் சீரிஸ் 'Bling Empire: New York'. இது 'Netflex' ஓடிடி தளத்தில் கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியாகியுள்ளது.
திரையரங்கு டு ஓடிடி
வரலாறு முக்கியம் (தமிழ்)- Netflex

சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நாக்ரா உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த 'வரலாறு முக்கியம்' திரைப்படம் தற்போது Netflex' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
டிரைவர் ஜமுனா (தமிழ்) - Aha

கின்ஸ்லின், அப்பகுரு, கார்த்திக் எம் சோமசுந்தரம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் தற்போது Aha' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Kaapa (மலையாளம்)- Netflex

ஜி.ஆர். இந்துகோபன் எழுத்தில் ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், ஷாஜி கைலாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த 'kaapa' மலையாள மொழித் திரைப்படம் தற்போது 'Netfex' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Gurthunda seethakalam (தெலுங்கு)- Amazon Prime Video

நாகசேகர் இயக்கத்தில் மேகா ஆகாஷ், தமன்னா பாட்டியா, சத்யதேவ் காஞ்சரனா, சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த 'Gurthunda seethakalam' மலையாள மொழித் திரைப்படம் தற்போது 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.