Published:Updated:

ட்வீட்டுக்குத் துட்டு: டிராக்கர்களுக்கு கோலிவுட் அள்ளித் தருவது ஏன்?

டிராக்கர்
டிராக்கர்

"டிராக்கர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். பெய்டு டிராக்கர்ஸ் மற்றும் எத்திக்கல் டிராக்கர்ஸ்.

"சினிமா டிராக்கர்ஸ் யார், அவர்களின் வேலை என்ன?" என்று, சினிமா பத்திரிகையாளரும் ட்விட்டரில் தீவிரமாக இயங்கும் டிராக்கர்களில் ஒருவருமான ஸ்ரீதர் பிள்ளையிடம் கேட்டோம். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/34SmqJO

"சோஷியல் மீடியாக்கள் ஆரம்பித்த காலத்தில், திரைப்படங்கள் குறித்த செய்திகளை போஸ்ட் செய்துவந்தோம். நாளடைவில் பலதரப்பட்ட சினிமா ரசிகர்களால் ஃபாலோ செய்யப்பட்டு, தற்போது சினிமா டிராக்கர்களாக வளர்ந்துள்ளோம். நான் பத்திரிகையில் எழுதிவந்த வசூல் நிலவரம் மற்றும் திரைக்குப் பின்னிருக்கும் வர்த்தகச் செய்திகளை, தற்போது சமூக வலைதளத்தில் பதிவிடுகிறேன். அப்படி வெளியிடுவது, பலரையும் உடனுக்குடன் சென்று சேர்கிறது.

ஒரு படத்துக்கு 5,000 ரூபாயிலிருந்து இவர்களுக்கான தொகை தொடங்குகிறது. மாதத்துக்கு சில லட்சங்கள் வரை சம்பாதிக்கும் டிராக்கர்கஸும் இருக்கின்றனர்.

எங்களில் சிலர், இதையே தொழிலாகவும் செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்கள் லைக்ஸ், ஃபாலோக்களுக்காக நொடிக்கு நொடி செய்திகளைப் பதிவிட்டுவருகின்றனர். உண்மைத்தன்மைகளை ஆராய்வது, சோர்ஸின் நம்பகத்தன்மை என, பத்திரிகைக்கு இருக்கும் அளவுகோல்கள் எதுவும் இவர்களுக்குத் தேவையில்லை" என்கிறார் ஸ்ரீதர் பிள்ளை.

'பிகில்' வசூல் விவகாரத்தில் பெரிய சர்ச்சையைக் கிளப்பியவர், சினிமா தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான தனஞ்செயன். அவரிடம் பேசினோம்.

"டிராக்கர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். பெய்டு டிராக்கர்ஸ் மற்றும் எத்திக்கல் டிராக்கர்ஸ். பெய்டு டிராக்கர்ஸ், தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் வெளியிட நினைக்கும் செய்திகளை வெளியிட்டு, படத்துக்குத் தேவையான புரமோஷன்களையும் செய்து தருவார்கள். இதற்காக பணம் வாங்குவார்கள். ஒரு ட்வீட்டுக்கு இவ்வளவு பணம் என கணக்கு இருக்கிறது. இவர்களை 'இன்ஃப்ளூயன்சர்ஸ்' (Influencers) என்றும் சொல்லலாம்" என்று விவரித்தார் தனஞ்செயன்.

"இது தொழில்நுட்ப வளர்ச்சியின் சைடு எஃபெக்ட்" என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. "இவர்கள் மூலம் சென்றால், உலகின் எந்த மூலைக்கும் நம் படத்தின் செய்தி நொடியில் போய்ச் சேர்ந்துவிடும் என, தயாரிப்பாளர்களும் நடிகர்-நடிகைகளும் நம்புகின்றனர். அதனால், ஒரு படத்துக்கு 5,000 ரூபாயிலிருந்து இவர்களுக்கான தொகை தொடங்குகிறது. மாதத்துக்கு சில லட்சங்கள் வரை சம்பாதிக்கும் டிராக்கர்கஸும் இருக்கின்றனர்.

ட்வீட்டுக்குத் துட்டு: டிராக்கர்களுக்கு கோலிவுட் அள்ளித் தருவது ஏன்?

சினிமாவுக்குள் இருப்பவர்களுக்கே இவர்கள் சொல்வதில் எது உண்மை, எது பொய் எனப் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அதனாலேயே தன்னைப் பற்றியோ, தன் படத்தைப் பற்றியோ பாசிட்டிவாக எழுதவில்லையென்றாலும் பரவாயில்லை, நெகட்டிவாக வந்துவிடக் கூடாது என்று காசு தருபவர்கள் இருக்கின்றனர்.

முப்பது, நாற்பது லட்சம் ரூபாய் கொடுத்து டி.வி-யில் கிடைக்காத பப்ளிசிட்டி, சமூக வலைதளங்களில் இருக்கும் டிராக்கர்ஸ்மூலம் இரண்டு, மூன்று லட்சம் ரூபாய் செலவில் கிடைப்பதும் ஒரு காரணம்" என்றார் எஸ்.ஆர்.பிரபு.

- சினிமா டிராக்கர்ஸ் குறித்தும், அவர்களின் பின்புலம் பற்றியும் ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "டிராக்கர்களால்தான் விஜய் - அஜித் ரசிகர்கள் சண்டையே வருகிறது!" - சினிமா டிராக்கர்ஸ் - சூப்பர் டூப்பர் ஹிட் https://www.vikatan.com/news/cinema/discussion-about-cinema-trackers

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

அடுத்த கட்டுரைக்கு