Published:Updated:

''என் பொண்ணுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்... பிசினஸ் ஹெட்!'' - என்ன செய்கிறார் டாக்டர் ஷர்மிளா?

''என் பொண்ணுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்... பிசினஸ் ஹெட்!'' - என்ன செய்கிறார் டாக்டர் ஷர்மிளா?
''என் பொண்ணுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்... பிசினஸ் ஹெட்!'' - என்ன செய்கிறார் டாக்டர் ஷர்மிளா?

நடிப்பு, குடும்பம், பிசினஸ் என்று பிசியாக இருக்கும் ஷர்மிளா மீண்டும் 'பகல் நிலவு' சீரியல் மூலமாகச் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

'புதிரா புனிதமா' நிகழ்ச்சி மூலமாக அதிகம் அறியப்பட்டவர் டாக்டர் ஷர்மிளா. அவர் சைக்கியாட்ரிஸ்ட் என்றும் சைக்காலஜிஸ்ட் என்றும் குழப்பிக் கொண்டிருந்தவர்கள் ஏராளம். நடிப்பு, குடும்பம், பிசினஸ் என்று பிசியாக இருக்கும் ஷர்மிளா மீண்டும் 'பகல் நிலவு' சீரியல் மூலமாகச் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். என்ன செய்கிறார் என்பது குறித்து அவரிடம் பேசினோம்.

நீங்க சைக்கியாட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட்னு ஓடிட்டு இருக்கே... ஆக்சுவலா நீங்க யாரு?

''(சிரிக்கிறார்).  டாக்டர் மாத்ரூபூதம் மேல எனக்கு மதிப்பு அதிகம். அதனால அவர் பண்ணின ஷோல ஒரு அங்கமா இருந்தேன். அதை வைச்சு எல்லாரும் நான் சைக்கியாட்ரிஸ்ட், சைக்காலஜிஸ்ட்னு அவங்க அவங்களா நினைச்சுகிட்டாங்க.  நான் படிச்சது ஜெனரல் மெடிசின். இப்ப கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி பார்மஸில எம்.டி.பண்ணினேன். அது தொடர்பான ஒரு கம்பெனிக்கு நான் எம்.டி. இனி மக்களுக்கு சந்தேகம் இருக்காதுனு நினைக்கிறேன்''

''பாலசந்தர் நாடகங்களில் லீட் ரோல் பணியாற்றிய தருணம்?'' 

''பள்ளி கல்லூரிகளில் நிறைய நாடகங்கள் பண்ணியிருந்தாலும் பாலசந்தர் சார் நாடகங்கள்ல நடிக்க எனக்கு கிடைச்ச வாய்ப்பை வரம்னுதான் நினைக்கிறேன். அவர் கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொடுக்கிற மாதிரி நடிச்சே காண்பிச்சிடுவார். பல முறை தப்பு பண்ணியிருக்கேன். கோவப்படுவார், பிறகு சமாதானமாகி நிறைய சொல்லித் தருவார். என்னோட சின்னத்திரை வளர்ச்சிக்கு அவர் கற்றுக்கொடுத்த பாடம்தான் மிக முக்கிய காரணம். இப்ப நெகட்டிவ் கேரக்டர்கள் நல்லா பண்றேன்னா அந்தப் பாராட்டெல்லாம் அவருக்குத்தான் போய்ச் சேரணும்'' 

 ''ஷுட்டிங் ஸ்பாட்ல நீங்க எப்படி?'' 

''நான் ரொம்ப ஜாலி டைப். ஷாட் ரெடின்னு சொல்ற வரைக்கும் யாரையாவது கலாய்ச்சுட்டு செம ஜாலியா இருப்பேன். வீட்லேயும் அப்படித்தான். நீங்க என் பொண்ணுகிட்ட கேட்டா கண்டிப்பா 'நான்தான் அவளோட பெஸ்ட் ப்ரெண்டு'னு சொல்லுவா. வாழ்க்கையில் எது நடந்தாலும் நன்மைக்கேன்னு ஈஸியா எடுத்துட்டு போயிருவேன். அதுதான் ஸ்ட்ரெஸ் இல்லாத வாழ்க்கையை எனக்கு தருதுன்னு கூட சொல்லலாம்.''

''நடிப்பு தவிர...''

''நான் நல்லா சமைப்பேன்.விஜய் டி.வி கிச்சன் சூப்பர் ஸ்டாரில் ரன்னரா வந்தேன். இப்ப ஒரு ப்ரீ ஸ்கூல் நடத்திட்டு வர்றேன். அதுல ஒரு ஆத்மார்த்தமான உணர்வு கிடைக்குது. என் பேக்ல எப்பவும் ஒரு புத்தகம் இருந்துகிட்டே இருக்கும். மேக்கப் பொருள்கள்கூட இல்லாம போகலாம். ஆனா என் பையில புத்தகம் இல்லாம மட்டும் இருக்காது. நான் படிச்சப்ப இரண்டாவது மொழியா இந்தி எடுத்திருந்தேன். அதனால நடிக்க வந்தப்ப டயலாக் டெலிவரியில எல்லாம் நிறைய கஷ்டப்பட்டேன். இப்ப தமிழ் புத்தகங்களைச் சரளமா வாசிக்கிறேன். அதுதான் என் வளர்ச்சிக்கு உதவியா இருக்குது'' 

''குடும்பம், பிசினஸ், ஆக்‌டிங்... எப்படி சமாளிக்கிறீங்க?''

''ஒரு வேலை செய்ற இடத்துல இன்னொரு வேலையைக் கொண்டு வர மாட்டேன். வீட்ல அம்மா, ஆபீஸ்ல ஹெட், நடிப்புல ஆக்ட்ரஸ். இதைக் கடைப்பிடிச்சாலே டென்ஷன் இல்லாம இருக்கலாம்.  மறுபடியும் சீரியல் சினிமா வாய்ப்புகள் வந்திட்டிருக்குது. ஓட ஆரம்பிக்க மனசும் உடம்பும் ரெடி.''

''நாங்க படிச்ச காலத்துல எல்லாம் டுவெல்த் மார்க்கை வைச்சு டாக்டருக்கு அப்ளிகேஷன் கொடுத்தாங்க. இப்ப நீட்டுங்கறாங்க. நீட் எழுதணும்னா எல்லாரும் ஒரே மாதிரி படிக்கணும். நம்ம நாட்டுல பாடம் நடத்தும் விதமும்  பாடங்களும் அப்படி அமையுறதில்லையே. ஒருபக்கம் கவர்மென்ட் ஸ்கூல்ல படிக்கிற பிள்ளைகள்... இன்னொரு பக்கம் பிரைவேட் ஸ்கூல். இவங்க ரெண்டு பேரையும் எப்படி போட்டியா எடுத்துகிட முடியும். அப்படின்னா கவர்மென்ட் ஸ்கூல் பசங்களுக்கு பிரைவேட் ஸ்கூல் மாதிரி கோச்சிங்கோ, பாட முறைகளையோ மாத்தினா மட்டும்தான் நீட் நம்ம தமிழ்நாட்டுல செல்லுபடியாகும். அதுவரைக்கும் அதைப் பத்தி பேசுறதுல நியாயமில்லை''

அடுத்த கட்டுரைக்கு