Published:Updated:

`யாரோ செய்த தவற்றுக்கு என்மீது பழியா?' - முக்கியப் பதவியைத் தூக்கி எறிந்த அனுராக் காஷ்யப் #MeToo

`யாரோ செய்த தவற்றுக்கு என்மீது பழியா?' - முக்கியப் பதவியைத் தூக்கி எறிந்த அனுராக் காஷ்யப் #MeToo
`யாரோ செய்த தவற்றுக்கு என்மீது பழியா?' - முக்கியப் பதவியைத் தூக்கி எறிந்த அனுராக் காஷ்யப் #MeToo

`யாரோ செய்த தவற்றுக்கு என்மீது பழியா?' - முக்கியப் பதவியைத் தூக்கி எறிந்த அனுராக் காஷ்யப் #MeToo

பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகத் தொடங்கப்பட்டதுதான் சமூகவலைதள # Metoo கேம்பெய்ன். ஹாலிவுட் நடிகை அலீஸா மிலானோ என்பவரால் பற்ற வைத்த இந்தத் தீ, பாலிவுட் வட்டாரத்திலும் தற்போது பரவி வருகிறது. திரைத்துறையில் இருக்கும் பிரபலங்கள் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்களை எந்தவித தயக்கமும் இன்றி பளிச்சென்று பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர். 


 

2017-ல் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வின்ஸ்டீன் பல ஆண்டுகளாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்தச் சமயத்தில் ஹார்வியால் பாதிக்கப்பட்ட நடிகை அலீஸா மிலானோ, ட்விட்டரில் #Metoo என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு, தன் கசப்பான அனுபவத்தைப் பகிர்ந்தார். அவரைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட மற்ற பெண்களும்  # Metoo ஹேஷ்டேக்கின் கீழ் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர். ஒருகட்டத்தில் #Metoo இயக்கமாக மாறியது. லைம் லைட்டில் இருக்கும் பலரது மோசமான இன்னொரு முகங்களைப் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தனர். 

 #Metoo ஹேஷ் டாக் இந்தியாவிலும் திரைமறைவில் நடந்த பல விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.  கடந்த சில வாரங்களாகத் திரைத்துறை, ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்த பெண்கள் தாங்கள் பணியிடத்தில் சந்தித்த பாலியல் கொடுமை குறித்துப் பகிர்ந்து வருகிறார்கள். முக்கியமாக பாலிவுட் வட்டாரத்தில் பேர் புகழோடு உலா வரும் பல பிரபலங்களின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டுள்ளன. தனுஸ்ரீ தத்தா நானா படேகர் மீது புகார் கூறிய பின்னர்தான் இந்த மீடூ இயக்கம் வலுப்பெற்றுள்ளது. பாலிவுட்டின் முக்கிய இயக்குநரான விகாஸ் பாஹ்ல் மீதும் புகார் கூறப்பட்டது. குயின் திரைப்படத்தின் மூலம் பிரபலமான விகாஸ் பாஹ்ல் மீது படத்தின் நாயகி கங்கனா ரனாவத் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  


 

2015-ம் ஆண்டு அனுராக் இயக்கிய  `பாம்பே வெல்வெட்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளின்போது பேந்தம் பிலிம்ஸில் பணிபுரியும் பெண் ஒருவர்,  விகாஸ் பாஹ்ல் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டினார். பேன்தம் பிலிம்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனம் இயக்குநர் அனுராக் காஷ்யப் மற்றும் விக்ரமாதித்ய மோத்வானியால் நிறுவப்பட்டது. அந்தப் பெண்ணின் குற்றச்சாட்டு அந்த சமயத்தில் மூடி மறைக்கப்பட்டது. பேந்தம் பிலிம்ஸ் பெண் ஊழியர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள கங்கனா ரனாவத்  ‘அந்தப் பெண்ணின் புகார் உண்மையாக இருக்கலாம். குயின் படப்பிடிப்பின்போது, என்னிடமும் விகாஸ் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தார். படப்பிடிப்பில் பலமுறை என்னைக் கட்டிப்பிடித்தார். உங்கள் வாசனை எனக்குப் பிடித்திருக்கிறது என்பார்’ இவ்வாறு விகாஸ் பாஹ்ல் மீது கங்கனா குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 


 

இதையடுத்து பேன்தம் பிலிம்ஸின் பங்குதாரர்களான அனுராக் காஷ்யப் மற்றும் விக்ரமாதித்ய மோத்வானி மீதும் விமர்சனங்கள் எழுந்தன. விகாஸ் செய்த தவற்றுக்கு அனுராக்கும் உடந்தை என பலர் விமர்சித்தனர்.


 

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அனுராக் ட்விட்டரில் தன் விளக்கத்தைப் பதிவு செய்துள்ளார். ‘ யாரோ செய்த தவற்றுக்கு என் மீது பழி போடுகிறார்கள். என்னைப் பற்றி புரியாத நபர்களுக்கு நான் பதில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் நிறைய பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் என்னை விமர்சிக்கட்டும். நான் அப்போது பதில் சொல்கிறேன். அதுமட்டுமின்றி என் மீது படரும் இந்தச் சந்தேக நிழல் அழிக்கப்படும் வரை மும்பை அகாடமி ஆஃப் தி மூவிங் இமேஜ் ( MAMI) குழு உறுப்பினர் பதவியில் இருந்து விலகிக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


 

MAMI (Mumbai Academy of Moving Image) என்பது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மும்பை திரைப்பட விழாவை ஒருங்கிணைக்கும் அறக்கட்டளை ஆகும்.  அனுராக் எடுத்துள்ள முடிவால் பாலிவுட் வட்டாரத்தில் புயல் வீசத் தொடங்கியுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு