Published:Updated:

குவிந்த வாசகிகள்... அதிர்ந்த அரங்கம்!

குவிந்த வாசகிகள்...  அதிர்ந்த அரங்கம்!
பிரீமியம் ஸ்டோரி
News
குவிந்த வாசகிகள்... அதிர்ந்த அரங்கம்!

அவள் விகடன் ஜாலி டேவெ.வித்யா காயத்ரி, மு.பார்த்தசார - படங்கள் : தி.குமரகுருபரன், தே.அசோக்குமார்

வாசகிகளைக் குஷிப்படுத்தும் ‘அவள் விகடன்’ ஜாலி டே திருவிழா, இம்முறை சென்னையில் கோலாகலமாக நடந்தது. அவள் ஜாலி டே பவர்டு பை அபிராமி அரிசி வகைகள் மற்றும் ஜி.ஆர்.டி ஜுவல்லர்ஸ், அசோஸியேட் ஸ்பான்சர்ஸ் உதயம் பருப்பு வகைகள், சுப்ரீம் ஃபர்னிச்சர்ஸ், வென்யூ பார்ட்னர் வேல்ஸ் யுனிவர்சிட்டி.

குவிந்த வாசகிகள்...  அதிர்ந்த அரங்கம்!

வாசகி கனகலட்சுமி ‘வசீகரா’ பாடலைப் பாட, அரங்கமே சிலிர்த்தது. வேல்ஸ் பல்கலைக்கழக மாணவிகளின் பவர்பேக்டு நடனம் அரங்கத்தில் இருந்த அனைவரையும் குத்தாட்டம் போடவைத்தது. சிறுமி சாய் காயத்ரி மயக்கும் குரலால் தனக்கெனப் பல ரசிகைகளை உருவாக்கிக்கொண்டார். வடிவேல் பாலாஜி மேடை ஏறியவுடன், அவருக்கே உரித்தான டைமிங் காமெடியில் அனைவரையும் குலுங்கக் குலுங்கச் சிரிக்கவைத்தார். அவருக்கு ஏற்ற பாடலை டைமிங்காக ப்ளே செய்து ஸ்கோர் செய்தார் ‘ஸ்மைல் சேட்டை’ ஷ்யாம். கல்லூரிப் பெண்களுக்கு இணையாக நடனமாடி அமர்க்களம் செய்த சரோஜா பாட்டியின் எனர்ஜிக்கு ஏக வரவேற்பு. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குவிந்த வாசகிகள்...  அதிர்ந்த அரங்கம்!
குவிந்த வாசகிகள்...  அதிர்ந்த அரங்கம்!

ஜாலி டேவுக்கு முந்தைய நாள், நடனம், பாடல், ரங்கோலி, அடுப்பில்லா சமையல் உள்ளிட்ட முன்தேர்வுப் போட்டிகள்  நடைபெற்றன. ஜாலி டே அன்று,  இறுதிப்  போட்டிகளில் வெற்றிபெற்ற 150-க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களை, அபிராமி அரிசி வகைகள் மற்றும் ஜி.ஆர்.டி நிறுவனம் வழங்கிய பரிசுகள் மகிழ்வித்தன.

ஜி.ஆர்.டி நிறுவனத்தின் நகை எடை கணிக்கும் போட்டி மற்றும் வளையல் ஜோடி போட்டி என வாசகிகளுக்குப் பரிசு மழைதான். அபிராமி அரிசி வகைகளின் விற்பனை மேலாளர் ராஜ்குமார், அரிசிகளின் பிக்பாஸ் அபிராமி என விளக்கினார். சாதனைப் பெண்களின் பட்டியலைக் கேட்டுச் சரியாகப் பதிலளித்த  வாசகிகளுக்கு அபிராமி அரிசி வகைகள் சார்பாகப் பரிசுகளை வழங்கினார். 

குவிந்த வாசகிகள்...  அதிர்ந்த அரங்கம்!

விஜய், அஜித் என அனைவரின் குரலிலும் மிமிக்ரி செய்து அரங்கத்தை குஷிப்படுத்தினார் ‘கலக்கப்போவது யாரு’ விக்கி சிவா. ‘பிக்பாஸ்’ ஹரிஷ் கல்யாண் அரங்கத்துக்குள் நுழைந்ததுமே கரகோஷத்தால் வேல்ஸ் பல்கலைக்கழகமே அதிர்ந்தது. ஹரிஷ் நடித்து வெளியாகக் காத்திருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்திலுள்ள ‘ஏய் பெண்ணே’ பாடலை அவருடன் அவள் வாசகி இணைந்து மேடையில் பாட... அது வாவ் மொமன்ட்.  

குவிந்த வாசகிகள்...  அதிர்ந்த அரங்கம்!

அவள் விகடன் வழங்கும் பம்பர் பரிசான வாஷிங்மெஷினை யார் தட்டிச்செல்லப் போகிறார்? அதை அறிவிப்பதற்கு முன்னர், ஒரு கலக்கல் கேம் ஷோவை வடிவேல் பாலாஜியும் தொகுப்பாளர்கள் சித்ரா, சுட்டி அரவிந்த் ஆகியோரும் ஏற்பாடு செய்தனர். ஜிமிக்கி அணிந்துவந்த வாசகிகளை மேடை ஏற்றி அவர்களுக்கு நகைச்சுவையான கேம்களை நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு அபிராமி அரிசி வகைகள் சார்பாக கிஃப்ட் பொருள்களை அந்நிறுவன விளம்பர மேலாளர் வழங்கினார்.

குவிந்த வாசகிகள்...  அதிர்ந்த அரங்கம்!

வாஷிங் மெஷின் யாருக்கு? லட்சுமி ஸ்ரீநிவாசனின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், மேடைக்கு வந்தார் லட்சுமி. ‘`என் பையனும் நானும் மட்டும்தான் வீட்டுல இருக்கோம். எங்களுக்கு இந்தப் பரிசு ரொம்பவும் பயனுள்ளதா இருக்கும்’’ என அவர் நெகிழ்வாகப் பேச, நிறைந்தது அவள் விழா!