Published:Updated:

தைரியம் பழகிக்கோ! - மகள் உமா ரியாஸ்கான் - அம்மா கமலா காமேஷ்

தைரியம் பழகிக்கோ! - மகள் உமா ரியாஸ்கான் - அம்மா கமலா காமேஷ்
பிரீமியம் ஸ்டோரி
தைரியம் பழகிக்கோ! - மகள் உமா ரியாஸ்கான் - அம்மா கமலா காமேஷ்

எங்கம்மா செம வாலு!கு.ஆனந்தராஜ் - படங்கள் : க.பாலாஜி

தைரியம் பழகிக்கோ! - மகள் உமா ரியாஸ்கான் - அம்மா கமலா காமேஷ்

எங்கம்மா செம வாலு!கு.ஆனந்தராஜ் - படங்கள் : க.பாலாஜி

Published:Updated:
தைரியம் பழகிக்கோ! - மகள் உமா ரியாஸ்கான் - அம்மா கமலா காமேஷ்
பிரீமியம் ஸ்டோரி
தைரியம் பழகிக்கோ! - மகள் உமா ரியாஸ்கான் - அம்மா கமலா காமேஷ்

“என் பொண்ணு என்னைக் குழந்தை மாதிரி கவனிச்சுக்கிறா. ஆனா, நடிக்காம இருக்கோமேனுதான் எனக்கு வருத்தமா இருக்கு” - நடிகை கமலா காமேஷ் சொல்ல, அவர் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சியவாறே, ‘`ஓடியாடி உழைச்சதெல்லாம் போதும். நீ இப்போ நிம்மதியா ரெஸ்ட் எடுக்கிறதுதான் எனக்குச் சந்தோஷம்’’ என அம்மாவின் மடியில் தலைசாய்த்துச் சிரிக்கிறார் நடிகை உமா ரியாஸ்கான்.  

தைரியம் பழகிக்கோ! - மகள் உமா ரியாஸ்கான் - அம்மா கமலா காமேஷ்

80, 90-களில் அம்மா கதாபாத்திரங்களில் கலக்கிய சீனியர் நடிகை கமலா. சிங்கிள் பேரன்ட்டாக தன் மகளை வளர்க்க, நடிப்பு அவருக்கு நிர்பந்தம் ஆனது. ஓடியாடி நடித்தவர், அந்தப் பயணத்தில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டார், எலும்பு முறிவுப் பிரச்னையால் அவதியுற்றார். அவற்றையெல்லாம் கேமரா கண்களுக்குத் தெரியாமல் ஏமாற்றி, ஐந்நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியது, அசாத்தியமே.

“எனக்குப் பூர்வீகம் கும்பகோணம். வளர்ந்ததெல்லாம் சென்னையில். அரசுப் பள்ளியில் பத்தாவது வரை படிச்சேன். டிப்ளோமா இன் மியூசிக் படிச்சிருந்தேன். கணவர் காமேஷ், சினிமா இசையமைப்பாளர். தனியா ட்ரூப் வெச்சுக்கிட்டும், நிறைய மேடை நாடகங்கள் மற்றும் கச்சேரிகளுக்கு மியூசிக் கம்போஸ் பண்ணிக்கிட்டும் இருந்தார். அவர் ட்ரூப்பில் நானும் பாடிட்டிருந்தேன். இயக்குநர் ஜெயபாரதி, கணவரின் நண்பர். அவருடைய படத்துக்கு ஒல்லியா, உயரமா, குடும்பப்பாங்கான ஒரு நடிகையைத் தேடிட்டிருக்க, எல்லோருமா சேர்ந்து என்னை கன்வின்ஸ் பண்ணி நடிக்க வெச்சுட்டாங்க. அப்படி ‘குடிசை’ படத்துல ஹீரோயினா அறிமுகமானப்போ, பொண்ணு உமாவுக்கு ரெண்டரை வயசு’’ என்றவர், அப்போது கணவரின் உடல்நிலை பாதிக்கப்பட்ட சூழலைச் சொன்னார்.

‘`அவரின் ஒரு காலை எடுக்க வேண்டியதா போச்சு. அப்போதான், ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் கார்த்திக்கின் அம்மா ரோல் பண்ண வாய்ப்பு வந்துச்சு. இருபது வயதுகளில் இருந்த நான், ஐம்பது வயதுகளில் இருக்கிற பெண்மணியா நடிக்க மறுத்தேன். ‘பாரதிராஜா படம், பெரிய வாய்ப்பு’னு பலரும் சொல்ல, ஒப்புக்கிட்டேன். படம் பெரிய ஹிட். அப்புறம் தொடர்ந்து எல்லாப் படங்கள்லயும் பரிதாப அம்மா ரோல், டல் மேக்கப்தான். என் கணவர் 36 வயதில் இறந்துட்டார். சிங்கிள் பேரன்ட்டா மகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பு. ஆனா, ‘கணவர் மறைவுக்கு அப்புறம் கமலா நடிக்க மாட்டாங்க’னு ஒரு வதந்தி பரவி, ஒரு வருஷம் எந்த வாய்ப்பும் இல்லை. சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவிச்சேன். அப்புறம் ஒரு மலையாளப் பட வாய்ப்பு வர, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி படங்கள்ல தொடர்ந்து நடிச்சேன். ஒரு நாளைக்கு மூணு படத்துக்கு கால்ஷீட் கொடுப்பேன். அதிகாலையில ஷூட்டிங் கிளம்பும்போதும், நைட்டு வீட்டுக்கு வரும்போதும் பொண்ணு தூங்கிட்டு இருப்பா. அவகூட இருக்க முடியாதது ஏக்கமா இருக்கும், அழுகையா வரும். ஆனா, வாழ்க்கை நம்மை அப்படித்தானே விரட்டுதுனு சமாதானமாகிடுவேன்’’ என்பவர், இந்த இடர்பாடுகளுக்கு இடையில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தைரியம் பழகிக்கோ! - மகள் உமா ரியாஸ்கான் - அம்மா கமலா காமேஷ்

“அம்மாவே, எனக்கு அப்பாவாகவும் மாறினாங்க’’ - நெகிழ்ச்சியில் தளரும் குரலைச் சரிசெய்துகொண்டு பேச ஆரம்பித்தார் உமா. ‘` ‘வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. எனக்கு ஏதாச்சும் ஆயிட்டா, நீ தனியாளா இருப்பே. அதனால தைரியம் பழகிக்கோ’னு சொல்லி வளர்த்தாங்க. 1979-ல் ஒரு ஷூட்டிங்ல அம்மாவுக்கு தலையில பலமா அடிபட்டதுல, படிப்படியா அவங்களுடைய பார்வைத்திறன் குறைய ஆரம்பிச்சது. கண்ணுக்குக் கீழே ஊசி போடுவாங்க. அடுத்த நாள் அவங்க முகம் பெரிசா உப்பிக்கும். அந்த வலியையெல்லாம் தாங்கிட்டு, தொடர்ந்து நடிச்சாங்க. பல சிகிச்சைகள் எடுத்தும் பலனில்லாமல்போக, அந்தக் குறைபாட்டுடனே வாழப் பழகிட்டாங்க; நடிக்கப் பழகிட்டாங்க. ரொம்பப் பக்கத்துல இருக்கிறவங்ககூட, அம்மாவுக்கு மங்கலாகத்தான் தெரிவாங்க. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்லயோ, படத்திலேயோ அம்மாவின் பிரச்னையைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, பக்கத்துல இருக்கிறவங்களை அவங்க குரலைவெச்சே தெரிஞ்சுக்கிட்டு, சமாளிச்சுப்பாங்க.  

அம்மாவின் அருமையை, சின்ன வயசில் நான் உணரலை. வளர்ந்த பிறகு, நினைச்சு நினைச்சு ஒவ்வொரு நாளும் பூரிச்சுப்போனேன். ‘நானும் நடிக்கிறேன்’னு 16 வயசில் ஸ்க்ரீனுக்கு வந்தேன். அடுத்த வருஷமே கல்யாணம் ஆகிடுச்சு. கொஞ்ச காலம் அம்மா தனியா வசிச்சாங்க. அப்புறம் அவங்களை என் கூடவே கூட்டிட்டு வந்து பார்த்துக்கிறேன்” என்கிறார் உமா வாஞ்சையுடன். 

தைரியம் பழகிக்கோ! - மகள் உமா ரியாஸ்கான் - அம்மா கமலா காமேஷ்

“ஒரு கன்னடப் படத்துல, ஆக்‌ஷன் காட்சியில் நடிச்சப்போ, இடுப்பு எலும்பு முறிஞ்சுடுச்சு. நடிப்பு, குடும்பம்னு ஓடிகிட்டு இருந்ததால, அந்தப் பிரச்னையைச் சரியா கவனிக்காம விட்டேன். அதனால அனுபவிச்ச வலிகளும் நிறைய. உமாவுக்கு குழந்தை பிறந்து, என் கடமைகள் எல்லாம் முடிந்த பிறகுதான் செக்-அப் செஞ்சு, ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன். அதுக்குப் பிறகும் வலி குறையலை. அப்புறம் ஏழு ஆபரேஷன் செய்ற நிலை ஏற்பட்டுச்சு. நடுராத்திரியில, இடுப்புல வைக்கப்பட்ட இரும்பு ராடு நகர்ந்து வலியில துடிப்பேன். உடனே, இடுப்புல கைக்குழந்தையைத் தூக்கிட்டு, உமா என்னை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு ஓடுவா. ஒரு கட்டத்துக்கு மேல, அவ எனக்குத் தாயாகி என்னைப் பார்த்துக்கிட்டா’’ என்பவர், 2003-ல் வெளியான ‘விஷ்வதுளசி’ படத்துக்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. பிறகு சீரியல்களில் நடித்தவருக்கு, இடுப்புவலியால் சிறிது காலம் ஓய்வு தேவைப்பட்டிருக்கிறது.

“படங்கள்லதான் அப்பாவி அம்மா, வீட்டுல பயங்கர வாலு எங்கம்மா. அதுவும் எனக்கு கவுன்ட்டர் கொடுத்துக் கிண்டல் பண்றதுனா அவங்களுக்கு அவ்ளோ குஷி. நாங்க ஃப்ரெண்ட்ஸ் மாதிரி ஜாலியா இருப்போம், வெளிய போவோம், சண்டை போடுவோம், கொஞ்சிக்குவோம்’’ என்று உமா சொல்ல, ‘`கண்ணுபட்டுடப் போகுது’’ என்கிறார் கமலா காமேஷ் பெரிய சிரிப்புடன்!

“திரையுலகில் பெருசா நட்பு இல்லை!”

“70-க
ளில் பெரும்பாலும் தனியா டப்பிங் கிடையாது. ‘சிம்லா ஸ்பெஷல்’ படத்தில் இருந்து தான் என்னையும் டப்பிங் பேச சொன்னாங்க. என் பார்வைக் குறைபாட்டால, என்னால பேப்பரையும் ஸ்க்ரீனையும் பார்த்து டப்பிங் பேச முடியாது என்பதால, அப்போ எனக்கு ஹேமமாலினிதான் டப்பிங் கொடுத்தாங்க. சில படங்களுக்கு நானே டப்பிங் பேச வேண்டிய சூழலும் உருவாகும். அப்போ, என் டப்பிங் டயலாக்கை பிறர் சொல்லக் கேட்டு மனப்பாடம் செய்துக்குவேன். என் போர்ஷன் வரும்போது, என்னை டச் பண்ணுவாங்க. உடனே நான் சரியா பேசிடுவேன். இப்படித்தான் ஷூட்டிங் டைம்லயும் டயலாக் பேசி நடிப்பேன். நடிகைதான் என்றாலும் மேக்கப் போட்டு என்னால கண்ணாடியில பார்க்க முடியாது. ரஜினி, கமல் உள்பட 80, 90-களில் தென்னிந்திய சினிமாவுல கலக்கின எல்லா சூப்பர் ஸ்டார்களுடனும் நடிச்சிருக்கேன். ஆனாலும் திரையுலகில் எனக்குப் பெரிசா நட்பு இல்லை. நடிப்பு, வீடு மட்டும்தான் என் உலகம். இப்படியே என் காலம் ஓடிடுச்சு” என்று புன்னகைக்கிறார், கமலா காமேஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism