Published:Updated:

குடும்பத்தோடு செலவிடும் நேரம்தான் எல்லாவற்றையும் விடப்பெரிசு!

குடும்பத்தோடு செலவிடும் நேரம்தான் எல்லாவற்றையும் விடப்பெரிசு!
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்தோடு செலவிடும் நேரம்தான் எல்லாவற்றையும் விடப்பெரிசு!

வைஷ்ணவி & அனிருத்இது அம்மா பவர் ஆர்.வைதேகி

குடும்பத்தோடு செலவிடும் நேரம்தான் எல்லாவற்றையும் விடப்பெரிசு!

வைஷ்ணவி & அனிருத்இது அம்மா பவர் ஆர்.வைதேகி

Published:Updated:
குடும்பத்தோடு செலவிடும் நேரம்தான் எல்லாவற்றையும் விடப்பெரிசு!
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத்தோடு செலவிடும் நேரம்தான் எல்லாவற்றையும் விடப்பெரிசு!

தோற்றத்தில் மட்டுமல்ல, அம்மாவின் மீதான அன்பை வெளிப்படுத்துவதிலும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் அக்காவும் தம்பியும். அக்கா வைஷ்ணவி ரவிச்சந்தர் வாசு சட்ட வல்லுநர். அவரின் தம்பி அனிருத்துக்கு அறிமுகம் அவசியமில்லை. ‘பாசமலரை’ மிஞ்சுகிறது இவர்களது சகோதரப் பாசம். அதையும் தாண்டியது இவர்கள் இருவரின் தாயன்பு. அக்கா, தம்பியின் இந்தப் பாசப் பகிர்வு, அவர்களின் அம்மா லட்சுமிக்கான அன்னையர் தின சர்ப்ரைஸ்! 

குடும்பத்தோடு செலவிடும் நேரம்தான் எல்லாவற்றையும் விடப்பெரிசு!

‘`அம்மாவைப் பற்றிய பேட்டி... பேச முடியுமா?’’ - அநியாயத்துக்கு பிஸியாக இருக்கும் அனிருத்துக்கும், லண்டனில் வசிக்கிற அவர் அக்காவுக்கும் இன்ட்ரோ கொடுத்தோம். அடுத்த நிமிடமே இருவரிடமிருந்தும் ‘தம்ஸ் அப்’ எமோஜீஸ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘’அம்மாவுக்கு இது சர்ப்ரைஸோ இல்லையோ... எனக்கு நிஜமாவே சர்ப்ரைஸ். அம்மா இல்லாத உலகத்தைக் கற்பனைகூடப் பண்ணிப் பார்க்க முடியாது. ஆனாலும், அவங்களைப் பத்தி மனசுவிட்டுப் பேசவோ, அவங்களைப் பாராட்டவோ வாய்ப்புகள் கிடைச்சதில்லை. இத்தனை நாள் பேசாததுக்கு ஸாரி... இப்போ பேச வெச்சதுக்கு தேங்க்ஸ்...’’ - அன்பான ராட்சசியாக ஆரம்பிக்கிறார் வைஷ்ணவி.

‘`வீட்டுக்கு நான்தான் முதல் பொண்ணு. பிறந்ததுலேருந்தே அம்மாவுக்கும் எனக்குமான அந்த நெருக்கம் ரொம்ப ஸ்பெஷலானது. என் ஸ்டைல், சிந்தனைகள், என் கரியர்... இன்னும் என் வாழ்க்கையில ஒவ்வொரு செல்லிலும் செயலிலும் முழுமையா ஆக்கிரமிச்சிருக்கிறவங்க அம்மா. அவங்க சாயல் இல்லாம என்னால எதையும் செய்ய முடியாது.

நானும்  அனிருத்தும் அக்கா - தம்பிங்கிறதைத் தாண்டி, நல்ல ஃப்ரெண்ட்ஸ். தம்பின்னாலும் அவன் எப்போதும் என்கிட்ட அண்ணன் மாதிரிதான் நடந்துப்பான். பெரும்பாலான நேரம் ஒண்ணாவே இருந்திருக்கோம். எங்களுக்குள்ள சண்டையே வந்ததில்லை. அதனாலேயே எங்களை வளர்க்கிறதுல அம்மாவுக்குப் பெரிய கஷ்டங்கள் இல்லை. கல்யாணத்துக்கு அப்புறம் நான் வெளிநாட்டுல செட்டிலாகிட்டேன். ‘உனக்கு அனிருத்தான் ஸ்பெஷல். இப்பெல்லாம் உனக்கு என்னைவிட அவனைத்தான் அதிகம் பிடிக்குது’னு அம்மாவை அடிக்கடி கலாட்டா பண்ணுவேன். ஆனா, அம்மா அப்படிக் கிடையாதுங்கிறது எங்க மூணு பேருக்குமே தெரியும்.

எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேருந்து நான் அம்மாவை பிஸியான லேடியாதான் பார்த்திருக்கேன். குடும்பம், கரியர்னு ரெண்டையும் அவங்க பேலன்ஸ் பண்ற அந்த வித்தையைப் பார்த்துப் பலமுறை பிரமிச்சிருக்கேன். அத்தனை பிஸியான சூழல்லயும் ஒருநாளும், ஒரு நிமிஷம்கூட அம்மா பக்கத்துல இல்லையேன்னு நான் ஃபீல் பண்ணினதே இல்லை. நான் எதிர்பார்க்கிற நேரத்துல அம்மா என்கூடவே இருந்திருக்காங்க. 24 மணி நேரத்துல ஒருத்தரால இத்தனை வேலைகளைச் செய்ய முடியுமானு மிரளவைப்பாங்க.   

குடும்பத்தோடு செலவிடும் நேரம்தான் எல்லாவற்றையும் விடப்பெரிசு!

எந்த வேலையும் செய்யத் தோணாம, சோம்பேறித்தனமா ஃபீல் பண்ணும்போது நான் அம்மாவைத்தான் நினைச்சுப்பேன். உடனே எனக்குள்ள எனர்ஜி வந்துடும். அதுதான் அம்மாவோட பவர். இப்பவும் என் சித்தியோடு சேர்ந்து வெடிங் பிளானிங், கார்ப்பரேட் ஈவன்ட்ஸ் நடத்தறது, ஜாகிர் ஹுசைன், ஷங்கர் மகாதேவன் மாதிரியான மியூசிக் ஜாம்பவான்களுடைய ஷோஸ் நடத்தறது, அப்பாகூட அவர் வேலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக்கிறது, இதையெல்லாம் தாண்டி, அனிருத்தின் இன்டர்நேஷனல் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கிறதுனு அம்மா சூப்பர் பிஸி.

அம்மான்னா என் அகராதியில் பாசிட்டிவிட்டினுதான் அர்த்தம். எவ்வளவு மோசமான சூழலையும் பாசிட்டிவா எதிர்கொள்வாங்க. தன்னை பாசிட்டிவா வெச்சுக்கிறது மட்டுமில்லாம, தன்னைச் சுற்றி இருக்கிறவங்களையும் அப்படி வெச்சுக்கிறது தனித் திறமை. வம்பு பேசறது, அடுத்தவங்களைக் குறை சொல்றதெல்லாம் அம்மாவுக்குத் தெரியாத விஷயங்கள்.

விரும்பினதைப் படிக்கிற சுதந்திரத்தை அப்பா, அம்மா எங்களுக்குக் கொடுத் தாங்க. வீட்டுல எல்லோரும் சினிமா இண்டஸ்ட்ரியைச் சேர்ந்தவங்க. எனக்கும் மியூசிக்கும் டான்ஸும் பிடிக்கும். நான் சினிமாவுக்குள்ள நுழைய வீட்டுல எந்தத் தடையும் இல்லை. ஆனாலும், என் விருப்பம் வேறா இருந்தது. சட்டம் படிச்சேன். பிடிச்ச துறையைத் தேர்ந்தெடுக்கிறதும், அதுல நம்ம தனித்திறமையை நிரூபிக்கிறதும் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான முடிவுகள்னு புரியவெச்சதும் அம்மாதான்.

இன்னிக்கு என் கரியரையும் பார்த்துக்கிட்டு, எனக்குனு ஒரு குடும்பத்தையும் பார்த்துக்க முடியுதுன்னா அதற்கான நம்பிக்கையை விதைச்சதும் அம்மாதான். ‘அடுத்தவங்க என்ன நினைப்பாங்கன்றதைப் பத்தி யோசிக்காம, உனக்குச் சரினு பட்ட வாழ்க்கையை வாழ்ந்தா ஏமாற்றங்களும் விரக்திகளும் இருக்காது’னு அம்மா சொல்வாங்க. இன்னிக்கு நானும் அனிருத்தும் எங்க துறைகளில் நிறைவா இருக்கவும் அம்மா சொல்லித் தந்த அந்தப் பாடம்தான் காரணம்.

வீட்டுப் பறவையாகவே வளர்ந்துட்ட நான், கல்யாணத்துக்குப் பிறகு ஃபேமிலியை ரொம்ப மிஸ் பண்றேன்.  படிப்புக்காகக்கூட ஊர்விட்டு ஊர் போனதில்லை. இன்னிக்கு இருக்கிற டெக்னாலஜி வளர்ச்சியின் காரணமா உலகத்துல எந்த மூலையில உள்ளவங்ககிட்டயும் நினைச்ச நேரத்துக்குப் பேச முடியுது. வீடியோ காலில் நேர்ல பார்த்துப் பேச முடியுது. தூரம் ஒரு பிரச்னையா இருக்கிறதில்லைதான். அதைத் தாண்டின ஓர் ஏக்கம் இருக்கிறதையும் மறுக்க முடியாது. அம்மா ரொம்பவே எமோஷனல். நான் கல்யாணமாகிப் போனபோது அந்தப் பிரிவைத் தாங்க முடியாம அவங்க தவிச்சது எனக்கு நினைவிருக்கு. ஆனா, அது என்னை அப்செட் ஆக்கிடக்கூடாதுனு சீக்கிரமே தன்னை ஸ்ட்ராங்கா மாத்திக்கிட்டாங்க. இப்பெல்லாம் பிறந்த வீட்டுக்கு வரும்போது, நான்தான் அப்செட் ஆயிடறேன். எனக்குச் சமாதானம் சொல்ற அளவுக்கு அவங்க ஸ்ட்ராங்காயிட்டாங்க.

அம்மாவுக்கு அழகா டிரஸ் பண்ணப் பிடிக்கும். அவங்களுடைய டிரெஸ்ஸிங் ஸ்டைலையும் ஜுவல்லரி கலெக்‌ஷனையும்  நான் அவ்வளவு ரசிப்பேன். எனக்கு எங்கே வெளியில போகணும்னாலும் என் டிரஸ் பத்தியோ, நகைகள் பத்தியோ  யோசிக்கவே தேவையிருக்காது. அம்மாவோட கபோர்டுல அத்தனையும் இருக்கும். என் ஃப்ரெண்ட்ஸ்கூட ஏதாவது ஃபங்ஷனுக்குப் போகணும்னா எங்க வீட்டுக்கு வந்து  எடுத்து யூஸ் பண்ற அளவுக்கு அம்மாவோட கலெக்‌ஷன்ஸ் அவ்வளவு பிரபலம்!

நான் ஏற்கெனவே சொன்னதுபோல அம்மாதான் எனக்கு முதலும் முழுமையுமான இன்ஸ்பிரேஷன். அவங்களை மாதிரி பெர்ஃபெக்‌ஷனிஸ்ட்டா இருக்க முடியுமானு அடிக்கடி யோசிப்பேன். கல்யாணத்துக்குப் பிறகு முதல் முறையா அம்மா என்னைப் பார்க்க வீட்டுக்கு வந்தாங்க. நான் வீட்டை வெச்சிருக்கிற விதம், குடும்பத்தை நிர்வகிக்கிற ஸ்டைல்னு எல்லாத்தையும் பார்த்து அசந்துபோய் பாராட்டினாங்க.

குடும்பம் என்ற அமைப்புமேல அம்மாவுக்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு. புடவையோ, நகையோ, வேறு பொருள்களோ அம்மாவை சந்தோஷப்படுத்தாது. குடும்பத்தோடு செலவிடற நேரம்தான் அவங்களுக்கு எல்லாத்தையும்விடப் பெரிசு. அது எனக்கும் அனிருத்துக்கும் நல்லாவே தெரியும்.  அதனால முடிஞ்சபோதெல்லாம் அம்மாகூட இருக்கணும்னு ரெண்டு பேருமே ஆசைப்படுவோம். எங்க வீட்டுல எல்லோருமே சூப்பர் பிஸி. ஆனாலும், எங்க வீட்டுல என்ன விசேஷம்னாலும் குடும்பத்துல உள்ள எல்லோரும் ஒண்ணா கூடுவோம். எந்தக் காரணத்துக்காகவும் இதை விட்டுக்கொடுக்க மாட்டோம். அது அம்மா எங்களுக்குக் கத்துக்கொடுத்தது. இனி வரும் காலங்களிலும் குடும்பத்தையும் உறவுகளையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அதுதான் அம்மாவுக்கு நாங்க பண்ற நன்றிக்கடனா இருக்கும்’’ - உறுதிமொழியோடு உரையாடலை முடிக்கிறார் வைஷ்ணவி.

குடும்பத்தோடு செலவிடும் நேரம்தான் எல்லாவற்றையும் விடப்பெரிசு!

‘இன்று நான் இருக்கிற இடம் அம்மா தந்தது!’’

``எ
ன் வெற்றிகளுக்கும் வளர்ச்சிக்கும் காரணமான என் குடும்பத்துக்கு நான் எல்லா மேடைகள்லயும் நன்றி சொல்லத் தவற மாட்டேன். அது சும்மா சம்பிரதாயத்துக்காகச் சொல்றதில்லை. நான் இன்னிக்கு இருக்கிற இந்த இடம் என் அம்மா தந்தது’’ என்று உணர்ச்சிபொங்கப் பேச ஆரம்பித்தார் அனிருத்,

‘`நான் குழந்தையாக இருக்கும்போதே எனக்குள்ள இசை ஆர்வம் இருக்கிறதைக் கண்டுபிடிச்சதோடு, அதுதான் எனக்கான வாழ்க்கையா இருக்கும்னு  சரியான பாதையில என்னைக் கைபிடிச்சுக் கூட்டிட்டுப்போன முதல் நபர் என் அம்மாதான். அவங்க வாங்கிக் கொடுத்த பொம்மை கீபோர்டை நான் தட்டினதை வெறும் விளையாட்டுத்தனமா பார்க்காம, என் திறமையா பார்த்து, மியூசிக் பயிற்சியில சேர்த்துவிட்டாங்க.

மேல் படிப்புக்காக என்னை சிங்கப்பூர் அனுப்பறதா அம்மாவும் அப்பாவும் பிளான் பண்ணியிருந்தாங்க. அவங்களுக்கு என்னை இன்வெஸ்ட்மென்ட் பேங்கரா பார்க்கணும்னு ஆசை. ஆனா, நான் மியூசிக்தான் என் எதிர்காலம்னு உறுதியா இருந்தேன்.  ‘சிங்கப்பூர் வேணாம், இங்கேயே சினிமா மியூசிக் ட்ரை பண்றேனே’னு  என் ஆசையை முதல்ல அம்மாகிட்டதான் சொன்னேன்.  என் இசைத்திறமையை எனக்கும் முன்னால கண்டுபிடிச்சவங்களாச்சே... அப்பாகிட்ட பேசி, சம்மதம் வாங்கித் தந்தாங்க. அப்போ அவங்க எனக்குச் சொன்ன ஒரே அட்வைஸ்... ‘வெற்றிகளைத் தலையில ஏத்திக்கவோ, தோல்விகளுக்கு பயப்படவோ கூடாது’ என்பதுதான். இன்னிக்கு வரைக்கும் அப்படித்தான் இருக்கேன்.

நமக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு ஃப்ரெண்டு, நம்ம வாழ்க்கையில எப்போதும் நம்ம கூடவே இருக்கிறது எவ்வளவு இனிமையான விஷயம்... அம்மா அப்படித்தான் எனக்கு பெஸ்ட் ஃப்ரெண்டு’’ என்கிறார் அனிருத், மன நிறைவுடன்.

எங்க அம்மாதான் பெஸ்ட்! வாசகிகள் எழுதிக் குவித்த உணர்வுகளின் பதிவுகள் பக்கம் 94-ல்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism