Published:Updated:

நல்ல விஷயங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்! - ஹரிணி எஸ்.ராகவன்

நல்ல விஷயங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்! - ஹரிணி எஸ்.ராகவன்
பிரீமியம் ஸ்டோரி
நல்ல விஷயங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்! - ஹரிணி எஸ்.ராகவன்

உலகெங்கும் தமிழ்ப் பாடல்கள்கு.ஆனந்தராஜ்

நல்ல விஷயங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்! - ஹரிணி எஸ்.ராகவன்

உலகெங்கும் தமிழ்ப் பாடல்கள்கு.ஆனந்தராஜ்

Published:Updated:
நல்ல விஷயங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்! - ஹரிணி எஸ்.ராகவன்
பிரீமியம் ஸ்டோரி
நல்ல விஷயங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்! - ஹரிணி எஸ்.ராகவன்

ன் இசையை ரசிக்கும் மக்களுக்கு, அந்தப் பாடல்களின் வழியாக விழிப்பு உணர்வு விஷயங்களையும் சேர்த்துக் கடத்துகிறார், ஹரிணி எஸ்.ராகவன். அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்ப் பெண்ணான இவர், பாடகி மற்றும் வயலின் கலைஞர். இவருடனான வீடியோ உரையாடலிலிருந்து...

உங்க இசைப் பயணம் தொடங்கியது எப்போது?

பூர்வீகம், சென்னை. நாலு வயசுல கர்னாட்டிக் மியூசிக்கும், ஆறு வயசுல வயலினும் கத்துக்க ஆரம்பிச்சேன். கோயம்புத்தூர்ல இன்ஜினீயரிங் படிச்சப்போ பல ஊர்களிலும் கச்சேரிகள் செய்தேன். பிறகு சென்னையிலுள்ள ஐ.டி கம்பெனி ஒன்றில் மூணு வருஷங்கள் வேலை பார்த்தேன். அந்த இடைப்பட்ட காலத்துல, ஜெயா டி.வி ‘ஹரியுடன் நான்’ நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பாடினேன். தமிழ், மலையாள சினிமாக்களில் பாடினேன்; வயலின் வாசிச்சேன்.

நல்ல விஷயங்களை மக்கள்கிட்ட கொண்டு போகணும்! - ஹரிணி எஸ்.ராகவன்

இசைத் துறையே கரியரானது எப்படி?

ஐ.டி வேலையில நல்ல சம்பளம் கிடைச்சது. ஆனா, மனசுக்குப் பிடிச்ச மியூசிக் ஃபீல்டையே என் கரியராக அமைச்சுக்க விருப்பப்பட்டேன். அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில் இருக்கும் புகழ்பெற்ற ‘பெர்க்லி காலேஜ் ஆஃப் மியூசிக்’ல, அண்டர் கிராஜுவேஷன் கோர்ஸ் படிச்சேன். எனக்கிருந்த மியூசிக் பற்றிய புரிந்துணர்வு, அதன் பிறகுதான் பல மடங்கு விரிவடைஞ்சது.

ஏன் புது இசைக்குழு?

பெர்க்லி காலேஜ்ல படிச்சு முடிச்சதும், ‘ரினி’னு (Rini) ஒரு மியூசிக் பேண்டு ஆரம்பிச்சேன். உலகின் பல நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்களோடு சேர்ந்து பணியாற்றணும் என்பது என் விருப்பம். அதன்படி இப்போ என் பேண்டில், வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நாலு பேர், ட்ரம்மர், பேஸ் கிட்டாரிஸ்ட், கிட்டாரிஸ்ட்னு வொர்க் பண்றாங்க. கர்னாட்டிக், ஜாஸ், ராக், எலெக்ட்ரானிக் மியூசிக் வகைகள் பாடுவதும், வயலின் வாசிப்பதும் என் பணி. நாங்க பல ஆல்பங்களை ரிலீஸ் பண்ணியிருக்கிறோம். நிறைய நாடுகள்ல கச்சேரிகளும் செய்துகிட்டு இருக்கிறோம்.

உங்கள் நிகழ்ச்சிகளில் என்ன புதுமை?

இசையை ரசிக்கிற மக்கள்கிட்ட, நாலு நல்ல விஷயங்களைக் கொண்டுபோய் சேர்க்க நினைச்சேன். என் பாடல்களில் பெண்கள் முன்னேற்றம், பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகள், அறிவியல் விழிப்பு உணர்வுத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அந்தப் பாடல்களை நானே எழுதுவேன். வெளிநாட்டுக் கச்சேரிகள்லயும் தமிழிலேயே  நிறைய பாடல்களைப் பாடுவேன். அதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா வந்திருந்தேன். அப்போ சென்னை உள்ளிட்ட மூணு நகரங்கள்ல கச்சேரி பண்ணினேன். உலகம் முழுக்கச் சுத்தினாலும், தாய் மண்ணில் கிடைத்த வரவேற்பு ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றிய தருணங்கள் எப்படி இருந்தன?

ஐ.டி கம்பெனியில வொர்க் பண்ணிட்டு இருந்தப்போ, ரஹ்மான் சார் இசையமைச்ச டொயோட்டா கார் விளம்பரத்துல பாடினேன். அவர், டாக்டர் பட்டம் வாங்க 2014-ம் வருஷம் அமெரிக்கா வந்திருந்தார். அப்போ அவர் பேண்ட்ல பாடினேன். யுனைடெட் நேஷன் ஜெனரல் அசெம்பிளியில், 2016-ல் எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் நூற்றாண்டு விழா நடந்தது. அப்போ ரஹ்மான் சாரின் ட்ரூப்பில் நானும் பாடினேன். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவுல ரஹ்மான் சார் நிகழ்ச்சி பண்ணினார். அதில் லீட் சிங்கரா பல பாடல்கள் பாடினேன்; வயலினும் வாசிச்சேன். சாருடன் ஒவ்வொரு முறை வொர்க் பண்ணும்போதும், புதுப்புது விஷயங்களைக் கத்துக்கலாம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!