தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

ஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு!

ஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு!
பிரீமியம் ஸ்டோரி
News
ஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு!

ஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு!

விடுமுறை நாளில் நீங்கள் அடிக்கடி செல்லும் இடம் எது?

`கடைக்குட்டி சிங்கம்’ தீபா, நடிகை

ஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு!

இப்போ, கண்ணாலமாகி மாப்பிள்ளை வீட்டுல இருக்கோம்ல... அதனால ஒருநாள், ரெண்டு நாள் லீவ் கெடச்சாலும் அந்த லீவை சாக்காவெச்சு எங்க ஊருக்கு ஓடிடுவேன். அங்கே, ஒரு வேலை செய்ய வேணாம். அம்மாவே சோறு ஆக்கிடுவாங்க. இவ்ளோ வயசாயிட்டு எனக்கு, இப்பவும் எங்க அம்மாதான் எனக்கு சோறு ஊட்டிவிடுவாக. அப்படி அம்மா கையால சாப்பிடுறதுன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்காவே ஊருக்குப் போகணும்னு ஆசைப்படுவேன். இங்கேயும் எங்க வீட்டுக்காரர்தான் சோறு செஞ்சு குடுக்குறாரு. அவுக என்னதான் நம்மளை ராணி மாதிரி பார்த்துக்கிட்டாலும், நம்ம பொறந்த வீட்டுல இருக்கிற மாதிரி வராதுல்ல!

10 நாள்கள் விடுமுறை கிடைத்தால் என்ன செய்வீர்கள்?

சுகிர்தராணி, கவிஞர்

ஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு!

அடடா... 10  நாள்கள் விடுமுறையா? கேட்கவே நன்றாக இருக்கிறதே! அப்படி விடுமுறை கிடைத்தால், கைவசம் ஒரு திட்டம் இருக்கிறது. மூன்றுவேளை உணவையும் யாராவது ஊட்டிவிட்டு என்னை கவனித்துக்கொண்டால், இருக்கின்ற இடத்தைவிட்டு அசையவே மாட்டேன். பாதி எழுதி முடித்திருக்கும் நாவலை முழுவதுமாக எழுதி முடித்துவிடுவேன்.

நீங்கள் சிரமப்பட்டு வாங்கிய விடுமுறை எது?

ஷாபனா பர்வீன், நிகழ்ச்சித் தொகுப்பாளர்

ஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு!

எப்போ மீடியா பக்கம் வந்தேனோ, அப்பவே சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறதெல்லாம் நின்னுபோச்சு. ஆபீஸ்ல, `எனக்குக் காய்ச்சல்’னு சொன்னாகூட நம்ப மாட்டாங்க. `வயிற்று வலி’ன்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்க. உடனே, மாத்திரையை வாயில போட்டு அதை ஒரு வீடியோ எடுத்து, அந்த மாத்திரை கவரையும் வீடியோ எடுத்து, `எனக்கு உடம்பு சரியில்லை, லீவ் வேணும்’னு சொல்வேன்.

இதையெல்லாம் ரொம்ப சீரியஸா எடுத்து அலசி ஆராயாதீங்க. லைவ் பண்றதால அவ்வளவு சீக்கிரம் லீவ் கிடைக்காது. அதனால, நான் எடுக்கும் ஒவ்வொரு லீவும் கஷ்டப்பட்டு வாங்கறதுதான்!

விடுமுறை நாளைக் கொண்டாட, உங்களுக்கு மிகவு‌ம் பிடித்த சுற்றுலாத்தலம் எது?

அனிதா உதீப், இயக்குநர்

ஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு!

எனக்கு ஹாங்காங்னா ரொம்பப் பிடிக்கும். அங்கே மலை, நதின்னு சுற்றியிருக்கிற இடம் எல்லாமே பார்க்க நல்லா இருக்கும். குழந்தைங்க நல்லா கொண்டாட டிஸ்னி லேண்டுக்கு கூட்டிட்டுப் போவோம். குடும்பமா ஹாங்காங் போனோம்னா, எல்லாரும் நல்லா செமத்தியா என்ஜாய் பண்ணிட்டு வரலாம். எப்படியும் வருஷத்துக்கு ரெண்டு தடவையாவது ஹாங்காங் போயிடுவோம்!

இந்த ஆண்டு உங்கள் சுற்றுலாத் திட்டம் என்ன?

ராஜலட்சுமி செந்தில்கணேஷ், பாடகி

ஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு!

`கோடைக்காலங்கள்ல மனுஷங்க சுற்றுலா மாதிரி வெளிய போவாங்க' என்கிறதையே சமீபத்துலதான் தெரிஞ்சுக்கிட்டோம். நாங்க, இதுவரைக்கும் இந்த மாதிரியெல்லாம் திட்டம் போட்டு எங்கேயும் போனது கிடையாது. அதுக்கு எங்க வாழ்க்கையும் ஒரு காரணம். ஒவ்வொரு காலத்துலயும் எங்களை நிலைநிறுத்திக்கிறதுக்காகவே ஓடிட்டு இருந்ததால, சுற்றுலா பற்றியெல்லாம் நாங்க யோசிச்சதே இல்லை. லீவ் விட்டவுடனே என் வீட்டுக்காரர், அவர்கூட பிறந்தவங்க, என்கூட பிறந்தவங்கன்னு எல்லாரையும் கூட்டிக்கிட்டு பெரிய குடும்பமா ரெண்டு நாள்கள் ஊட்டி, இல்லைனா கொடைக்கானல் போயிட்டு வரலாம்னு ஐடியா பண்ணியிருக்கோம்!

விடுமுறையில் விரும்பி வாங்கும் பொருள் எது?

சுதா, வழக்கறிஞர்

ஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு!

வழக்கறிஞர்களுக்கும் காவல் அதிகாரிகளுக்கும் மருத்துவர்களுக்கும் விடுமுறை என்கிற ஒரு விஷயமே, திடீர் அதிர்ஷ்டம் மாதிரிதான் கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் விடுமுறை நாளில், காதி கிராஃப்ட்டில் இருக்கும் காட்டன் துணிகளை விரும்பி வாங்குவேன்.

இந்தக் கோடைக்காலத்தில் நல்ல டிசைன் டிசைனான காட்டன் துணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அவற்றிலிருந்து அழகாகத் தேர்ந்தெடுக்க வேண்டியதுதான் அடுத்த வேலை!

நம்முடைய லைஃப்ஸ்டைலுக்கு காட்டன் துணிகளே பொருத்தமாக இருக்கும். அதனால் எப்பவும் என்னுடைய பிரியம் காட்டன் துணிகள் மீதுதான்!

விடுமுறை என்றதும்  முதலில் நினைவுக்கு வருவது என்ன?

கே.வி.சைலஜா, எழுத்தாளர்

ஏழுக்கு ஏழு: விட்டாச்சு லீவு!

வேலை, பரபரப்பு என எல்லாவற்றுக்கும் ஓர் ஓய்வு விடுப்பதுதான் விடுமுறை எனத் தோன்றுகிறது. ஆறு நாள்கள் உழைத்து, ஏழாவது நாளாக ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதையெல்லாம் விடுமுறை என்று சொல்லிவிட முடியாது. குறிப்பாக பெண்களுக்கு கிடையவே கிடையாது. பெண்களுக்கு அன்றுதான் வீட்டில் அதிகமான வேலைகள் இருக்கும். 10 நாள்கள், ஏன்... ஒரு மாதம்கூட தொடர்ந்து வேலைபார்க்கலாம். ஆனால், உடலும் மனதும் சோர்வுறும்போது ஓய்வுகொடுத்துவிட வேண்டும். அதுதான் உண்மையான விடுமுறை!

-பா.தினேஷ்குமார்

ஓவியங்கள்: ரமணன்